எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 மே, 2013

வாஷிங்டனில் புறநானூறு.

வாஷிங்டனில் திருமணம் என்ற புத்தகத்தை எழுதியவர் சாவி . மறக்கமுடியாத நகைச்சுவைப் புதினம் அது. 

தமிழுக்குச் சேவை செய்யும் நோக்கோடு இந்த வாஷிங்டனில் புறநானூறு மாநாடு பற்றி முகநூலில் பார்த்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

///வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்தும் பன்னாட்டு மாநாடு : புறநானூறு
வாசிங்டன் DC

ஆகஸ்ட் 31, 2013 – செப்டம்பர் 2, 2013


தமிழ் இலக்கியத்தில் புறநானூறு தனிச் சிறப்புடைய நூல். அது சங்ககாலத் தமிழர்களின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய ஓரரிய நூல்.

 அந்த அரிய நூலைப் பற்றிய செய்திகளும் அதிலுள்ள கருத்துகளும் தமிழர்களிடையே இன்னும் அதிகமாகச் சென்றடைய வேண்டும் என்ற
நோக்கத்தோடு, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து ‘புறநானூறு’ என்ற தலைப்பில்
ஒரு பன்னாட்டு மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், தமிழ் நாட்டிலிருந்தும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும்
தமிழறிஞர்கள் வந்து சிறப்புரை ஆற்றுவார்கள். இந்த மாநாட்டின் குறிக்கோளுக்கேற்ப, கட்டுரைப் போட்டி , மாணவர்களுக்கான விநாடி வினாப் போட்டி , பெரியவர்களுக்கான விநாடி வினாப் போட்டி, புறநானூறு - இசைப் போட்டி , புறநானூறு – ஓவியப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிகளுக்கான விதிமுறைகளுக்கும் கூடுதல் விவரங்களுக்கும் www.classicaltamil.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

புரநானூற்றைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு!

முதன்முறையாக மேலைநாடுகளில் நடைபெறும் இந்தப் புறநானூற்று மாநாட்டிற்குத் தமிழன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.///

வாழ்த்துக்கள். கலந்துகிட்டு கலக்குங்க. புறநானூறு பரிசை வெல்லுங்க. 



3 கருத்துகள்:

  1. வாஷிங்டன் செல்ல நான் தயார்.....

    போக வர வண்டி சத்தம் தர நீங்கள் தயாரா?

    பதிலளிநீக்கு
  2. ஹஹ ஒன்னரை லெட்சம் இருந்தால் நானே போயிருப்பேனே ஆர் ஆர் ஆர்..:)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...