எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 அக்டோபர், 2011

தென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.

இந்தத்தலைப்பைப் பார்த்ததும் தென்னக ரயிலில் பாத்ரூமுக்குப் பக்கத்தில் 72 ஆம் நம்பர் சீட்டில் அமர்ந்து பயணித்தது என எண்ணி இருப்பீர்கள். இல்லை இல்லை இது தட்காலில் ஏசி கோச்சில் புக் செய்து ( டிக்கட் விலை 705 ரூபாய்) அனுபவித்த கொடுமை இது.

நார்மல் டிக்கெட் செகண்ட் க்ளாஸில் புக் செய்தால் வீட்டில் இருந்து ஏர் பில்லோ., ப்ளாங்கெட் எல்லாம் தூக்கி வருவோம். இது ஏசி என்பதால் இதை எல்லாம் எடுக்காமல் வந்தேன். ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் த்ரீடயர் ஏசியில் பதினொன்னரை மணி வண்டிக்கு இடம் கிடைத்தது. தட்காலில் புக் செய்பவர்களுக்கென்றே அப்பர் பர்த் வைத்திருக்கிறார்கள். மிகுந்த கஷ்டப்பட்டு ஏறினால் ஒரு தலையணை ஒரு போர்வை ஒரு பெட் ஸ்ப்ரெட் இருந்தது. கம்பளி இல்லை.கம்பளி இல்லாமல் எப்படி ஏசியில் இருப்பது. அப்போது கீழே இரு குழந்தைகள் கம்பளி போட்டு போர்வை போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் அம்மா எதிர் சைட் பர்த்தில் அமர்ந்து என் சீட்டைக் கைகாட்டி அது என்னுடையது என வாதிட்டார்கள். இல்லையம்மா இது என்னுடையது உங்களுடையது 38 அடுத்தது என சொல்லி விளங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.


டிடிஆர் வந்ததும் டிக்கெட் ஓட்டர் ஐடி எல்லாம் காமித்தேன். செக் செய்துவிட்டு கொடுத்துவிட்டு தலையசைத்துச் சென்றுவிட்டார். அட்டெண்டர் வருவார். ப்ளாங்கெட் கேட்கலாம் என நினைத்தால் வரவில்லை. திரும்ப கஷ்டப்பட்டு இறங்கி சென்று ( அதற்குள் பக்கத்து அம்மாவிடம் இந்தக் குழந்தைகள் ஏன் இங்கே படுத்திருக்கிறார்கள் . இவர்கள் சீட் எது. சீட் இல்லாமல் ப்ளாங்கெட் எப்படிக் கிடைத்தது என கேட்டதற்கு., நான் பணம் கட்டி ப்ளாங்கெட் வாங்கினேன். நாங்க இவங்கவிட்டை எடுத்திட்டோமுன்னு சொல்றாங்க.. என அடுத்த செக்மெண்டில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். ) (அதற்குள் என்னுடன் ஏறிய இரண்டு மூன்று பேரும் கம்பளி இல்லாமல் டிடிஆரிடம் கேட்டோம். ஷார்ட்டேஜ் என்கிறார் என்றார்கள். )என்னுடைய சீட்டிற்கு உண்டான கம்பளி இல்லையே எனக் கேட்டதற்கு., ஷார்ட்டேஜ் மேடம். என்றார்.

என் அப்பாவுக்கும் என் கணவருக்கும் ஃபோன் செய்து நான் ட்ரெயினில் ஏறிவிட்ட விபரத்தைச் சொல்லிய போது கம்பளி இல்லை என்று சொன்னேன். அவர்கள் உடனே கேளு., அப்பதான் கிடைக்கும், இல்லாவிட்டால் நைட் ரொம்ப குளிருமே என்றார்கள். சரி என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது டிடிஆர் அந்தப் பக்கம் வந்தார். உடனே அட்டெண்டர் தான் பார்த்துக் கொண்டிருந்த ஷீட்டை வைத்துவிட்டு என்னுடன் வந்து ஒவ்வொரு பர்த்தாக தேடினார். பின் ஒரு குழந்தையிடம் இரண்டு இருந்ததை காமித்து நான் எப்படி எடுத்துக் கொடுக்க முடியும். மேடம் நீங்களே எடுத்துக்குங்க என்றார். அது அந்தப் பெண் போர்த்திக் கொள்ளவே இல்லை இரண்டையும். மடித்தபடியே இருந்தது. எட்டி கீழே படுத்திருந்த இரு குழந்தைகள் மேலும் படாமல் கஷ்டப்பட்டுத் தொங்கி எடுத்துக் கொண்டேன்.

