நேற்று அவள் இல்லாமல்
என் உலகம் ஸ்தம்பித்திருந்தது..
அவள் சூலுறாத கர்ப்பம் நான்..
ஆனால் என்னைப் புதிதாய்ப் பிரசவித்தவள்,,
இருக்கிறேனா எனக்கூடத்
தெரியவில்லை..
சுவாசம் போல அவளையும்
அடிக்கொருதரம் எதிர்பார்த்து..
பற்றற்ற சருகு போல
மனம் அலைய..
ஒவ்வொரு வாசலிலும் சென்று...
தேடித் தேடி..
அவள் அழைப்புமணி
அழுத்திய படமும்.,
அள்ளிக் கொட்டியிருந்த
அன்பு வார்த்தைகளும்
ரசித்து வந்தேன்..
நிசப்தம் பூட்டிய காலம்
என் காதுகளில்
அறைந்து கொண்டிருந்தது..
அவளின் மணிச்சத்தம் இல்லாமல்.,
மாலை வணக்கம் இல்லாமல்.,
அணைப்பு இல்லாமல்
அணைந்து கிடந்தேன்..
சாமக் கோழிகளின் சத்தத்தில்
அவள் இருந்ததற்கான
அடையாளம் துழாவி., மூழ்கி ., அமிழ்ந்து.,
கூர்மையான காதுகள்
ஒலிக்காய் ஏங்கி ...
இல்லாத கனவோடு தூங்கி..,
உதயமாகி விட்டது..
உயிர்ப்பிக்க வருவாள் ..
செல்ல அதட்டலுடன்...
என்னைக் குழந்தையாக்கியவள்..ம்ம்ம்
என் உலகம் ஸ்தம்பித்திருந்தது..
அவள் சூலுறாத கர்ப்பம் நான்..
ஆனால் என்னைப் புதிதாய்ப் பிரசவித்தவள்,,
இருக்கிறேனா எனக்கூடத்
தெரியவில்லை..
சுவாசம் போல அவளையும்
அடிக்கொருதரம் எதிர்பார்த்து..
பற்றற்ற சருகு போல
மனம் அலைய..
ஒவ்வொரு வாசலிலும் சென்று...
தேடித் தேடி..
அவள் அழைப்புமணி
அழுத்திய படமும்.,
அள்ளிக் கொட்டியிருந்த
அன்பு வார்த்தைகளும்
ரசித்து வந்தேன்..
நிசப்தம் பூட்டிய காலம்
என் காதுகளில்
அறைந்து கொண்டிருந்தது..
அவளின் மணிச்சத்தம் இல்லாமல்.,
மாலை வணக்கம் இல்லாமல்.,
அணைப்பு இல்லாமல்
அணைந்து கிடந்தேன்..
சாமக் கோழிகளின் சத்தத்தில்
அவள் இருந்ததற்கான
அடையாளம் துழாவி., மூழ்கி ., அமிழ்ந்து.,
கூர்மையான காதுகள்
ஒலிக்காய் ஏங்கி ...
இல்லாத கனவோடு தூங்கி..,
உதயமாகி விட்டது..
உயிர்ப்பிக்க வருவாள் ..
செல்ல அதட்டலுடன்...
என்னைக் குழந்தையாக்கியவள்..ம்ம்ம்
சீக்கிரம் வர வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குகவிதை அருமை
வாவ்....! ரொம்ப நல்லா இருக்கு உயிர்ப்பித்தலுக்கான காத்திருப்பு!
பதிலளிநீக்கு//நிசப்தம் பூட்டிய காலம்
பதிலளிநீக்குஎன் காதுகளில்
அறைந்து கொண்டிருந்தது..//
மிகப் பிடித்திருக்கிறது தேனக்கா. வலைச்சரத்திலும் கலக்கிக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
வந்துட்டாளா..
பதிலளிநீக்குநிசப்தம் பூட்டிய காலம்
என் காதுகளில்
அறைந்து கொண்டிருந்தது..
வாவ்..
'உங்களை குழந்தையாக்கியவள்'
பதிலளிநீக்குநன்றாக வந்திருக்கிறாள்.
சீக்கிரமே வரட்டும் !!
பதிலளிநீக்கு:-))
யாரு தேனுவக்கா அது.
பதிலளிநீக்குமகளா ...பேத்தியா ?
//உதயமாகி விட்டது..
பதிலளிநீக்குஉயிர்ப்பிக்க வருவாள் ..
செல்ல அதட்டலுடன்...
என்னைக் குழந்தையாக்கியவள்..ம்ம்ம்//
ஆஹா... இத்தனை ரசனையாவா ம்ம்ம்ம்...வரட்டும்...வரட்டும்...
வாழ்த்துகள் தேனக்கா...
வாசித்ததின் பின்னர்
பதிலளிநீக்குஜன்னலை திறந்து பார்த்துக் கொண்டிருக்கிருந்தேன் ....
குழந்தைகள் யாரேனும் வருவார்களா என ...
கைகள் வயிற்றை தடவ சிறு பெருமூச்சில் கரைகிறது மனது ...
ஆண் முழுமையானவன் அல்லன் ...
கவிதை நல்லாயிருக்குங்க... உங்களுக்கு விருது இங்கே
பதிலளிநீக்குhttp://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
பெற்றுக்கொள்ளுங்கள்...
நன்றி தர்ஷன்., தேவா., சரவணா.,ரிஷபன்., மதுரை சரவணன்.,நிஜாம்.,ஜெய்லானி ., ஹேமா(தோழி ஹேமா),., கனி., நியோ., அஹமத் இர்ஷாத்
பதிலளிநீக்குநன்றி தர்ஷன்., தேவா., சரவணா.,ரிஷபன்., மதுரை சரவணன்.,நிஜாம்.,ஜெய்லானி ., ஹேமா(தோழி ஹேமா),., கனி., நியோ., அஹமத் இர்ஷாத்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்