லலித் கலா அகாடமியில் விகடன் குழுமம் வழங்கிய ஓவியக் கண்காட்சி. பிரபல ஓவியர்களின் ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து அந்த தொகையை தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அது. முக நூலில் விகடன் ஆசிரியர் கண்ணன் அழைத்திருந்தார் அனைவரையும்.
நம்ம யாருமே மறக்க முடியாத முதல் பத்ரிக்கை ஹீரோ.. அன்னைக்கும் இன்னிக்கும் என்னிக்கும் இந்த விகடன் தாத்தா அப்படியே இருக்கார்.. பருவ மாற்றம் , உருவ மாற்றம் எல்லாம் நமக்குத்தான். இன்னும் பல நூற்றாண்டுகள் இவர் நம்ம தலைமுறைகளுக்கும் சேவை செய்யணும்.
வீர சந்தானம் சாரை முதல்ல அங்கே பார்த்தேன். இந்த விநாயகர் ஓவியம் அவரோடது.
பத்ரிக்கை மூலமா அறிமுகமான ஓவியர்களை நாம மறக்கவே முடியாது. எனக்கு கோபுலு, மாருதி, ஜெயராஜ், ம. செ, வர்ணம், ராமு, ட்ராட்ஸ்கி மருது, ஆதிமூலம் எல்லாம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகின் வெகுஜனப் பத்ரிக்கையின் மூலம் அறிமுகமானவங்க. அவங்க வித்யாசமான ஸ்டைலை வைச்சே கண்டுபிடிக்கலாம். அது போல மதனுடைய கேரிகேச்சர் , சிம்புதேவன், எல்லாம்
நம்மை சிரிக்க வைத்தவை.
இந்தப் புகைப்படத்தில் கோபுலு சார் வரைந்த விகடன் ஓவியங்கள் ப்ரேமிடப்பட்டு பின்னால் இருக்கின்றன. மணியம் செல்வன் சாருடன் விகடனின் தூண்கள். மிக முக்கியமாக நம்ம கவிதையை எல்லாம் லே அவுட்டால ஜொலிக்க செய்கிற பாண்டியன் சாரைப் பார்த்தேன். ஆனால் அங்கே அடையாளம் காண முடியவில்லை. இப்போ வீட்டுக்கு வந்து ஃபோட்டோஸ் அப்லோட் செய்யும்போதுதான் விகடன் ஆசிரியர் கண்ணன் அவர பத்தி தன்னோட முகநூல் பக்கம் குறிப்பிட்டிருந்தது ஞாபகம் வந்தது. மிக்க நன்றி பாண்டியன் சார்.
அங்கே விகடன் ஆசிரியர் கண்ணன், கவின்மலர், சந்திரா தங்கராஜ் ஆகியோரைப் பார்த்தேன். விகடன் ஃபோட்டோகிராஃபர் ராஜசேகரனும் இருந்தார். இன்னும் நிறையபேர் தெரிந்த முகமாய்த் தெரிந்தது. ஒவ்வொருவராக சென்று விசாரிக்க யோசனை. அடுத்த முறை இந்த மாதிரி பொது நலத்தொண்டில் விகடன் ஈடுபடும்போது ஒரு நேம் பேட்ஜ் ஒவ்வொரு ஊழியருக்கும் கொடுத்தால் நலம். ஏன்னா நாம் அவங்க கிட்டயே போய் நீங்க இன்னாரான்னு விசாரிக்க தயக்கமா இருக்கு. !
இது நண்பர் ஜீவாவோடது. நான் பார்த்து அதிகமா அவரோடதுல ஒரு நீலம் வரும். BE COOL நு சொல்லாம சொல்றமாதிரி. ஜீவாவோட் ஓவியங்கள்ல கண்கள் ஒரு ஸ்பெஷாலிட்டி. இது பறவையும் அவளுமான ஒரு மனநிலை. எது யார்னு பிரிக்க முடியாம ரொம்ப அழகா இருக்கு இல்ல. தூது என்றும் கொள்ளலாம்.
ஹுசைனியின் ஸ்ட்ரோக்ஸ் கொஞ்சம் வித்யாசமானவை. பளிச் பளிச்தான்.
இது என் தோழி மீனாக்ஷி மதனோடது. இது போல மரம், பூக்கள் அவர் ஸ்பெஷாலிட்டி. இயற்கை விரும்பி.
