எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.

1121. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. ( இன்று ) அவர் நல்லவராவதும் தீயவராவதும் சோஷியல் நெட் வொர்க் கையிலே.

1122. குழந்தைகளால் நிரம்பி வழிகிறது முகநூல்.. :)
.
.ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கும், ஃபேபி ஃபுட்ஸும் தான் மிஸ்ஸிங்

1123. தீபாவளிதான் முடிஞ்சுருச்சே.. லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் வைச்சிருந்தும், ரூல்ஸ்படி சரியா ஓட்டியும் இன்னும் அப்பாவி டூவீலர்களை ரோட்டில் பிடித்து ஏன் நிறுத்துறீங்க.

1124. நளாயினி கண்ணகி சாவித்ரின்னு அடுத்த புயலுக்குத் தமிழ்ப் பேரா வைங்க. நீலம் காத்ரீனான்னு வைக்காம. ! :)

1125. Age aaga aaga fat aa mattumilla..dwarf aavum aagitu iruken 👻

1126.எத்தனை முறை ப்லாக் போஸ்டைப் போட்டாலும் டிவிட்டர் போல நீ ஏற்கனவே போட்ட போஸ்ட் இது என லொட்டு லொசுக்கு காரணம் சொல்லாமல் இங்கிட்டு வாங்கி அங்கிட்டுப் போட்டுக்குது கூகுள்.

1127.Tv la pattu partha kooda net pack gali aayidumonnu tension aa irukey. Hahaha. #net_addict

1128.போட் ஓட்டுறவங்கள எல்லாம் அரசு பஸ் ட்ரைவரா போட்டிருக்காங்க. உயிரைக் கையில பிடிச்சிட்டு உக்கார்ந்து வரவேண்டியதா இருக்கு. பஸ் வேற 1008 ஸ்பேர் பார்ட்ஸோட சில்லறை சிதர்றாமாரிக் குலுங்குது. மழை பேஞ்சா ஓட்டைக் கப்பலாட்டம் எல்லா ஜன்னல்லயும் ஒழுகுது. எங்க ஓடி உக்கார்றதுன்னு தெரியாம பிடிக்க சரியான கம்பியும் இல்லாம தாவு தீர்ந்திடுச்சு. பிபி ஹை ஆயி தலை 180 டிகிரில சுத்துது. உடம்போ 360 டிகிரில.. யப்பா சாமி என்ன உயிரோட எறக்கி விட்ருன்னு கெதறாததுதான் மிச்சம். இந்த ஸ்டேடஸ போட தப்பிச்சு வந்திருக்கனாக்கும் ..

1129.தர்ம தரிசனம். ஒரு தர்ம சங்கடம். பழனி கோயிலில் திருக்கல்யாணம் அன்று தெரியாமல் சென்று க்யூவில் மாட்டி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து சன்னதி திறந்தார்கள்.


பணம் படைத்தோருக்கு மட்டும்தான் கடவுளா. கோயிலில் க்யூவில் சென்றே தரிசிக்க வேண்டும் என்றும் அதற்காக 10, 100 டிக்கெட் வாங்கக் கூடாது என்பதும் என் கொள்கை.

அதே போல் படிஏறிச் சென்று தரிசிக்க வேண்டும் என்பதும். சென்றவாரம் கணவரிடம் திட்டு வாங்காமல் எப்படியோ தப்பித்தேன்.

சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும்போது டிக்கெட் ( 150 லிருந்து 700 வரை ) வாங்கித்தான் தரிசிக்க வேண்டும் என்று எங்கேயாவது ரூல்ஸ் இருக்கா. அறநிலையத்துறை ஏதும் ரூல் போட்டிருக்கா. பொதுஜனம் அபிஷேகம் சிறப்பு ஆராதனைகளைப் பார்க்கக் கூடாதுன்னு.. தெரிந்தவர் விளக்கினால் தேவலை.

கோயிலுக்குப் போய் குடைச்சலை வாங்கிய கதையாய்.. சிலரை மனசாட்சி இல்லையா சீக்கிரம் நகருங்க என்று அந்தக் காவல் பெண் சத்தம் போட பக்தர் கூட்டம் திரும்ப சத்தம் போட ஒரே ரகளையாகிவிட்டது சென்ற ஞாயிறு.

