தொழில் நுட்பங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. அன்றைக்கு உபயோகப்படுத்திய அநேகப் பொருட்களை இன்று செல்ஃபோன் இடமாற்றம் செய்துவிட்டது.
பேஜர், ஃபேக்ஸ், ரேடியோ , டேப்ரெக்கார்டர், கம்ப்யூட்டர், லாப்டாப், ஐ பாட், டிவி, சினிமா, காமிரா, ஆடியோ கேஸட்ஸ்,வீடியோ கேஸட்ஸ், கம்ப்யூட்டர் ஹேண்ட் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன், கடிகாரம், கால்குலேட்டர்,டிக்கெட் புக்கிங், லாண்ட்லைன் தொலைபேசி, அஞ்சல் சேவை, கொரியர் , திசைகாட்டி, நியூஸ் பேப்பர்கள், மேகஸீன்கள் போன்றவற்றை செல்ஃபோன் ஒரே வீச்சில் தூக்கிக் கடாசிவிட்டது.
அதுவும் செல்ஃபோனில் ஆன்லைன் பார்க்க ஆரம்பித்தபிறது எல்லாமே ஒரு சொடக்கில்.உடனே இண்டர்நேஷனல் கால் பேசுவது என்பதை அன்றைக்கெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. நாள் கணக்கில் ஆகும். இன்றைக்கு நினைத்தவுடன் வாட்ஸப்பில் ( முன்பு ஸ்கைப், மெசஞ்சர், ) பேச முடிகிறது. அதுவும் வீடியோ கால் !
இந்த ரேடியோ, ரேப்ரெக்கார்டர் எல்லாம் இப்போதும் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவோர் குறைவுதான். 85 களில் அனைவர் வீட்டிலும் ரேடியோ இருக்கும் . காலை ஏழேகால் , மதியம் பன்னிரெண்டேமுக்கால், மாலை 6 மணிச் செய்திகளும், சிலோன் பாடல்களும், ஞாயிறு மதியம் அகிலபாரத நாடகம், இரவில் சில நாடகங்களும் மதியம் பழைய & ஹிந்திப் பாடல்களும் கேட்க வாய்க்கும்.
டேப்ரெக்கார்டர் வந்த புதிதில் ஆராதனா, பாபி ஆகிய கேஸட்டுகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். அம்மாவிடம் சில சினிமாக்களும் கேஸட்டுகளாக இருந்தன. சங்கே முழங்கு, திருவிளையாடல் போன்றவை.
பாக்யராஜின் புதிய வார்ப்புகளின் “ வான் மேகங்களே வாழ்த்துங்கள் “ என்ற பாடலை ரதி அக்னிஹோத்ரிக்காகப் பலமுறை கேட்டிருப்போம். ”சுராலியா ஹை தூ மேரே தில் கோ “ “ ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ “ ” மேரே சப்னோங்கி ராணி கப் ஆயே கீ தூ “ எல்லாம் அப்போதைய தேசிய கீதம்.
ப்ரொஃபஸர் அழகர்சாமி அவர்களின் மகள் ராணி, சுதா ஆகியோர் எங்கள் காலனியில் வசித்து வந்தார்கள். அவர்கள் மாமா மலேஷியாவிலிருந்து அவர்களுக்கு ஒரு டேப்ரெக்கார்டர் அனுப்பினார். அதில் தாமரைப்பூ போட்டிருக்கும் . பக்கவாட்டில் ஸ்விச்சுகள் இருக்கும். அதில் வார் இருப்பதால் அதை ராணி தோளில் போட்டுக் கொள்வார். “ தாமரைப்பூ டேப்ரெக்கார்டர் “ என அவள் சொல்வது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. :)
இந்த டேப்ரெக்கார்டர் என் திருமணத்தில் மாப்பிள்ளைக்குச் ( மாப்பிள்ளைக்கு வைக்கும் சாமான்கள் ) சீராக வைத்தது. டேபிள்ஃபேன், டேபிள் , சேர், உடைகள், உள்ளாடைகள், துவாலைகள், சூட்கேஸ், ஷேவிங் செட், செண்ட், பாடிஸ்ப்ரே இன்னபிற
இந்த ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர்/ரேடியோவை நான் கிச்சனில் பாட்டுக் கேட்க என் கணவர் வாங்கிக் கொடுத்தார் :)
இந்த கேஸட்டுக்களெலாம் திருமணம் செய்தபின் வாங்கியது. அம்மா , மாமா, தம்பி ஆகியோர் கொடுத்ததும் உள்ளது . அழகன் பாட்டுக்கள் ரொம்பப் பிடிக்கும்.
அழகன் ( ஏக்நாத் ஆடியோ ) , கிழக்கு கரை ( ராகம் கேஸட்ஸ் ), காதலன் & தளபதி ( லஹரி கேஸட்ஸ் ), காதல் கோட்டை, காதல் தேசம் ( சிடி ப்ரீ ரெக்கார்டிங் )
எஸ்வி சேகரின் நாடகங்கள். டோனி ஹெச் எஃப் 60, வீடியோகான், லக்கி ஆடியோ, நாடகாலயா ஆகியவற்றின் ஆடியோக்கள்.
