முதல் புத்தகம் சாதனை அரசிகள் புத்தகத் தயாரிப்பு முயற்சியில் இருக்கையிலேயே இரண்டாவது புத்தகத்தையும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டபோது அதற்கு குழந்தைக் கவிதைகளைத் தொகுத்துக் கொண்டுவரலாம் என நினைத்தேன். அதற்கு உடனே முகநூலில் கண்ட அழகுப் பேரரசி ஆராதனா முகம்தான் ஞாபகம் வந்தது. உடனே நண்பர் கதிர் மூலம் திரு. தாமோதர் அண்ணனிடம் தொடர்பு கொண்டபோது அவர்களும் புகைப்படங்கள் கொடுக்க சம்மதித்தார்கள். அது ப்ராசஸ் பை ப்ராசஸாக வரும்போது வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய ஆல்பமாக வந்தால் நன்றாக இருக்கும் என தாமோதர் அண்ணனே அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள நண்பர் செல்வகுமார் வடிவமைப்பு செய்து ( கலர் ப்ரிண்ட்ஸ் என்பதால்) விகடனின் ரத்னா பிரிண்டர்ஸிடம் கொடுத்து புத்தகமாக்கம் திரு தாமோதர் சந்துரு என்ற பெயருடன் ப்ரிண்ட் ஆனது.திருமணத்துக்கு முதல் நாள் திருப்பூரைச் சேர்ந்த சிபி டைமண்ட்ஸ் ரொட்டேரியன் திரு. பரசுராம் வெளியிட, மதுரை வலைப்பதிவர் திரு. கார்த்திகைப் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
சீர் வரிசையும் அழகு. பெண்ணுக்கு 9 விதமான வீணை வடிவிலான கூடைகளில் இனிப்பு, பழ வகைகள் , புடவை, நகை சீர்வரிசைகள் என அசத்தல். கொங்கு நாட்டுப் பழக்கம் ஆண்கள் அனைவரும் ஒரு வரிசையில் நின்று வந்தவர்களை கரம் கூப்பி வரவேற்றது. பெண்களும் அனைவரும் வரிசையாக நின்று கரம் கூப்பி
வரவேற்றது கண்கொள்ளாக்காட்சி.. விருந்துக்கு வந்த பெண்கள் அனைவரும் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அழகு.. யார் திருமணப் பெண் என்றே தெரியாத அளவு அங்கே அழகிகள்..!!. மூன்று விஷயங்கள் எனக்குப் பிடித்தது. ஒன்று, அவர்கள் அனைவரும் டிசைனர் புடவை அணிந்திருந்தது. அதன் விலையை விட அந்த டிசைனர் ப்ளவுஸுகளுக்கு அதிகம் செலவழித்திருப்பார்கள். இரண்டாவது அனைத்து யுவதிகளும் இடுப்பில் ஒட்டியாணம் அணிந்திருந்தது. அட.. இன்னும் துடி இடைப் பெண்கள் மிச்சம் இருக்கிறார்களே.. நல்ல வேளை .. குண்டா இருந்தா தங்கம் விக்கிற விலையில் என்ன செய்றது..:))
மூன்றாவது ஒவ்வொருவரும் விதம் விதமான பூக்கள் தலையில் வைத்திருந்தது. அவர்கள் பூக்களை தாங்களே செய்து பெயிண்ட் செய்து வைத்திருந்தார்கள். கலை நயம் மிக்க பூக்கள். இதை எல்லாம் பார்த்துப் பிரமித்த எனக்கும் என் கணவருக்கும் ஆச்சர்யமளித்த விஷயம். முறைக்காரர்கள் யாரும் போய் போய்த் தாங்கித் தாங்கி அழைக்காமலே தாங்களாகவே அந்த நடைமுறைகளை செய்தது. வீட்டுக்காரர்கள் பாடு விருந்தாளிகளைக் கவனித்தால் போதும்.