மேலே ஏறினவுடன் தான் க்ளைமாக்ஸ். படுத்துப் போர்த்த முயற்சித்தால் ஒரே சிறுநீர் நாற்றம். ஏசி கோச்சில் டாய்லெட் நாற்றமடிக்காதே..என்று பாத்தால் அந்த நாற்றம் கம்பளியில் என தெரிந்தது. ஈரம் இல்லை ஆனால் ஒரே வாடை. அதை காலின் கீழே போட்டுவிட்டு தலையணையில் படுத்தால் அங்கும் அதே நாற்றம். அப்போதுதான் தெரிந்தது இரண்டுமே ஒரு குழந்தைக்கு உபயோகப்படுத்தி அப்படியே மடித்து வைக்கப்பட்டிருப்பது. உடனே தலையணையையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த மெலிதான வெள்ளைப் போர்வையையும் பெட்ஸ்ப்ரெட்டையும் போர்த்திப் படுத்தேன்.

இதில் பல கேள்விகள். தட்காலில் புக் செய்தாலும் உரிய ப்ளாங்கெட்டுகள் வழங்கப்படாதது ஏன்.? ரூபாய் 705 கட்டியும் இந்த நாற்றத்தில் பயணிக்கவேண்டும் என தென்னக ரயில்வே நினைக்கிறதா. ? உரிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்படாத ப்ளாங்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவது ஏன். சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்காரப்பெண்மணி செட்டிநாட்டு ஹெரிட்டேஜ் ஹோம்களைப் பார்த்துவிட்டு என்னுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு இது வழங்கப்பட்டிருந்தால் அவருடைய தென்னக ரயில்வே பற்றிய மதிப்பீடு என்னதாக இருக்கும். ஒரு ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்டில் தரையில் குழந்தைகளைப் படுக்கவைக்க அனுமதி இருக்கிறதா.

இப்படி டிக்கெட் இல்லாதவர்களுக்கு ப்ளாங்கெட்டை வாடகைக்கு விடும் உரிமை அந்த அட்டெண்டருக்கு இருக்கிறதா.. இன்னொரு தமாஷ் அந்த அட்டெண்டர் எனக்காக கம்பளியைத் தேடியபோது டிடிஆர் வந்து அந்த பானை ஆஃப் பண்ணு என அட்டெண்டருக்குக் கட்டளையிட்டார். பின் என்னிடம் ஒரு லோயர் பர்த்தைக் காண்பித்து இதை எடுத்துக்குங்க என்றார். இல்லை சார் வேணாம் கம்பளி போதும் என்றதற்கு இதுக்கு மேல என்ன செய்ய முடியும் என்று கோபமாக கூறி விட்டுப் போனார். அதாவது கீழ் பர்த்தில் படுத்தால் யாருக்கும் குளிராது என நினைத்தார் போல அந்த டிடிஆர்.

தென்னக ரயில்வேயின் புதுமையான சேவைகளுடன் சென்னை வந்து சேர்ந்தேன். எதனோடும் சமரசமாகப் போகவேண்டும் என்பதே எப்போதும் என் எண்ணம். ஒரு கட்டத்துக்குமேல் பொறுத்துக்கொள்ளமுடியாததை பகிரவேண்டும் என்பதற்காகவே இதை என்னுடைய ப்லாகிப் போட்டுள்ளேன்.

34 கருத்துகள்:

  1. உங்கள் படைப்புகளின் மூலம்- உங்களின் சகிப்புகுணத்தை அறிய முடிந்துள்ளது. உங்களாலேயே ஒன்றை பொறுத்து கொள்ள முடியவில்லை என்றால்? பொறுப்புணர்வு அரசு துறைக்கு வர வேண்டும். வேறென்ன சொல்ல.

