எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 ஜூன், 2016

வாளை விழுங்கிய மலேஷியா சங்கர்.

ஆப்ரா கா டாப்ரா. என்றதும் நமக்கு தொப்பியும் முயல்குட்டியும் , புறாக்களும் பல்வண்ணப் பறவைகளும் வளையங்களும் ரிப்பன்களும் விதம்விதமான பூக்களும்,கூடவே ஒரு மாஜிக் நிபுணரும் ஞாபகத்துக்கு வருவாங்க.

மலேஷியாவைச் சேர்ந்த சங்கர் கல்கி குழுமப் பவளவிழாவின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கோகுலத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளின் முடிவில் மாஜிக் ஷோ நடத்தி மகிழ வைத்தார்.

ஒரு பெண்குழந்தையை அழைத்து டிஷ்யூ பேப்பரை வாயில் வைத்து எடுக்கச் சொன்னார். குழந்தையின் வாயில் இருந்து பிட்டு பிட்டாக வர
சங்கர் அதை கயிறு போல் இழுத்து ஆச்சர்யப்படுத்தினார்.
அடுத்து ஒரு பையனிடம்  சல்மான் கான் பனியன் போட்ட புகைப்படம் காண்பித்து  அடுத்துப் போடாமல் இருந்த புகைப்படம் காண்பித்து அதிலிருந்து  அதே அளவு பனியனை வெளியே எடுத்து  மேஜிக் செய்தார்.


பெப்ஸியை பாட்டிலை ஒரு காதில்  வைத்து ஊற்றி அடுத்த காதில் எடுத்தது பிள்ளைகளுக்குப் பிடித்து போனது. இதே பாலை வைத்தும் செய்தார். அதுக்கு அவ்ளோ ரெஸ்பான்ஸ் இல்லை !
ஆச்சர்யப் பார்வையாளர் கூட்டம்.
தொப்பிலிருந்து பூக்களும் டிஷ்யூ பேப்பரில் இருந்து கலர் கலர் பேப்பரும் உருவாக்கி அனுப்பினார் கூட்டத்தினருக்கு.பபுள்ஸ் போலப் பறந்தன அவை மினுமினுவென்று.
அடுத்துத்தான் கத்தியை/வாளை விழுங்கும் நிகழ்ச்சி . குழந்தைகள் வீட்டில் விழுங்கினால் தக்காளிச் சட்னி வரும்( இரத்தம் ) என்று கூறி இது போல் செய்யவேண்டாம் என எச்சரித்து அதன் பின் செய்து காட்டினார்.
நீளமான கத்தி/வாள்  உள்ளே போய்கொண்டே இருந்தது. அந்த மெல்லிய வாள் போல உள்ளே போகப் போக பயமாக இருந்தது. எங்காவது குத்தி விடுமோவென.
ஆனால் கழுத்தை உயர்த்தியபடி முழுக்கத்தியை/வாளையும் முழுங்கியே விட்டார் .!

ஐயோ காணாமயே போச்சு. கைப்பிடிதான் மிச்சம் !
அதன் பின் மெல்ல மெல்ல உருவிக் காட்டினார். துளி ரத்தம் இல்லை. ஏதாவது டெக்னிக் இருக்கலாம். ( உள்ளே ஃபோல்ட் ஆகுறமாதிரி என்று தோன்றிற்றே தவிர எப்பிடி எனத் தெரியவில்லை )
குழந்தைகள் தாங்கள் பிரமித்து ரசித்த விஷயங்களைப் பட்டியல் இட்டார்கள். தர்ஷனுக்கு அந்த வாள் விழுங்கியது பிடித்தது ,

இந்தப் பெண்களுக்கோ அந்த பெப்ஸியைக் காதில் குடித்தது பிடித்திருந்தது. மொத்தத்தில் மேஜிக்கில் எல்லாரும் குழந்தைகளாகிவிட்டோம் :)
அடுத்து தாஜ்மஹல் எல்லாம் காமித்து ஒரு ஷோ செய்தார். அதன் பின் கமல், ரஜனி, விஜய்காந்த் போல எல்லாம் மிமிக்ரி செய்து அசத்தினார்.
இதைப் பார்த்த அனைவரின் கண்களிலும் மேஜிக் கற்றுக் கொள்ளும் ஆவல் ஒளிவிட்டது. பாருங்கள் மற்றவற்றில் அழைத்தால் மட்டுமே பங்கேற்றவர்கள் மேஜிக் என்றதும் சுறுசுறுப்பாக குதூகலமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அரைநாள் பொழுதை எப்படிக் கடந்தோம் எனத் தெரில. வெய்யில் கொட்டிக் கொண்டிருந்தது சுற்றிலும் ஆனால் நாங்கள் மேஜிக்கில் விழுந்து மகிழ்வின் குளிர்வில் மகிழ்ந்திருந்தோம். கல்கியும் கோகுலமும் இணைந்து எங்கள் திருமண நாளான அந்நாளைப் பொன் நாளாக்கி இருந்தது.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.


6 கருத்துகள்:

  1. சிறப்பான நிகழ்வுகள். எங்களுடனும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எந்த வயதானால் என்ன மாஜிக் ஷோ பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி பாலா சார்

    பதிலளிநீக்கு

  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...