இரவு மிகப்பிரம்மாண்டமான விருந்துக்குப் பின் மறுநாள் காலை திருமணம். மண்டபத்தில் உறவினர்கள் புடை சூழ.. முதல் நாளே தோழிகளாகி விட்ட திரு தாமோதர் சந்துரு அண்ணனின் தங்கைகள் , சித்தப்பா பெண்கள். அவர்களின் குழந்தைகள், செல்வி அண்ணி, அண்ணின் மகன் முரளி, ஷாலினி, சின்ன மகன் அருண் , மைதிலி அனைவரும் நன்கு பழகி பேசினார்கள். கவிதை குறித்து சொல்லும்போது அவர்கள் உங்களுக்கு குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமோ அதெல்லாம் உங்க கவிதைகளில் தெரியுது என்று சொன்னார்கள். நன்றி தங்கைஸ் அண்ட் அக்காஸ்..:) நாம நம்மிடம் பழகும் அனைத்துப் பேர்களிடமும் இருக்கும் குழந்தைத் தனத்தையும் ரசித்துக் கவிதையில் பதிந்திருக்கிறோம் எனவும் சொல்லலாம்..:)
எந்த டென்ஷனும் வியர்வையும் களைப்பும், அலுப்புமில்லாமல் இரண்டாவது புத்தகத்தை கையில் பிடித்தபோது மென்மையாய் அது .,”ங்கா..” என்றது என்னைப் பார்த்து.. அட ஆராதனா பேசினாள் அதிலிருந்து.. இன்னும் கவிதை ரூபத்தில் பலரோடு உரையாடிக் கொண்டும், பலர் உள்ளத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுமிருக்கிறாள் அவள்.. அது அண்ணன் செய்த சீர் என நிறைவாய் இருந்தது.. நன்றி தாமோதர் சந்துரு அண்ணன் & செல்வி அண்ணி..!!!
குழந்தைகளையும் ரோஜாக்களையும் ரசிக்காதவர்கள் யாரும் உண்டாக்கா? அனைத்தையும் குறிப்பிட்டு நன்றி சொன்ன பாங்கு என்னைக் மிகவும் கவர்ந்தது. ங்கா மட்டுமல்ல... இன்னும் பல புத்தகங்கள் வெளியாகி நீங்கள் மேலும் மகிழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன்ன பேறு பெற்றேன் உங்களை தங்கையாக அடைந்திட.. சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எங்கள் குடும்பத்தின் அனைத்து உறவுகளும் இதய பூர்வமான அன்பினைச் சொல்லிக் கொள்கிறோம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மை லக்ஷ்மனன் அவர்களே
பதிலளிநீக்குஇது போன்ற நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் தரலாமே… மதுரைக்காரை அழைத்த தாங்கள் , உடன் வரச் சொல்லியிருந்தால் இத்தனை சிறப்பு வாய்ந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்குமே… வாழ்த்துக்கள் தொடர்ந்து புத்தகங்கள் வெளிவர வேண்டும்.
பதிலளிநீக்குஇன்னும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள் தேனக்கா..
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் தேனக்கா !
பதிலளிநீக்குஅழகாய் விவரித்து இருக்கிறீர்கள் தேனு.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
en ammaavin computer il thavaruthalaga click seithu skip aki intha comment marukapattu vittathu .. so ithi inge publish seithullen. Mathavi thanks da..:)
பதிலளிநீக்கு///மாதேவி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"அருண் திருமணமும், ஆராதனாவின் , ”ங்கா..” வெளியீடும...":
வாழ்த்துக்கள்!. ///
ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் நுட்பத்துடன் வர்ணித்த அழகு, நாங்களும் விழாவில் கலந்துகொண்ட உணர்வினைத் தருகிறது. இரண்டாவதுப் புத்தகவெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇத்தனை உணவு வகைகளா? ஆஹா மிஸ் பண்ணி விட்டேனே!!!
முதல் நாள் காலை உணவோடு வேலைகாரணமாக ஓடி விட்டேன்
அண்ணன் செய்த சீர் அருமை...
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி சந்துரு அண்ணன்
நன்றி அமரபாரதி
நன்றி சரவணன்
நன்றி சாந்தி
நன்றி ஹேமா
நன்றி மஹி
நன்றி ரத்னவேல் சார்
நன்றி மாதேவி
நன்றி கீதா
நன்றி வேலு
நன்றி ராஜி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!