எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

துறைமுகத்தில் மகளிர் தினத்தில்..

மகளிர் தினத்தில் போர்ட் ட்ரஸ்டில் சிறப்புப் பேச்சாளராய்ப் பேச அழைத்தார் அதன் செகரட்டரி தனலெக்ஷ்மி. முதலில் தயக்கமாய் இருந்தாலும் என்னை சஜஸ்ட் செய்தவர் என் அன்பிற்கினிய தோழி விஜயலெக்ஷ்மி ஜெயவேலு என்பதால் சம்மதித்தேன். ஏஜிஸ் ஆடிட்டிங்கில் பணிபுரியும் இவர் ஃபேஸ்புக்கில் கீதாஜீவனுடனான லேடீஸ் ஸ்பெஷல்( குமரன் கல்யாண மண்டபம்) சுய உதவிக்குழுவில் பேசியது., கவிதைச் சங்கமத்தில் ( தேவநேயப்பாவாணர் அரங்கம்., ) பேசியது., கலைஞர் தொலைக்காட்சி செய்தியில் கவிதைச் சங்கமம் பற்றி கருத்துக் கூறியது., சேரன் மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடலில் பேசியது., கான குஹா ( இசைப்பள்ளி ) ஆண்டு விழாவில் பேசியது என மைக் மோகன் ரேஞ்சுக்கு மைக்குடன் இருக்கும் ஃபோட்டோக்களைப் பார்த்து நான் கட்டாயம் வரவேண்டும் என கூறினார்.


எப்போது மேடை ஏறினாலும் ஒரு சின்ன பதற்றம் இருக்கும். சரியாக நினைத்ததை எல்லாம் சொல்லி முடிக்க வேண்டுமே என்று. அன்று அதிகமாய் இருந்தது. துறைமுகப்பேரதிபருடன் சரிசமமாக அமர்ந்து பேசப்போகிறோமே என்ற டென்ஷனும் சேர்ந்து கொண்டது. காலையில் அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட் சென்று சாந்தாம்மாவை வேறு கண்டு வாழ்த்திவிட்டு., கான்சர் பற்றிய ஒரு பேட்டியை எடுத்து முடித்து விட்டு போர்ட் ட்ரஸ்ட் சென்றேன்.

துறைமுகப் பேரதிபர் அதுல்ய மிஸ்ரா., யூனியன் தலைவி ப்ரதீமா ஆகியோருடன் குத்து விளக்கை ஏற்றினேன். ரெபேக்கா தொகுத்து வழங்க முதலில் அதுல்ய மிஸ்ரா பேசினார்., மிக அருமையான தமிழ்., காதில் தேனும் பாலும் பாய்ந்து கொண்டிருந்தது. என் அன்பிற்கினிய சகோதரிகளே என அவர் ஆரம்பித்ததுதான் தாமதம் கரகோஷம் அடங்க 5 நிமிடம் ஆனது. அழகும் அறிவும் ஜனவசியமும் பொருந்திய ஒரு பர்சனாலிட்டி அவர். போர்ட் ட்ரஸ்டில் தாங்கள் செய்து வரும் பணிகள் குறித்தும் செய்யப்போகும் பணிகள் குறித்தும் பேசினார். அடுத்து ப்ரதீமா பேசினார். யூனியன் தலைவிகளுக்கே உரித்தான கம்பீரமான குரல். தான் கேட்க நினைத்தவற்றை எல்லாம் மேடையிலேயே கேட்டார். அதற்கு துறைமுகப்பேரதிபர் தான் முடிந்தவரை செயல்படுத்துவதாக கூறினார்.

அடுத்து சிறப்புப் பேச்சளராக அழைக்கப்பட்டிருந்த நான் பேசத்துவங்கினேன்.என் பேச்சின் சாராம்சம்.. ..

என் அன்பிற்கினிய சகோதரிகளே.. இந்த மகளிர் தினத்தில் நூற்றுக்கணக்கில் சக்தியின் வடிவங்களாக அமர்ந்திருக்கும் உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என் சகோதரிகளைக் காண வரும்போது எளிமையாக வரவேண்டும் என்பது என் விருப்பம்.


மிக முக்கியமான பிரச்சனைகளாக இந்த மகளிர் தினத்தில் சொல்ல விரும்புவது மகளிரை இழிவு படுத்தும் டி வி விளம்பரங்களைப் புறக்கணியுங்கள். டி வி சீரியல்களுக்கு அடிக்ட் ஆவதை தவிருங்கள். நீங்கள் நினைத்தால் இந்த விளம்பரங்களுக்கு எதிர்ப்புக் காண்பித்தால் வெளியிடுவது தடை செய்யப்படும். பாடி ஸ்ப்ரே போட்டால் உடனே பெண்கள் பின்னாலேயே வந்து விடுவார்கள் என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம். மோசமாக பெண்ணைச் சித்தரிக்கும் எந்த விஷயத்தையும் ஆதரிக்காதீர்கள். பலர் சேர்ந்து சொல்லும்போது ஒரு விஷயம் கவனம் பெறுகிறது.


இரண்டாவதாக நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்கிறீர்கள்., அதை டெப்பாசிட்., இன்சூரன்ஸ்., தங்கம்., ரியல் எஸ்டேட்டில் போடுவதைப் போல ஒரு பங்கை நம் நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யுங்கள்.


இங்கே ஸ்போர்ட்ஸில் ஈடுபடும் பெண்களைப் பார்த்தேன். அதுபோல் அரசியலிலும் ஈடுபடும்., கருத்துக்கூறும் அளவு உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு முறையாவது செய்திகளைப் பார்ப்பது அவசியம்.


