வாழ்வின் சில தருணங்கள் எப்படி எதிர்ப்படுகின்றன என்பதை நாம் கணிக்கவே முடியாது. நம் கனவுகளை சூலுற்று பாதுகாத்து வைத்திருந்தால் நாமே அவற்றை ஒரு காலத்தில் சுகமாய்ப் பிரசவிக்கலாம் என்பது உண்மை,
திரு நாகப்பன் அவர்கள் என் உறவினர் மட்டுமல்ல.. என் பால்யகால புத்தகத் தோழர் என்பதும் உண்மை. அவரது புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்கள் எங்கள் விடுமுறைகளைப் புதுப்பித்தவை. ஒன்றைப் படித்துப் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்தால்தான் அடுத்தது கொடுப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்ட். என்னைவிட ஒரு வயது மூத்த என் தாய் மாமா அவர்.
வலைத்தளங்களிலும் இணைய தளங்களிலும் நான் எழுத ஆரம்பித்த புதிதில் இளமை விகடனில் என் கவிதைகள் வெளிவந்தன. அப்போதுதான் நாம் ஒரு எழுத்தாளர் என்ற வளையத்துள் வந்திருப்பது நமக்கே தெரிந்தது. படிக்கும் புத்தகங்களை எல்லாம் நம் கண்ணோட்டத்தில் விமர்சனம் எழுதி அது எல்லாம் திண்ணையிலும் வெளிவந்தது.
காந்தி ஸ்டடி சென்டரில் நடக்கும் புத்தக விமர்சனக் கூட்டத்துக்கு அவர் ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். A SLUM NO MORE -- இனி இது சேரி இல்லை என்ற புத்தகம் திரு பைரவனால் எழுதப்பட்டது குறித்த ஒரு விமர்சனக் கூட்டம் அது. என்னால் செல்ல முடியவில்லை. எனவே அது குறித்து கேட்ட போது திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் என்பவர் அது குறித்த தகவல்கள் சொல்வார் என சொன்னார்.
அவரிடம் தொலைபேசி அவரின் மூலம் சேவாலயா முரளியைத் தொடர்பு கொண்டு இந்த புத்தகம் சம்பந்தமான தகவல்கள் திரட்டி ( அது எங்கள் கே. கே. நகரின் அருகில் இருக்கும் சத்யா நகர்தான்..!!!) அது பற்றி ஒரு கட்டுரை எழுதி இளமை விகடனுக்கு அனுப்ப அது வெளிவந்து பலரது கவனத்தையும் பெற்றது.
அதைப் படித்த லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை கிரிஜாம்மா ஈர்க்கப்பட்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். உடனே ஸ்ரீனிவாசன் சார் சொல்ல நான் தொடர்பு கொண்டேன். அவரே சிறப்பாக நடத்தி வந்த போதும் , லேடீஸ் ஸ்பெஷலில் இன்னும் இளைய சிந்தனை தேவைப்படுவதால் என்னையும் அழைத்ததாக சொன்னார்.
முதலில் கவிதைகள் சில அனுப்பினேன். சில கைபேசி கவிதைப் போட்டிகளும் நடத்தினோம். முதலீட்டுக் கேள்வி பதில்கள் திருமதி நாகப்பன் மூலம் கேட்டு பதிலளித்தோம். சில கட்டுரைகளும் எழுதினேன். அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் வாசகிகள் அதைத் தொடர்ந்தார்கள்.
கிட்டத்தட்ட பெண் 25 வலைப்பதிவர்களை ஒவ்வொரு மாதமும் ஒரு வலைப்பதிவராக அறிமுகப்படுத்தியுள்ளோம். சில விஷேஷ இதழ்களில் ஆண் பதிவர்கள் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
பல தரப்பட்ட மக்களையும் சந்திக்க விழையும், பேச விழையும் என் குணம் கண்டு கிரிஜாம்மா என்னை ஒரு கட்டுரையாளராக்கினார் எனத்தான் சொல்ல வேண்டும். சில தலைப்புகள் செய்யலாம் என கேட்டேன்., முதலீடு , போராடி ஜெயித்த பெண்கள். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள். இவற்றை என்னையே செய்யும்படிப் பணித்தார் .
