எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 செப்டம்பர், 2012

ஜ்வெல் லோன்.

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி..

“என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?”

“ஆமாம். நீங்க நலமா..”

பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா இருக்கா போல என நினைத்தார்.


“அப்புறம் சாப்பிட்டியா., பசங்க., வீட்டுக்காரர் நலமா ..?”

“ ம் அதுக்கென்ன கொறைச்சல்.. “

“ ஏதும் கோவமா இருக்கியோ..”

“ஒண்ணுமில்லையே. சும்மாதான்”

“சொல்றதுன்னா சொல்லு. பழைய உற்சாகத்தைக் காணோமே”

“என்னத்த சொல்ல.. எப்பப்பாரு ஜ்வெல் லோன் வைக்கணும். ஒரு அர்ஜண்ட்.. லாக்கர்லேருந்து நகையை கொடு .. அடுத்த மாசம் எடுத்திடலாம். அப்பிடின்னு கேக்குறாரு. எரிச்சல் வராம என்ன பண்ணும். “

“அட அப்பிடியா.. ஏன் இப்பிடி பண்ணுறாரு.... நீயும் இதப்பத்தித்தான் அடிக்கடி வருத்தப்பட்டுகிட்டே இருக்கே..”

”என்ன செய்ய..தலையில எழுதுனதை மாத்த முடியாது. சரி எனக்கு பையனை ஸ்கூலில் கூப்பிடப் போகணும் . பார்க்கலாம். பை..”

”என்னவோ. எப்பிடி எல்லாம் இருக்க வேண்டியவ நீ..ரொம்ப கஷ்டப்படுறே..ம்ம் .சரி சரி பை..”

திடீரென்று பச்சை சிவப்பாய் மாறியது. அப்புறம் 2 நிமிடங்களில் சாம்பலுக்குப் போனது. லாக் அவுட் செய்து விட்டாள்.

பெருமூச்சோடு ஃபோனை எடுத்தார். ஊரிலிருந்த மனைவியிடம் சொன்னார். “ ஏம்மா., நான் பேங்க் மேனேஜரிடம் சொல்லி வச்சிருக்கேன். டைம் ஆகிடப் போகுது . நீ எல்லா நகையையும் பத்திரமா எடுத்துட்டுப் போ. அவசரத்தேவை. ஜ்வெல் லோன் அமௌவுண்டைஅப்படியே அக்கவுண்டுக்கு கிரடிட் பண்ண சொல்லு.. அடுத்த மாசம் திருப்பிடலாம் “ என்றார். !!

 டிஸ்கி:- இந்தச் சிறுகதை செப்டம்பர் 4, 2011 திண்ணையில் வெளியானது

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...