எங்கு பெய்கிறோம்
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..
அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,
எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி
நதியோ, சாக்கடையோ
மலையோ., பள்ளத்தாக்கோ.
மனிதமோ ., மிருகமோ.
வருடிச்செல்லும்
உடல்களெல்லாம்
ஒன்றுபோலத்தான்..
பெண்ணோ., ஆணோ
பெண்ணாகும் ஆணோ.,
பெண் சேரும் பெண்ணோ
ஆண் சேரும் ஆணோ..
கிகாலோக்களோ
கால்கேர்ள்களோ
கைக்கிளையோ.,
பெருந்திணையோ..
எதுவும் பொருட்டில்லாமல்
பாலையோ பள்ளமோ
பெய்து தீர்ப்பதே
பெரும் பணியாய்..
டிஸ்கி:- இந்தக் கவிதை சனிக்கிழமை 06. ஆகஸ்ட் 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.:)
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..
அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,
எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி
நதியோ, சாக்கடையோ
மலையோ., பள்ளத்தாக்கோ.
மனிதமோ ., மிருகமோ.
வருடிச்செல்லும்
உடல்களெல்லாம்
ஒன்றுபோலத்தான்..
பெண்ணோ., ஆணோ
பெண்ணாகும் ஆணோ.,
பெண் சேரும் பெண்ணோ
ஆண் சேரும் ஆணோ..
கிகாலோக்களோ
கால்கேர்ள்களோ
கைக்கிளையோ.,
பெருந்திணையோ..
எதுவும் பொருட்டில்லாமல்
பாலையோ பள்ளமோ
பெய்து தீர்ப்பதே
பெரும் பணியாய்..
டிஸ்கி:- இந்தக் கவிதை சனிக்கிழமை 06. ஆகஸ்ட் 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.:)
அருமை.
பதிலளிநீக்குமழையாய் மாறத்தான் ஆசை, முடியிறதில்லையே?
பதிலளிநீக்குமழை அழகு. அந்த மழை கவிதையானால் கொள்ளை அழகு. கவிதை அருமை மேடம்.
பதிலளிநீக்குSuper Kavithai
பதிலளிநீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குஇயற்கையின் கொடைகளில் ஒன்றான மழையை அனுபவித்து ரசிப்பது போல இந்தக் கவிதையையும் மிகவும் ரசித்தேன். அருமை!
பதிலளிநீக்குதங்களின் இந்த அழகிய கவிதை மழையில் நன்கு நனைந்து போனேன்.
பதிலளிநீக்குஉடம்பில் மட்டுமல்லாமல் என் உள்ளத்திலும் ஈரம் ஆக்கி விட்டீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
சாதாரண மழை அல்ல
'சும்மா' ... 'தேன்' மழை ...
திகட்டாமல் அருமையாக!
அன்புடன் vgk
எனக்கு பிடிச்ச மழை
பதிலளிநீக்குஉங்கள் கவிதை வரிகளில்
நனைந்தாயிற்று... சகோ ...
அருமையான மழைக் கவிதை.
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குஉண்மை ரூஃபினா
நன்றி ரமேஷ்
நன்றி ராஜா
நன்றி குமார்
நன்றி கணேஷ்
நன்றி கோபால் சார்
நன்றி சின்னதூரல்
நன்றி ஜிஜி
நன்றி ரத்னவேல் சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!