தொடர்ந்து முதலீடும்( 4 கட்டுரைகள் ) , மருத்துவ விழிப்புணர்வு ( 7 கட்டுரைகள் ) வந்துள்ளது. போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரை பலரது கவனத்தையும் பெற்றது. முதலில் யாரிடம் கேட்பது என தயக்கம். வலைப்பதிவ நண்பராய் இருந்த ஈரோடு கதிரிடம் கேட்டதில் ரம்யாவை அறிமுகப்படுத்தினார். என்றாலும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் யாரிடம் கேட்பது என தயக்கம். கிரிஜாம்மா நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையிலேயே தேடுங்கள்.. உங்களைச் சுற்றியே விஷயங்கள் கிடைக்கும். ஒவ்வொருவராக சொல்லி வையுங்கள். என்றார். அதையே வேதவாக்காக பிடித்துக் கொண்டேன்.
கார்ப்பரேட் லெவலில் இருந்து களப்பணியில் இயங்குபவர் வரை ஒவ்வொரு பெண்ணின் போராட்டமும் ஒவ்வொரு மாதமும் கண்முன்னே தொடர்ந்து வந்தது. இதை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடும் முயற்சியை மேற்கொண்டேன். அதற்கான முன்னுரையில் அவர்
///எழுத்து ஆர்வம் அதிகமாக இருந்தாலும் பத்திரிக்கையாளராக தனக்கு அனுபவம் இல்லையே என்கிற பயம் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. இருந்தாலும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கையும் இருந்தது. ’போராடி ஜெயித்த பெண்கள் ’ என்கிற பெயரில்தான் இந்தக் கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தன. இப்படி சாதித்த பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து எழுதுங்கள் என்று சொன்னபோது ,’ நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். அதற்குமேல் முடியுமா தெரியவில்லை’ என்று தயங்கிக் கொண்டிருந்தவர் அடுத்தடுத்து பலரைக் கண்டுபிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டார். இதன்முலம் பல புதிய சாதனை சகோதரிகளைத் தெரிந்து கொண்டதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி//
என குறிப்பிட்டு இருக்கிறார். இன்று உங்கள் கைகளில் தவழும் சாதனை அரசி என்னுடைய விட்டுப் போன கனவான விகடன் மாணவ நிருபர் திட்டத்தின் தொடர்ச்சியாக செயல்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். விகடன் மாணவர் பத்ரிக்கையாளர் திட்டம் கொண்டுவந்தபோது நான் கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல்படித்தேன் . இரண்டாமாண்டு படிப்பவர்கள்தான் அப்ளை செய்ய முடியும். என்ன செய்வது என்று ஒரே வருத்தம். ஜர்னலிசம் படிக்கலாம் அல்லது எல் எல் பி படிக்கலாம் என நினைத்தால் வீட்டிலிருந்தே தொலைதூரக் கல்வியில் பொலிட்டிகல் சயின்ஸ் படிக்க அனுமதி கிடைத்தது. முதலாமாண்டு முடிந்ததும் திருமணம். அடுத்தடுத்து பிள்ளைகள்.
இன்னும் வாழ்வு என்பது இருக்கிறது., பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். இண்டிவிஜுவல் ஆகிவிட்டார்கள், நாம் மட்டும் பாசப் பைத்தியங்களாக செக்கு மாடுபோல ஒன்றையே சுற்றி வருவது எல்லாருக்கும் அன்பு இடைஞ்சல் எனப் புரிந்தது.
நம் எண்ணங்கள் , கனவுகளுக்கான காலகட்டம் இது. அதை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செயல்படுத்துவோம் என நினைத்தேன். முதலில் வெளி உலகம் நம் அவசரத்துக்கும், செயல்களுக்கும், உடன்பாடானதாக இல்லை. இன்று கிரிஜாம்மாவிடம் கேட்டால் சொல்வார்கள்.. அன்றைய தேனம்மையிடம் இருந்த படபடப்பு போய் இன்று கொஞ்சம் அமைதி இருக்கிறது என்று.
இவற்றுக்கெல்லாம் நான் சந்தித்த சாதனை அரசிகள்தான் காரணம். முதல் சாதனை அரசி கிரிஜாம்மாவின் புத்தகங்களிலிருந்தும் வழிகாட்டுதலில் இருந்தும் நான் கற்றுக் கொண்டது நிறைய.. உலகைப் புரிய வைத்த என் சாதனை அரசிகளுக்கு என் நன்றி..