    பதிலளிநீக்கு
  2. கொடுமையான பயணம்தான் மேடம்.

    பொறுப்பில்லாத ஊழியர்களை என்ன செய்வது. காசு கொடுத்து டிக்கட் வாங்கிய நமக்கு உரிய வசதி செய்யவில்லை என்றால் அந்த டி.டி. ஆறும் அட்டெண்டர் இருவரும் வேளைக்கு லாயக்கிலாதவர்கள்.

    நீங்கள் புகார் கொடுத்தீர்களா? இதை சதர்ன் ரயில்வே கவனத்திற்கு கொண்டு செல்லவும்.

    பதிலளிநீக்கு
  3. அக்கா, யாருமே இதப்பத்தி (ரயில்களின் அழுக்கை) எதுவுமே எழுதறதில்லையே, நாந்தான் ரொம்ப “சுத்த சூஃபி”யா இருக்கோம்போல, அதான் நமக்கு மட்டும் இது பெரிசாத் தெரியுதுபோலன்னு நினச்சுப்பேன். நானும் ஊருக்கு வந்திருந்தப்ப ரெண்டுமூணு முறை டிரெயின்ல போக வேண்டியிருந்துது. உவ்வே வராத குறைதான்.... நாளாக நாளாக ரயில்வேயின் பாரம்பரியம், பழமை, ஹெரிட்டேஜ் கூடுதோ இல்லியோ, ரயில் பெட்டிகளின் அழுக்கு கூடிகிட்டே போகுது!! :-((((

    பெட்டிகளின் சீட், தரை, பாத்ரூம் எதுவுமே ஒண்ணுக்கொண்ணு குறைவில்லாம அழுக்குமயம்!! பத்தாததுக்கு எலி, கரப்பான்பூச்சிகளின் ராஜ்யம் வேறு!! நாங்கள் ஏஸி கோச்சில் பயணம் செய்தபோது, போர்வை, கம்பளிகள் எல்லாம் பாத்ரூம் அருகே மலைபோல் குவித்துப் போடப்பட்டிருந்தது. கேட்டதற்கு, பயன்படுத்தப்பட்டவைகளை லாண்டிரிக்குப் போட வைத்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், கொஞ்ச நேரத்தில் எக்ஸ்ட்ரா போர்வை/கம்பளி கேட்டவர்களுக்கு அதிலிருந்தே எடுத்துக் கொடுத்ததையும் பார்த்தோம்!! :-(((( எங்களுக்குத் தரப்பட்டிருந்த போர்வைகளிலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அடையாளங்கள் இருந்தது!!

    ஒரு அட்டெண்டரோ பயங்கர மப்பில்!!

    சாலை விபத்துகளுக்குப் பயந்துதான் ரயில்களில் பயணம் செய்கிறோம், வேறு வழியில்லாமல்!! :-(((( இனி துணிந்து பஸ்/கார்களில் சென்றுவிட வேண்டியதான் போல!!

    பதிலளிநீக்கு
  4. தேனு,காரைக்குடியில் இருந்து திரும்பிய உடனே ரயிலில் வந்த வெறுப்பில் உடனே பதிவா?நீங்கள் வந்த அதே வண்டியில் எனக்கும் நிறைய கசப்பான அனுபவம் உண்டு

    பதிலளிநீக்கு
  5. நிஇங்கள் சொல்லுவது உண்மைதான்

    பதிலளிநீக்கு
  6. இன்று என் வலையில்
    நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