ஒரு சொந்தவீடு வாடகை வீடாகிறது, எல்லாரும் வாங்க, அப்பாவுக்குக் கல்யாணம், அல்வா ஆகியன கேட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம்.
மும்பை எக்ஸ்பிரஸ், தொட்டில் குழந்தை, வீரா , ஜெண்டில்மேன் ஆகியன ராஜ்கமல், ஏவி எம், பிரமிட் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆடியோ ரிலீஸ் கேஸட்டுகள்.
மியூசிக் ஃபார் மெடிடேஷன் ( வன்ராஜ் பாடியா ) , த எலிமெண்ட்ஸ் ஆஃப் வாட்டர் ( ஷிவ்குமார் சர்மா ), சவுண்ட் ஸ்கேப்ஸ் ( மியூசிக் ஆஃப் த டெஸர்ட்ஸ் - ஸாகிர் ஹுஸேன் ), த எலிமண்ட்ஸ் ஸ்பேஸ் - ஸாகிர் ஹுஸேன் எல்லாம் மியூசிக் டுடேயின் காஸட்டுகள்.
காயத்ரி மந்திரம் ஹெச் எஃப் 60 கேஸட். இதெல்லாம் தலைவர் வாங்கியவை.
80 களின் சூப்பர்ஹிட்டுகள் ( கீத் ரெக்கார்ட் லைப்ரரி, , கோவை ) , பயானீர் என் ஒன் 90, எல்லாம் டிடிகே 90 கேஸட்ஸ். இதில் கண்ணன் பாட்டுக்கள் ஸ்பெஷல். இவையும் பயானீர் என் ஒன் ஏ 90 இல் அதிக பாட்டுக்கள் கொண்டது.
சிலவற்றில் அம்மா டேப் செய்து கொடுத்த பாட்டுக்கள். சிலவற்றை நானே கடையில் கொடுத்துப் பதிந்தேன். சில ரெக்கார்டர்களில் நாமே இரண்டு கேஸட்டுகள் போட்டுப் பதிந்து கொள்ளவும் முடியும்.
கண்ணன் பாடல்கள் ஸ்பெஷல் ( என் கணவரின் 25 ஆவது பிறந்தநாளின் போது ரெக்கார்ட் செய்து பரிசளித்தேன். கல்யாணமாகி ஆறு மாதத்தில் அவர் பிறந்தநாள் வந்தது )
சைட் ஏயில் கந்தர் சஷ்டி கவசம், சைட் பியில் ஸ்கந்தகுரு கவசம். தயாரிப்பு கிராமஃபோன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட்.
சுமாராக ஒவ்வொரு பக்கமும் 8 முதல் 11 பாடல்களை வரை பதியமுடியும்.
முதல்வன், ஹலோ, தாஜ்மஹால், ஆகியன டிடிகே டி 90.
வலையப்பட்டி எம் பி என் சேதுராமன் நாதஸ்வரம், எம் பி என் பொன்னுச்சாமி ஸ்பெஷல் தவில். இது வாணி ரெக்கார்டிங் கம்பெனியின் வெளியீடு.
சிட்டுக் குருவி பி சுசீலா ஹிட்ஸ் அருமை.
எல்லாம் விலை 35 ரூபாய்கள்தான்.
நேஷனல் பானசோனிக் சி - 7. இதில் குழந்தைகள் பேசியதையும் அவ்வப்போது டேப் செய்திருக்கிறேன்.
டிடிகே டி - 60 கேஸட்டுகள்.
ட் சீரீஸ் ஹெச் எஃப் 60 , ஃபைவ் ஸ்டார் ஆடியோ, டிடிகே பிரில்லியண்ட் கேஸட் பி 60 இவற்றில் பழையபாடல்கள் ஓல்டு கலெக்ஷன்ஸ், எம் எஸ்ஸின் சுப்ரபாதமும் உண்டு. !!.
ட்ரான்சிஸ்டரை மறக்க முடியுமா. இது கிச்சன் ஸ்பெஷல்.
பாட்டுக் கேட்க மட்டும். இன்னும் கையடக்கமான ட்ரான்சிஸ்டர்கள் கிரிக்கெட் கேட்க சகோதரர்கள், மாமாக்கள் உபயோகிப்பார்கள்.
ஒரு காலத்தில் இவை சலுகையில் வழக்கப்பட்டதால் நரிக்குறவர் இனமக்கள் தோளில் வார் வைத்த ட்ரான்சிஸ்டரில் பாட்டுக் கேட்டபடி செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
ஃபிலிப்ஸ், மர்ஃபி ரிச்சர்ட்ஸ் ( ஒரு அழகிய குழந்தை சிம்பலாக அமர்ந்திருக்கும் ) எல்லாம் மறக்க முடியுமா.
