எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சிலையாய் நீ. பூவரசியில்.

சிலையாய் நீ..
*************************

காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ

வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்


வருடாவருடம்
பூமாலை சுமந்து
காய்ந்த மாலைகளால்
காய்ந்து கருத்துக்
கிடக்கின்றன உன்
கழுத்தும் முன் சட்டையும்

பேருந்தில்
செல்லும்போதெல்லாம்
பாவமாய்க் கிடப்பாய்
உன் ஆயுள் தண்டனையோ
இந்த சிலை வடிவம்..

வரிவரியாய்
ரசனையோடு
வடிக்கப் பட்டிருந்தாலும்
அவ்வப்போது சாயமிழந்து
பரிதாபமாய்..

யார்யாரோ
கோபமுற்றால்
கட்டாரியெல்லாம்
உன் தலையில்..
பின் நீ முகமற்று
சாக்கு மூடி..

அடுத்த ஜென்மமெடுத்து
அரசாள நேர்ந்தால்
சிலை வைத்து
சீரழிக்காதீர் என்னை
என சட்டம் இயற்றிவிடு..
சாலையெல்லாம் தப்பிக்கும்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூலை 25, 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.

17 கருத்துகள்:

  1. ரொம்ப அருமை.
    'கைதட்டி, காலில் விழுந்த எந்த தொண்டனும் குடை (கூட) பிடிக்காமல்' வரியும், 'பாவமாய்க் கிடப்பாய், ஆயுள் தண்டனையோ' வரியும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. //அடுத்த ஜென்மமெடுத்து
    அரசாள நேர்ந்தால்
    சிலை வைத்து
    சீரழிக்காதீர் என்னை
    என சட்டம் இயற்றிவிடு..//

    ஆமாம், நிச்சயம் செய்வார்கள்:))! நல்ல கவிதை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. சிலைகளின் மௌனக்குரலை உங்க கவிதை எதிரொலிக்குது தேனக்கா.. அருமை :-)

    பதிலளிநீக்கு
  4. வரிவரியாய்|ரசனையோடு|வடிக்கப் பட்டிருந்தாலும்|அவ்வப்போது சாயமிழந்து|பரிதாபமாய்..|யார்யாரோ|கோபமுற்றால்|கட்டாரியெல்லாம்|உன் தலையில்..
    -நிதர்சனத்தைச் சொல்லும் வரிகள். சிலைகள் வைப்பது தேவைதானா என்று எனக்கும் தோன்றியதுண்டு. கவிதை அருமை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  5. //
    யார்யாரோ
    கோபமுற்றால்
    கட்டாரியெல்லாம்
    உன் தலையில்..
    பின் நீ முகமற்று
    சாக்கு மூடி..
    //
    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  6. அக்கா... உண்மை நிலையை அழகிய கவிதையாய் ஆக்கியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. //பேருந்தில்
    செல்லும்போதெல்லாம்
    பாவமாய்க் கிடப்பாய்
    உன் ஆயுள் தண்டனையோ
    இந்த சிலை வடிவம்..//

    ஆயுள் தண்டனையே தான். அருமையான கவிதை.vgk

    பதிலளிநீக்கு
  8. உன் ஆயுள் தண்டனையோ
    இந்த சிலை வடிவம்..

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மனிதர்களும் இப்படித்தான் சில சமயம் சிலைபோல அனைத்தும் தாங்கி இரு(க்க வேண்டியிரு)ப்பதனால், சிலைகளை அப்படி வைத்திருக்கின்றனரோ?

    பதிலளிநீக்கு
  10. காகங்கள் எச்சமிட
    கழுகுகள் உன் தோளமர
    தனியனாய்
    சாலை ஓரமெல்லாம்
    கை நீட்டியபடி நீ
    ஆரம்பமே அருமையாக இருக்கிறது. நிஜம் உணர்த்தும் நல்ல கவிதை!

    பதிலளிநீக்கு
  11. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ராஜா

    நன்றி சாரல்

    நன்றி கணேஷ்

    நன்றி சிநேகிதி

    நன்றி அம்பலத்தார்

    நன்றி ராஜா

    நன்றி குமார்

    நன்றி ஆயிஷா

    நன்றி கோபால் சார்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி நம்பிக்கைப் பாண்டியன்.

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  13. இந்திரன் சந்திரன் படத்தில் கடைசியில் மேயரின் சிலையில் காகம் எச்சம் இடும் காட்சி நினைவிற்கு வருகிறது.

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  14. நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...