    பதிலளிநீக்கு
  7. நம் கண்ணெதிரிலேயே அட்டெண்டர் பிளாங்கெட்டை அழகாக மடித்து வைப்பதில் இருந்து அது அடுத்த பயணிக்கு சலவை செய்யாமலே வழங்கப்பட்டுவிடும் என்று தெரிகின்றதே.பிளாங்கெட்டில் இருந்து வரும் முடை நாற்றத்துக்கே பயந்தே கொடுக்கும் இரு வெண்ணிற பெட் ஸ்ப்ரெட்டை போர்த்திக்கொள்ளவேண்டும்.குளிர்காலங்களில் நாம்தான் பிளாங்கெட் எடுத்து செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நம் கண்ணெதிரிலேயே அட்டெண்டர் பிளாங்கெட்டை அழகாக மடித்து வைப்பதில் இருந்து அது அடுத்த பயணிக்கு சலவை செய்யாமலே வழங்கப்பட்டுவிடும் என்று தெரிகின்றதே.பிளாங்கெட்டில் இருந்து வரும் முடை நாற்றத்துக்கே பயந்தே கொடுக்கும் இரு வெண்ணிற பெட் ஸ்ப்ரெட்டை போர்த்திக்கொள்ளவேண்டும்.குளிர்காலங்களில் நாம்தான் பிளாங்கெட் எடுத்து செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. ஏ.சி கோச் லே இப்படின்னா, சாதாரண வகுப்புல எப்படி இருக்கும், ஐயோ,ஐயோ ,..

    பதிலளிநீக்கு
  10. ///இதில் பல கேள்விகள். தட்காலில் புக் செய்தாலும் உரிய ப்ளாங்கெட்டுகள் வழங்கப்படாதது ஏன்.? ரூபாய் 705 கட்டியும் இந்த நாற்றத்தில் பயணிக்கவேண்டும் என தென்னக ரயில்வே நினைக்கிறதா. ? உரிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்படாத ப்ளாங்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவது ஏன். சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்காரப்பெண்மணி செட்டிநாட்டு ஹெரிட்டேஜ் ஹோம்களைப் பார்த்துவிட்டு என்னுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு இது வழங்கப்பட்டிருந்தால் அவருடைய தென்னக ரயில்வே பற்றிய மதிப்பீடு என்னதாக இருக்கும். ///

    அவரும் ஒரு பிளாக்கராக இருந்தால் இன்னேரம் அவரது மொழியில் தனது பிளாக்கில் விளாசித்தள்ளி இருப்பார்.ஹா..ஹா..ஹா..


    தேனு,ரயில் பயணத்தில் ரொம்ப சூடாகிட்டீங்க போலிருக்கு.ஊருக்கு போய் விருந்து சாப்பிட்டு,பயணித்த களைப்புத்தீர நல்லா ரெஸ்ட் எடுங்க‌

    பதிலளிநீக்கு
  11. நாகர்கோவில் டூ மும்பை டிராவல் பண்ணி பாருங்க இன்னும் நிறைய நாற்றம் அங்கே இருக்கிறது, என்னத்தை சொல்ல எல்லாம் நம்ம சாபக்கேடு....!!!

    பதிலளிநீக்கு
  12. தேனக்கா....அந்நியனிடம் புகார் கொடுங்கள். ஹா..ஹா... :-)



    மகனே...அந்த டி டி ஆர் ..காலி :-))))

    பதிலளிநீக்கு
  13. அடக்கடவுளே... ஏ.சி.யில் வந்த உங்க நிலையே இப்படின்னா... என்னத்ச் சொல்ல...

    பதிலளிநீக்கு
  14. சரியான பதிவு..
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. இதெல்லாம் மிகவும் கொடுமை தான் மேடம். அக்கிரமம். அநியாயம். கேள்வி கேட்பார் இல்லாமலும், கேட்டாலும் பதில் சொல்வார் இல்லாமலும் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக ஆகிவருகிறது.

    அதிகப்பணம் கொடுத்து, AC Class இல் வருவது நிம்மதியாக, படுத்துக்கொண்டு வருவதற்குத் தானே! அதற்குள் இவ்வளவு தொல்லைகளா?

    தீவிரவாதிகள் அவர்களாகவே உருவாவதில்லை. இது போன்று கஷ்டங்களை அனுபவிக்கும் போது உருவாக்கப்படுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

    வாழ்க நமது இந்தியன் ரயில்வே!