இது கல்யாணத்துக்கு வைத்த டூ இன் ஒன். நேஷனல் பானசோனிக்.
பாட்டுக்கேட்கலாம், ரேடியோ உண்டு . ரெக்கார்டும் செய்யலாம்.
இவை இரண்டும் பல்லாண்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஏறக்குறைய 86 இல் இருந்து 2009 வரை. அதாவது நான் ஆன்லைனில் எழுத ஆரம்பிக்கும் வரை :)
23 மிக நீண்ட வருடங்கள் என்னோடிருந்தவை இவை. இப்போது அட்டைப் பெட்டியில் துயில்கின்றன. அதன்பின் வாங்கிய எம்பி 3 ம் ஏதோ ஒரு அட்டைப் பெட்டியில் இருக்கிறது :)
அதேபோல்தான் டிவிடி , விசிடி ப்ளேயர்களும் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை.
இவை எல்லாம் முன்னே டிவிடியில் பார்த்தோம். 80 களில் விசேஷ நாட்களில் டெக் விலைக்கு எடுத்து வாங்கிப் போட்டு ஒரே நாளில் 3, 4 கேஸட்டுகள் பார்ப்பார்கள்.
பிள்ளைகள் பத்தாவது, ப்ளஸ்டூ படிக்கும் காலங்களில் இவையே எங்களின் பொழுதுபோக்கு. கேபிள் கனெக்ஷன் கொடுக்கவில்லை.
இந்தப் படம் மிகவும் அருமை. லானில் புல்வெட்டும் மனிதர் அபார அறிவு பெற்று கேபிள்களில் எல்லாம் புகுந்துவிடும் கதை.
அன்றைய பொழுதுபோக்கு இன்றைக்கு அடைசல் :)
தலைவருக்குப் பிடித்த தலைகள்.
இது வாக்மென் எனப்படும் மினி டேப்ரெக்கார்டர். பாண்ட் பையில் வைத்துக் கொண்டு அல்லது இடுப்பில் பேஜர் போல் கட்டிக் கொண்டு நடந்து கொண்டே ஹெட்ஃபோனில் பாட்டுக் கேட்கலாம். சபாபதி மாமா ஹாஸ்டலில் வசித்த அவர் மகனுக்காக 80 களில் வாங்கிக் கொடுத்தது ஞாபகம் வருகிறது.
இந்த வாக்மெனைத் தலைவர் சிலகாலம் உபயோகப்படுத்தினார் :) அதன்பின் அட்டைப் பெட்டியில் சவாரி செய்கிறது.
இதுவும் ட்ரான்சிஸ்டர்தான். என் கணவரின் சிஸ்டர் அமெரிக்கா சென்றபோது வாங்கிக் கொடுத்தது. ஏலியன்போல் ரிஸீவர் உள்ள இதை இதன் நிறம் மனம் கவர அலங்காரப் பொருளாக ஷோகேஸில் வைத்துள்ளோம்.
இவை வாக்மெனின் மினி கேஸட்ஸ்.
இரண்டு இன்ச் தான் அகலம்.
இந்த கேஸட்டுகளின் நாடாக்கள் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை சிக்காகிப் போனால் டேப்ரெக்கார்டர் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை ஆகிவிடும். அல்லது குரல் கமறக் குழறும்.
எனவே வெளியே எடுத்து ரிப்பனை நீவி விட்டு இருபக்கமும் பென்சில் அல்லது பால் பாயிண்ட் பேனாவால் சுற்றிச் சீராக்கி வைப்போம்.
பழைய சிடி ப்ளேயரை அலங்காரப் பொருளாகத் தொங்க விடுவது மாதிரி இதிலுள்ள ரிப்பன்களை எல்லாம் எடுத்து க்ரோஷாவில் பை பின்னமுடியுமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் :) எல்லாமே ஒரு காலகட்டம் வரைக்கும்தான் ஓவியம், அதன் பின் அநாவசியம்தான். :)

அது ஒரு அழகிய நிலாக்காலம்...!
பதிலளிநீக்குபழயவை
பதிலளிநீக்குபொருட்காட்சிக்கு
வந்துவிடுகிறது.
டேப் ரெகார்டரில் தெர்ந்தவர்கள் குரல் பதிவு செய்வதே அப்போதைய ட்ரென்டாக எனக்கு இருந்தது என்னிடம் வேண்டியவர்களின் குரல்கள் எல்லாம் இருநதது ஒ அது அந்தக் காலம்
பதிலளிநீக்குஆம். நன்றி டிடி சகோ
பதிலளிநீக்குஉண்மைதான். வீட்டை அடைப்பதால் சிலசமயம் பழைய பேப்பர்காரரிடமும் போட்டு விடுகிறோம் யாழ்பாவண்ணன் சகோ
ஆமாம் பாலா சார். எல்லாரும் பாடி பேசி பதிவு செய்ததும் இருக்கு :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!