1130.VOLVO.. வாழ்வோ சாவோன்னு போயிக்கிட்டே இருக்கே.. ஹ்ம்ம்.

1131.ஸ்கைஃபால்னு பேர் வச்சதுக்கு பதிலா தாய்க்கிழவின்னு வச்சிருக்கலாம்.. -- ஒரு யூத்தோட கமெண்ட்

1132.கர்ப்பூர நீராஞ்சனம் தர்சயாமி.. இல்ல இப்ப எல்லா இடத்திலும் நெய்தீபம் தர்சயாமிதான்.. எதனால..

1133.தயவு செய்து யாரும் எனக்குத் தெரியாத ஃபோட்டோக்களில் டாக் செய்யாதீங்க.. திடீர்னு ஃபேஸ்புக் இதுல யாரு டாக் பண்ணி இருக்காங்கன்னு செக்யூரிட்டி செக் செய்யும்போது  “பே.. பே.. பே “ ந்னு முழிக்க வேண்டியதா இருக்கு. பல முறை என்னை அப்பிடி பயம் காட்டி இருக்கு.. இனிமே.. அப்பிடி என்னை யாராவது தெரியாத ஃபோட்டோக்களில் டாக் செய்தால் என் லிஸ்டிலிருந்து இனிமேல் கட்டாயம் எடுத்து விடுவேன். — feeling annoyed.

1134. ப்லாக் , ஃபேஸ்புக் எல்லாத்தையும் உயில் எழுத வசதி இருக்கா... ஏதாவது பணம் தேறும்னா..அழிக்கிறாங்க. , அல்லது ஹாக் பண்ணுறாங்க?

1135. ட்விட்டர் தினம் கலர் கலரா மாறுது. மோடியும் தினம் யார் யாரோடயோ கைகுலுக்குறார். :)

#இது_அரசியல்_பதிவு_அல்ல :)

1136.தனியே அமர்ந்து சாப்பிடும்போது அமிர்தம் கூட விஷமாகிறது...

1137. கார்த்திகை ஆரம்பிச்சாச்சு.தினமுமே பூசைச் சாப்பாடு எல்லாருக்கும்.

1138.பிரிக்க முடியாதது என்னவோ ...கோயம்புத்தூரும் கே ஆர் பேக்கரியும்..

1139.கருநீல ஓடையைப் போலிருக்கிறது ஞாயிறின் இரவுப் பாதை.

1140. யாருக்கெல்லாம் 2000 ரூபாய்க்குச் சில்லறை வேணும்.


ஒரு ஃபங்க்‌ஷன் சமயம் ...எப்போதோ எடுத்த ஃபோட்டோ :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்


5 கருத்துகள்:

  1. இன்றைய நிலையில் நோட்டுக் கட்டுக்கள்தான் மனதைக் கவருகின்றன

    பதிலளிநீக்கு
  2. //பணம் படைத்தோருக்கு மட்டும்தான் கடவுளா. கோயிலில் க்யூவில் சென்றே தரிசிக்க வேண்டும் என்றும் அதற்காக 10, 100 டிக்கெட் வாங்கக் கூடாது என்பதும் என் கொள்கை.// Madam, கோவில் நிர்வாகத்துக்கு (cleaning, maintenance etc.) பணம் தேவைப்படுகிறது. சுத்தமா இல்லேன்னா நாமதானே குறை சொல்றோம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜெயக்குமார் சகோ. அது காலத்தின் கட்டாயம் :)

    அட அப்பிடியா.. விசு சார். உண்டியல் பணம். மற்றும் கோவில் சொத்துக்களின் பணம் ( - இறையிலி நிலம் - வயல் குத்தகை ) போன்றவை உதவுதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஹ்ம் அங்கே வெளியேறும் பாதையில் கதவுப் பக்கத்தில் உள்ள கற்சுவரில் கூட யார் யாரோ ராஜாக்கள் அந்தக் கோயிலுக்குக் கொடுத்த இறை மான்ய நிலங்கள் பற்றிய விவரம் இருக்கே !

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...