    பதிலளிநீக்கு
  16. Very Sad. It is better carry what we require rather than depending on Railways. Sorry for English typing :)

    பதிலளிநீக்கு
  17. தேனம்மை, உங்கள் வருத்தம் நியாயமானதே. உண்மையில் கோச்சுகளில் வழங்கப்படும் போர்வை தலையணைகள் நிர்வாகத்தால் வழங்கப்படுவன அல்ல. தனியாரால் காண்டிராக்ட் முறையில் வழங்கப்படுவது. சில வண்டிகளில் மட்டுமே இரயில்வே ஊழியரால் வழங்கப்படும். ஆனாலும், சலவை, கோச்சில் ஏற்றுவது வரை காண்டிராக்டரின் பொறுப்பு. இத்தகைய குறைகளுக்காக தண்டனைத் தொகை விதிக்கப்படும். இதைச் சரிக்கட்ட சலவைச் செலவை குறைக்கிறார்கள்.
    ஒரு பயணியாக நிறையக் கேள்விகள் எழலாம். ஆனால் இதிலும் மானோபலி, கோர்ட்டு வழக்குகள் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கிறது. காண்ட்ராக்டை கேன்ஸல் செய்து அடுத்து டெண்டர் விட்டாலும், குறிப்பிட்டவர்களே விண்ணப்பிப்பார்கள்.
    அதே போல்தான் கழிப்பறை சுத்தகரிப்பும். மற்றபடி, மற்றவருடைய போர்வையை எடுப்பது, தரையில் குழந்தையை படுக்கச் செய்வது, ஒரு வேளை குழந்தை அசுத்தம் செய்துவிட்டால் சொல்லாமல் மடித்து வைப்பது போன்றவை சக பயணிகள் அவ்வாறு செய்வது தவறு என்று உணராதவரை ஒன்றும் செய்யமுடியாது. கூடிய விரைவில் சென்னை, திருவனந்தபுரம் இரு இடங்களிலும் இயந்திரமயமாக்கப்பட்ட லாண்டரி வரவிருக்கிறது. அதன் பிறகு நிர்வாகத்தினால் சப்ளை செய்யப்படும்போது இத்தகைய குறைகள் இருக்காது.
    நன்றி

    பதிலளிநீக்கு
  18. சிரமமில்லாம வர்றதுக்குத்தான் கூடுதல் பணம் கொடுத்து ஏசியில் வர்றோம்.. அங்கேயும் இப்டியா!!..

    த்ரீ டயரில் ஏசி, நான்-ஏசிக்கிடையே ஒரு வித்தியாசமும் இல்லை.. வழியில் ஏறும் மக்களின் சீட் ஆக்கிரமிப்பு, விற்பனையாளர்களின் வியாபாரம், கையேந்தும் குழந்தைகள்ன்னு எல்லாம் ஒண்ணு போலத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  19. ஏ சி கோச்சே இப்படி இருக்குதா

    பதிலளிநீக்கு
  20. ரயிலில் பயணிப்பது இப்படிக் கொடுமையாகத் தான் இருக்கு அம்மா.
    நான் உயிரைக் கையில் பிடித்து பயணித்தேன் ரயிலில். நேரமிருந்தால் என்னுடைய இந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள் அம்மா உங்களுக்குப் புரியும் .

    http://vaarthaichithirangal.blogspot.com/2010/12/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  21. Kora solratha vittupottu aduthavaatti pogumpothu kaiyoda blanket kondu ponga. Madurai to Chennai kpn volvo 900 rs ungalukku ac pottu alungaama kulungaama pantry facility kuduthu 785 roovakku rameshwaram vara kooptuporaangalla blanket kondu pona ennavam kondu ponga. Madurai to Chennai kpn volvo 900 rs ungalukku ac pottu alungaama kulungaama pantry facility kuduthu 785 roovakku rameshwaram vara kooptuporaangalla blanket kondu pona ennavam

    பதிலளிநீக்கு
  22. Railway lossla irukkuthu oru 100 ra per ticket compensate panna readya? Kurai mattum sollathinga ungala nambi padikka 4 per irukkanganna avangalukku nalla visayatha parappunga

    பதிலளிநீக்கு
  23. AC கோச்சின் பல அசௌகர்யங்களில் சிலதை பட்டியல் இட்டிருக்கிறீர்கள் . எனக்கென்னமோ சிறு வயதில் ஜன்னலோர இடத்துக்கு அடி பிடி போட்டு கண்ணில் கரித்துகள் விழ , ரயிலில் பயணம் செய்த இன்பம் அதன் பின் கிடைக்கவே இல்லை

    பதிலளிநீக்கு
  24. அடக்கொடுமையே,என்னத்த சொல்ல....ஆனா நான் இதுவரை ரயிலில் பயணம் செய்ததில்லை....