குடும்பத்துக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். எல்லாவற்றிலும் ( வீடு ., கார்., உயர்கல்வி., ) உங்கள் பங்கு இருக்கிறது. எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள். உங்கள் உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு கலை பிடித்தமானதாய் இருக்கலாம். அதை இப்போதே செயல்படுத்தத்துவங்குங்கள். ஒரு பெயிண்டிங்., பாட்டு கற்றுக் கொள்ளல்., ஒரு விளையாட்டு., இது போல. நீங்கள் ஒரு தனித்துவம் ( INDIVIDUALITY) வாய்ந்தவர். உங்களுக்கென்றும் வாழுங்கள்.



--- இவ்வாறு கூறி அனைவருக்கும் நன்றி கூறியவுடன் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினோம். பின் வெளியே வரும்போது லிஃப்டில் ஒரு பெண் வந்து கையைப் பிடித்துக் கொண்டு நான் டான்ஸ் நல்லா ஆடுவேன். ஒரு டான்ஸ் பள்ளி ஆரம்பித்து அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க ஆசை. அடுத்த முறை நீங்க என்னைப் பார்க்கும்போது நான் எனக்காகவும் என் ஆசைகளுக்காகவும் கூட வாழத் துவங்கி இருப்பேன் என்றார். மிகுந்த சந்தோஷமா இருந்தது.


டிஸ்கி:- மார்ச் 8 இல் போட வேண்டிய பதிவை ஏன் இப்போ போடுறீங்கன்னு கேக்கிறீங்களா..( நிறைய மறந்து வேறு போய் விட்டது.) ஏன்னா மார்ச் 8 இல் இருந்து போர்ட் ட்ரஸ்ட் ஃபோட்டோ கிராஃபரிடம் ஃபோட்டோ கேட்டு கேட்டு போராடி., ப்ரதிமா., தனா எல்லாரும் கேட்டும் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லையாதலால் இவ்வளவு லேட்டாயிருச்சு மக்காஸ்.... (துறைமுகப் பேரதிபர்., யூனியன் லீடர் ப்ரதீமா., போர்ட் ட்ரஸ்ட் மருத்துவர்., மற்றும் உயரதிகாரிகள் சூழ இருந்த படம்) சரி ரைட்டு ஆறு மாசம் ஆச்சு.. கிடைத்தால் போடுறேன். . :))

14 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள். உங்கள் உரை வெகு அருமை.

    பதிலளிநீக்கு
  2. லேட்டானா என்ன, எல்லாருக்கும் எப்பவும் தேவைப்படுகிற அறிவுரைகள்தானே? வாழ்த்துகள்க்கா.

    பதிலளிநீக்கு
  3. //துறைமுகப்பேரதிபருடன் சரிசமமாக அமர்ந்து பேசப்போகிறோமே என்ற டென்ஷனும் சேர்ந்து கொண்டது. //

    ’சும்மா’ ஏதாவது சொல்லாதீர்கள்.

    எழுத்துலகப் பேச்சுலகப் பேரதிபரான உங்களுக்கு, அவருக்கு எதிராக அமர்ந்து பேச என்ன பெரிய டென்ஷன் இருக்கப்போகிறது? அவருக்குத்தான் டென்ஷன் அதிகமாயிருக்கும் என்பது எனது அபிப்ராயம்.

    தங்கள் பேச்சின் கருத்துக்கள் யாவும் அருமையோ அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.
    மிக்க சந்தோசம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. adeengkappaa செம சிரிப்பா இருக்கீங்களே? ஃபோட்டோல

    பதிலளிநீக்கு
  6. தேனு,லேட்டானாலும் லேட்டஸ்டா சொல்லி இருக்கீங்க.கலக்குங்க தேனு.

    பதிலளிநீக்கு
  7. //மகளிரை இழிவு படுத்தும் டி வி விளம்பரங்களைப் புறக்கணியுங்கள். டி வி சீரியல்களுக்கு அடிக்ட் ஆவதை தவிருங்கள். //

    TV சீரியல்களால் பல பெண்களின் அறிவை மழுங்கடிப்பது உண்மையே...


    //பலர் சேர்ந்து சொல்லும்போது ஒரு விஷயம் கவனம் பெறுகிறது.//

    மிகவும் சரியான விசயம்...


    //பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யுங்கள்.//

    இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்று


    // லிஃப்டில் ஒரு பெண் வந்து கையைப் பிடித்துக் கொண்டு நான் டான்ஸ் நல்லா ஆடுவேன். ஒரு டான்ஸ் பள்ளி ஆரம்பித்து அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க ஆசை. அடுத்த முறை நீங்க என்னைப் பார்க்கும்போது நான் எனக்காகவும் என் ஆசைகளுக்காகவும் கூட வாழத் துவங்கி இருப்பேன் என்றார்.//

    உடனே மாற்றம் ஏற்பட்டு இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு ஒருவர் ரசிகையாகி உங்கள் கையை பற்றி பேசுகிறார் என்றால் உங்களது பேச்சு திறமையை அந்த சம்பவம் காட்டுகிறது... அதுவும் மேடையில் பல பேர் முன்னிலையில் பேசுவது சாதாரண விசயமும் அல்லங்க.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மகளிர் பலத்தை உரையின் மூலம் நல்லதோர் செய்தியாகச் சொல்லியிருக்கிறீங்க,
    பிந்திய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நல்லாயிருந்தது சகோதரி...

    பதிலளிநீக்கு
  10. கருத்தாழமுள்ள பேச்சு.. வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  11. நன்றி ராமலெக்ஷ்மி., ஹுசைனம்மா., கோபால் சார்., ரத்னவேல் ஐயா., ராஜா., சிபி., ஸாதிகா., மாய உலகம்., சரவணன்., நிரூபன்., ரெவெரி., மோகன் ஜி

    பதிலளிநீக்கு
  12. மிக அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...