நன்றி சில ஆண்களுக்கும்.. என் கணவர், என் அப்பா, என் குழந்தைகள் .. இவர்கள் தவிர என் விழாவை தன் விழாவாக வந்து சிறப்பித்த திரு பாரதி மணி ஐயா அவர்கள். என் மாமாவான நாகப்பன் ( புகழேந்தி), வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன், சேவாலயா முரளி, ஈரோடு கதிர், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே சாதனை ஆண் வெங்கடேசன். சொன்னவுடனே மிக உற்சாகத்துடன் அட்டைப் படம் வரைந்து அனுப்பிய ஜீவாநந்தன், புத்தக அமைப்பில் உதவி வழிகாட்டிய செல்வகுமார், கரிசல் மீடியா மகேந்திரன், டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன் மற்றும் என் முகப்புத்தக நண்பர்கள். !!!!
நன்றி என் வலைப்பதிவ சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும்.!!!
வருடந்தோறும் என்னை ஊக்குவிக்கும் தமிழ்மணத்துக்கும், இணைய தளங்களுக்கும், மற்ற பத்ரிக்கைகளுக்கும் , வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கும் நன்றி. !!!
பொங்குக பொங்கல்., இன்பமும் மகிழ்வும் கூட.!!!
இத்தனை சாதனைகள் செய்திருக்கும் நீங்களும் சாதனை அரசியே தேனக்கா..
பதிலளிநீக்குசாதனை அரசிகள் ஒரு சாதனைப் பெண்ணின் முயற்சியே. விற்பனையிலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசாதனை அரசிகள் ஒரு சாதனைப் பெண்ணின் முயற்சியே. விற்பனையிலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசாதனை அரசிகள் ஒரு சாதனைப் பெண்ணின் முயற்சியே. விற்பனையிலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகிரிஜாம்மாவே ஒரு சாதனை அரசிதான்! அவரது ஆசி பெற்ற நீங்க மட்டும் சும்மாவா?????
பதிலளிநீக்குஎல்லாப் பெருமைகளும் பெற்று நல்லா இருங்க நீங்க ரெண்டுபேருமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.
இத்தனை பேரையும் பேட்டி கண்டு, அவர்களின் சாதனைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் பேட்டிகளை அமைத்து, அதை அழகுற புத்தகமாக்குவது எளிய செயல் அல்லவென்பதையும் அதன் பின்னணியில் உங்களின் உழைப்பு கொட்டிக் கிடப்பதையும் நான் நன்கறிவேன். அவ்வகையில் நீங்களும் ஒரு சாதனை அரசி தான்க்கா... அடுத்த புத்தகத்துக்கு இப்பவே என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசாதனை அரசி தேனக்காவுக்கும்,கிரிஜாம்மாவுக்கும் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஉங்களுடைய கடின உழைப்பு பாரட்டப் பட வேண்டியது.தொடர்ந்து சாதனை புரியுங்கள்.நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅக்கா, உங்கள் வளர்ச்சியைக் கூடவே (பதிவுலகில்) இருந்து கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இன்னுமின்னும் மேன்மையடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.
பதிலளிநீக்குதங்கள் முயற்சியை வியந்து பாராட்டுகிறேன். பன்முகத் திறமை கொண்ட தாங்களும் ஒரு சாதனைப் பெண்ணே! பாராட்டுகள். மேலும் பெருகட்டும் படைப்புகள்.
பதிலளிநீக்குஇத்தனை சாதனைகள். இன்னுமின்னும் சாதனைகள் செய்ய வாழ்த்துகள் தேனக்கா..
பதிலளிநீக்குarumai Thenachi :) Valthukkal :)
பதிலளிநீக்குநன்றி சாந்தி
பதிலளிநீக்குநன்றி விச்சு
நன்றி துளசி
நன்றி கணேஷ்
நன்றி மேனகா
நன்றி ஆசியா
நன்றி சூரியா
நன்றி ஹுசினம்மா
நன்றி கீதா
நன்றி மலிக்கா
நன்றி அனு:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!