    பதிலளிநீக்கு
  25. ***தென்னக ரயில்வேயின் புதுமையான சேவைகளுடன் சென்னை வந்து சேர்ந்தேன். எதனோடும் சமரசமாகப் போகவேண்டும் என்பதே எப்போதும் என் எண்ணம். **

    இப்படித்தாங்க நம்ம வீணாப்போனது. வெளியிலே இதைப்போல் சொல்லுங்கள். அதுதான் உங்க கடமை! கடமை தவறாதீங்க! :)

    பதிலளிநீக்கு
  26. தேனம்மையாச்சி, என்ன பண்றது பஸ் ல போறதவிட இதுல கொஞ்சம் செளகரியமா தூங்கிட்டே போய்டுறோம்ல.

    5 வயசுக்குக்குள்ள இருக்கிற குழந்தைக்கு ட்ரெயின் ல டிக்கெட் எடுக்கவேண்டாம்.அப்புறம் அவுங்கள என்ன பண்றது கீழ படுக்கவைக்காம??

    அந்த அப்பர் பெர்த் விஷயம் ரொம்ப கரெக்ட் ஆச்சி, 4 டிக்கெட் தட்கல்ல வாங்கினாலும் 2அப்பர் 1சைடு அப்பர் அடுத்த பகுதில 1அப்பர் தான் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  27. உங்கள் ஆதங்கம் சரியே. சிலவருடம் முன் சேவை இத்தனை மோசமாய் இருக்கவில்லை. கட்டும் வரிக்கும் செலுத்தும் கட்டணத்துக்கும் கேள்வி கேட்டாலும் எந்தப் பலனும் இல்லை:(!

    பதிலளிநீக்கு
  28. ம்ம்

    ஏசியிலேயே இப்படின்னா சாதா க்ளாஸ்ல வர நாங்களாம் என்ன பாடுபடுவோம்னு நெனச்சு பாருங்க.... இதுல எப்பவாவது அன்ரிசர்வ் கோட்ச்ல வேற பயணம் :-(

    பதிலளிநீக்கு
  29. உங்கள் அனுபவம் பலருக்கும் உள்ளது. பொறுத்துக்கொண்டே பழகி விட்டோம். நாம் புகார் கொடுத்து அதைத் துரத்துவது இல்லை. ஒருவேளை நெறியாக்கப் படலாம்.
    மற்றொன்று: தமிழர்கள் " தத்கால் " என்று சொல்லப் பழக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  30. ரொம்ப நன்றி ரமேஷ்

    இதுக்கு பாலா சார் பதில் சொல்லி இருக்கார் கும்மாச்சி

    ரொம்ப சரியா சொன்னீங்க ஹுசைனம்மா.

    ஆமாம் ஸாதிகா

    நன்றி ராஜா

    ஆமாம் கருன்

    ஸாதிகா:)))))

    நன்றி துளசி

    நன்றி ஸ்ரீராம்( அந்நியன் ஞாபகம் வந்துருச்சா..!)

    உண்மை மனோ

    ஜெய்லானி..:)

    ஆமாம் கணேஷ்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி கோபால் சார்

    நன்றி பட்டியன்

    விளக்கத்திற்கு நன்றி பாலா சார்

    உண்மை சாரல்

    ஆமாம் சரவணன்

    படித்தேன் ஜிஜி.. ரொம்ப கொடுமை.

    அறிவுரைக்கு நன்றி கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்) அப்பாடா எவ்வளவு பெரிய பேரு.

    கே பி என் பஸ்ஸில போர்வை கொடுக்குறாங்க கேரள தமிழரே.

    உண்மை ரூஃபினா

    ஆமாம் மேனகா

    நன்றி வருண்

    உண்மை மனசு

    உண்மை ராமலெக்ஷ்மி

    ஆமாம் ஆமீனா..:(

    நன்றி நெற்குப்பத் தும்பி.. தத்கால்தால் ஆங்கிலத்தில் சொல்வதால் தட்கால் என எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  31. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...