”அந்த பேங்க் என்ன ஆச்சு? இன்னிக்கு ஏறுமா.. வச்சுக்குவோமா, வித்திருவோமா?”
இந்த ஷேர் மார்க்கெட் குரலுக்குச் சொந்தக்காரர் 65 வயதான முத்துக்கருப்பாயி ஆச்சி. ஆண்களே அஞ்சி ஒதுங்கும் பங்குச் சந்தையில் அநாயாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் ஆச்சி.
“ ஒரு பெண்ணாக இது எப்படி சாத்தியம்?” என்று பிரமிப்பு மாறாமல் கேட்டால் அமைதியாய்ப் புன்னகைக்கிறார் ஆச்சி.
”எந்த வயதானால் என்ன? ஆண், பெண் என்று இதில் வித்யாசம் என்ன?” என்று எதிர்க்கேள்வி கேட்டு அவராகத் தொடர்கிறார்.
”அடிப்படையிலேயே நம் பெண்களுக்கு வியாபாரம்., தொழில் என்பதெல்லாம் உள்ளுக்குள்ளேயே ஊறி இருக்கிறது. பருப்பு டப்பாவில் சேமித்து வைப்பது., பால் கணக்கை சுவற்றில் எழுதி வைப்பது., அக்கம் பக்கத்தில் வட்டிக்குக் கொடு்து இதெல்லாம் பெண்கள் காலங்காலமாக செய்து வரும் பிஸினஸ் விஷயங்கள்தான். அதையே இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணினால் பங்குச்சந்தை வரை விளையாடலாம். ஷேர் மார்க்கெட்டெல்லாம் ரிஸ்கானதாச்சே.. அதைச் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ரிஸ்க் எல்லாவற்றிலும் உண்டு. பங்குச் சந்தையும் அப்படிப்பட்ட ரிஸ்க்தான்”.
ஷேர் மார்க்கெட் நிலவரங்களை எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?
”பங்குககள் ஏற்றத்தை தினம் என்.டி.டி.வி., சி.என்.பி.சி., யில் பார்த்து தெரிந்து கொள்கிறேன். அவ்வப்போது ஃபோன் மூலமாக ஆர்டர் கொடுத்து வாங்கி விற்று வருகிறேன். போன சில வருடங்களில் நல்ல விலையில் வாங்கிய பங்குகள் திடீரென இறங்கி விட்டது. நான் உடனே பயந்து போய் அவற்றை விற்றுவிடவில்லை. அப்படியே வைத்திருந்து அடுத்த் ஆண்டுகளில் ஏற்றம் வந்தபோது விற்றுப் பணம் பார்த்தேன். இந்தக் காத்திருப்பும்., சரியான நேரத்தில் காய் நகர்த்துகிற புத்திசாலித்தனமும்தான் இதில் மூலதனம். இது பெண்களிடம் நிறைய உண்டு”.
"நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்போல் தெரிகிறதே..?”
”ஆமாம். எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். நாம் இருக்கிற இடம் சரியோ, தவறோ எதுவாக இருந்தாலும் ‘ கடவுளின் கருணை இல்லாமல் எதுவுமே இல்லை” என்பது என் கருத்து. நகரத்தார் வழக்கப்படி ( குறிப்பிட்ட வயதில் வானப்பிரஸ்தம் போவதுபோல) ‘உபதேசம் கேட்பது” என்று ஒரு தர்மம் இருக்கிறது. அதன்படி உபதேசம் கேட்டுவிட்டு., தினமும் காலையில் நீராடி., இறையருள் வேண்டி மந்திரம் சொல்லு விபூதி தரிப்பேன். அதன்பின்தான் உணவு மற்றவை எல்லாமே.”.
”உங்களுடைய வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”
“தன்னம்பிக்கை..! எல்லோரும் சொல்வதுதான் இது ஆனாலும் இதுதான் என் வாழ்வில் உண்மை.