இது அனுராதா நிகேதோடதும் மீனாக்ஷியோடதும் . அனு அங்கே உங்களுக்கு ஒரு ரசிகையும் இருந்தா. அவ பேரு வைஷ்ணவி. விஸ்காம் ஸ்டூடண்ட். உங்க அப்ஸ்ராக்ட் வகை ஓவியங்களைப் பார்த்து AWESOME நு சொல்லிகிட்டு இருந்தா. என் தோழிதான்னு சொன்னவுடனே அவங்க கிட்ட என்னோட வாழ்த்தை சொல்லுங்க.. REALLY SUPERB நு சொன்னா.
இது என் நண்பர் பி ஆர் ராஜனோடது. அவரோட கலர் காம்பினேஷனை வைச்சே கண்டு பிடிச்சுடலாம். ஃபேஸ் புக்கில் இவங்க எல்லாரோட ஓவியங்களையும் பார்த்து பரிச்சயமாக இருந்துச்சு. இவங்க ஸ்டைலும் கூட.
இது பத்மவாசனோடது. ஓவியங்களே புகைப்படம் மாதிரி இருந்த எப்பிடி இருக்கும். அதுதான் பத்மவாசனோட ஸ்பெஷாலிட்டி. அதுவும் கோயில் கோபுரங்கள், சிற்பங்கள் எல்லாம் நுணுக்கமா வரைவார். இதை ரெண்டு பேர் உக்கார்ந்து அணு அணுவா ஆராஞ்சுகிட்டு இருந்தாங்க.
இது பாரதி ராஜாவோடது. இந்த சேவலையும் இந்த ஸ்ட்ரோக்ஸையும் பார்த்தவுடன் தெரிஞ்சு போச்சு இது அவரோடதுதான்னு.
இது இளையராஜாவோடது. இன்னொரு இளையராஜாவும் இருக்கார். அவரோடது க்ரேயான்ஸ்ல இருந்துச்சு. விகடனில் வெளியான என்னோட 5 கவிதைகளில் 3 கவிதைக்கு படம் போட்டவர் அவர்.
இது ஆகத்திலேலே காஸ்ட்லி ஓவியம்.. விலை ஒண்ணும் அதிகமில்லை ஜெண்டில் மேன் சும்மா 4 லெட்சம்தான். என்ன ஸ்பெஷாலிட்டின்னா தங்க ஓவியம்...:)
இன்னும் மதன், ஆதிமூலம் சார், தோட்ட தரணி எல்லா ஓவியங்களும் எடுத்தேன். நிறைய இருக்கு கலெக்ஷனா. படம் எடுத்த நமக்கே இவ்வளவு பெருமைன்னா வரைஞ்சு அதை விற்ற பணத்தையும் தானே புயல் நிவாரணத்துக்காக வழங்கி இருக்கும் ஓவியர்களையும் , அதற்கு வழிவகை செய்து இப்படி பிரமாண்டமான ஓவியக் கண்காட்சி நடத்தி இருக்கும் விகடனையும் என்ன சொல்லி பாராட்டுறது.
என்னவென்று சொல்வதம்மா.. இரண்டு தளங்கள் முழுமையா ஓவியங்கள். இன்றே கடைசி. காணக் கண் கோடி வேண்டும். சென்னை மக்காஸ் . தவற விட்ராதீங்க. ஓவியங்கள் எல்லாம் 5, 000 லிருந்து 4 லட்சம் வரை இருக்கு. முடிஞ்சா வாங்குங்க, இல்லாட்டி போய் பார்த்து ரசிச்சிட்டாவது வாங்க. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.. அப்பிடின்னு சொல்வீங்க.
இந்த அரிய தொண்டில் ஈடுபட்டிருக்கும் ( இன்னும் அரிய பல தொண்டுகள் செய்திருக்கும் ) எங்கள் விகடனுக்கும், ஓவியப் பெருந்தகைகளுக்கும் வலைப்பதிவர் சார்பாக நன்றிகளும் , வாழ்த்துக்களும் . பெருகட்டும் மனித நேயம். !

நேரில் சென்று பார்க்காத குறையைத் தீர்த்தது உஙகள் பதிவு. விகடனைப் பிடிக்காதவர்கள் உண்டா தேனக்கா? நற் பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான , விவரனையான பதிவு சகோ..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
நல்லதொரு அருமையான பயனுள்ள பதிவு. சந்தோஷமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஎல்லாம் சென்னயில் மட்டும் தானா..
பதிலளிநீக்குஎங்க ஊர்ல கிடையாதா?
நன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி காவேரி கணேஷ்
நன்றி கோபால் சார்
நன்றி ஆர் ஆர் ஆர்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!