எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஏப்ரல், 2023

வடுவூர் பறவைகள் சரணாலயம் - சம்மர் ஸ்பெஷல் ஸ்பாட்.

 மன்னைக்குச் சென்று திரும்பிய போது வடுவூரின் வழியாகத் திரும்பி வந்தோம். ( தஞ்சை சாலை ). அங்கே எதிர்பாராவிதமாக இந்தப் பறவைகள் சரணாலயத்தைக் கடக்க நேர்ந்தது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ். 



மரவாயில்  வரவேற்பு. பெருகிக் கிடந்தது வடுவூர் ஏரி.


அதன் முன்னாலேயே பறவைகள் வாட்ச் செய்ய வசதியாக ஒரு சின்ன ஸ்டேஜ்.
தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்த சரணாலயம். 
இங்கேயே சூழல் அங்காடி என்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எக்கோ ஷாப் என்னும் கடை உள்ளது. 
காம்பவுண்ட் சுவர்களில் எல்லாம் விதம் விதமான பறவைகள். 

இவை எல்லாம் இங்கே வந்து குவிந்திருக்கின்றன. நம் காமிரா கண்ணில்தான் சரியாகத் தெரியவில்லை. பைனாகுலர் மூலம் பார்த்தால்தான் தெளிவாகத் தெரியும். 


பாம்பு, ஆமை, பறவைகள், நீர்நிலை, மரங்கள் என உயிரோட்டமான பாண்ட் எக்கோசிஸ்டம். !
இவ்ளோதாங்க நம்ம காமிரா கண்ணுக்குத் தெரிஞ்சது. அதுனாலதான் ஓவியத்தை எல்லாம் ஃபோட்டோ எடுத்துப் போட்டு வைச்சிருக்கேன். :) 
திட்டுத் திட்டாக அங்கங்கே இருக்கும் பசுமைகளில் பறவைகள் மீன்பிடித்து ஓய்வெடுக்கின்றன. 
மிக அழகான ஏரி. 
மிக அழகான காட்சிகள். தண்ணென்ற காற்று. ஏகாந்தம். 


நிச்சயம் தஞ்சாவூர், மன்னார்குடி சாலையில் போனால் இங்கே இறங்கிப் பார்த்துட்டுப் போங்க.

நேரம் கிடைச்சா டிக்கெட் வாங்கி உள்ளே நடைபாதை மூலம்போய் ஏரியின் உள்பக்கங்களில் பறவைகளைப் பார்க்கலாம். 


வடுவூரில் நாங்கள் பள்ளி செல்லும் காலத்தில் எல்லாம் இது இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு பசுமையான ஏரியின் வெண்ணிறப் பறவைகளைப் பார்த்துப் பரவசமடைந்தோம். சிறுவர்களுடன் சம்மர் உலா  (கலவை சாதம் கட்டிக்கொண்டு பிக்னிக்) செல்ல ஏற்ற இடம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...