சின்ன வயதில் டான்சில் பிரச்சனைக்காக செய்த ஆபரேஷன் என் காது நரம்புகளைப் பாதித்து கேட்கும் திறனில் குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை ஆபரேஷன் செய்து காது சரியாகக் கேட்கவில்லை. அப்போதே நான் என் மீது நம்பிக்கை இழக்கவில்லை. பேச்சும் சொல்லும் என்னிடம் அழுத்தம் திருத்தமாக இருக்கும். என்னை நானே தாழ்வாக எப்போதும் எடை போட்டதில்லை. எப்போதும் கம்பீரமாகத்தான் என்னை நான் உணர்வேன். காது கேட்கும் கருவியைப் பொருத்தியபின் இன்னும் தன்னம்பிக்கை அதிகமாகிவிட்டது.”
”நீங்கள் எழுத்தார்வம் கொண்டவர் என்றும் கேள்விப்பட்டோமே..?”
”இறைவன் துதிப்பாடல்கள்., மரபுக்கவிதைகள்., திருமண வாழ்த்துப்பாக்கள் எழுதுவேன். இப்போது சும்மாவின் அம்மா என்ற வலைத்தளம் ஒன்றும் தொடங்கி இருக்கிறேன். ஃபேஸ்புக்கிலும் நண்பர்களோடு உரையாடிக்கொண்டு, என் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கிறேன். “
டிஸ்கி:- இந்தப் பேட்டி ஆகஸ்ட் 2011 இவள் புதியவளில் வெங்கட் சபா என்ற பெயரில் வெளிவந்தது. இதை டைரக்டர் மனோபாலா தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். :)
""என்னை நானே தாழ்வாக எப்போதும் எடை போட்டதில்லை. எப்போதும் கம்பீரமாகத்தான் என்னை நான் உணர்வேன்""
பதிலளிநீக்குதன்னபிக்கை அனைவருக்கும் வேண்டும் என்பது அழகா சொல்லிருக்காங்க....
பதிவுக்கு நன்றி...
//இந்தக் காத்திருப்பும்,சரியான நேரத்தில் காய் நகர்த்துகிற புத்திசாலித்தனமும்தான் இதில் மூலதனம்.//
பதிலளிநீக்குதன்னம்பிக்கையும், அசாத்ய துணிவுள்ள பெண்மணி தான், தங்களைப்போலவே. பாராட்டுக்கள்.
vgk
//தன்னம்பிக்கை..! எல்லோரும் சொல்வதுதான் இது ஆனாலும் இதுதான் என் வாழ்வில் உண்மை.//
பதிலளிநீக்குஅந்த உண்மையை அனைவருக்கும் உணர்த்தும் நல்ல பகிர்வு தேனம்மை.
அட சூப்பரா இருக்கே இந்த சாதனைக்கு வயது ஒரு தடையல்ல
பதிலளிநீக்குஆச்சி அவர்களின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
wow, this is really great.
பதிலளிநீக்குis she from karaikkudi...???
the name karaikkudi bring special smile to me ...it is birth place.
Thanks to Ayesha Akka (Didi), visited from her blog links
நன்றி சின்ன தூரல்
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி சசி
நன்றி ஆயிஷா அபுல்
நன்றி ஸ்ரீகணேஷ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அட, உங்க அம்மாவா? அதான் நீங்க பதினாறடி பாயுறீங்க, சும்மாவா!!
பதிலளிநீக்குஇருவருக்குமே வாழ்த்துகளும், நன்றியும். வியக்க வைக்கும் உதாரணங்கள்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆச்சியின் தந்தை 1930-களிலேயே ஸ்டாக் ப்ரோக்கர் ! பங்குச் சந்தையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல்
பதிலளிநீக்குஇருக்கும் மூத்த மகன் அருன் பற்றி சொல்லவில்லையே . . . . .
நன்றி ஹுசைனம்மா.
பதிலளிநீக்குநன்றி நாகப்பன்.இது ஆச்சி பற்றிய பேட்டி மட்டுமே.
அவரைப் பற்றி இன்னொரு இடுகையில் பகிர்வேன்.