செவ்வாய், 13 செப்டம்பர், 2022

காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

 3021.மட்டம் தட்டுறது, மண்டைல தட்டுறதுன்னு ஒரு கடலெண்ணெய் விளம்பரம், ஜெம்ஸ் மிட்டாய்க்காக நாய்க்குட்டி மாதிரி நாக்கை நீட்டிக்கொண்டு ஒரு மனுஷன், 

#ஆண்களை இழிவு படுத்தும் இந்த விளம்பரங்களை எதிர்த்து யாரும் ஒண்ணும் சொல்லலியா ?!


3022.நூறு விவசாயிகளின் உழைப்பு, நூற்றுக்கணக்கானவர்களின் உணவு இவை வீண்போகாமல் அரசு ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். மனம் பதைக்கிறது.


3023.மன்னார்குடி லெக்ஷ்மி காலனியில் 10 வருடங்கள், கணபதிவிலாஸில் 6 வருடங்கள், செயின்ட் ஜோஸப்பில் 4 வருடங்கள். பாமினி ஆறு தெரியும். மன்னார்குடிக்கு சில மாதங்கள் முன்பு சென்றேன். கணபதி விலாஸும் லெக்ஷ்மி காலனியும் நினைவுச் சின்னங்கள் போல் எச்சங்களோடு நின்றன, என்னைப் பார்க்க வேண்டும் என்று உயிரைக் கையில் பிடித்திருந்தது போல. அன்றே கிளம்பி விட்டோம் இருக்க முடியாமல். 


3024.நகரத்தார்கள் பற்றி நான் எழுதிய எல்லாப் பதிவுகளையும் நம் மக்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்வேன் . 

நம்மில் எவ்வளவு இலக்கியவாதிகள், வியாபார காந்தங்கள், பொருளாதார, கணக்கியல் நிபுணர்கள், பழுத்த ஆன்மீகவாதிகள்,  பத்திரிக்கை,பதிப்பக அதிபர்கள், வங்கி, பல்கலைக்கழக நிர்மானிகள்... மொழியியல்  & பொறியியல் வல்லுனர்கள், திரைத்துறை ஜாம்பவான்கள் என்ற பெருமிதம்தான் காரணம்.


3025.ஆயா வீட்டில் ஆயாவின் நினைவுகளில் தோய்ந்து ஒருவருமே உறங்கவில்லை. ஆறாவயல் மஞ்சி வீட்டிலிருந்து காரைக்குடி வேகுப்பட்டியார் வீட்டில் இன்று வரை அவர்களின் வாழ்க்கைப் பயணம். வீடு பூரா மின்சார விளக்குகள் ஆனால் எங்கள் ஆயா என்னும் பாச ஒளி படுத்துக் கிடக்கிறது. பிரமை பிடித்த உள்ளத்தோடு அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்

பிரம்மாண்ட வீட்டின் காவல் தெய்வங்கள் ஒவ்வொருவராய் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இனி அப்பெருங்கதவுகள் தாழிட்டுக் கிடக்குமே. நாங்கள் ஆயா என்றழைத்தால் "வாத்தா" என்று வாஞ்சாலையாய் வரவேற்க யாரிருக்கப் போகிறார்கள் 😭


3026.நான்காவது படிக்கும்போதிலிருந்து புத்தகங்கள் வாசித்து வருகிறேன். அடி வாங்கியும் படித்திருக்கிறேன். புத்தகங்களை நெருப்பில் கூட போட்டிருக்காங்க அம்மா. 

ஒருமுறை நாகு மாமா கூப்பிடக் கூப்பிட வரவில்லையென்று ஆயாவீட்டு ஐயா புக்கைக் கிழித்துத் தலையில் போட்டு தீ வைத்து விட்டார்கள். நாங்கள் பதற மாமாவோ கூலாக நிக்குது. 

என் மாமியார் ஒருமுறை இப்படி வெளிகவனம் இல்லாமல் படித்த ஒரு பெண்மணியின் குழந்தை கோவையில் தண்ணீர்த் தொட்டியில் இறங்கி மூழ்கி இறந்து விட்டது என்று கூறினார்கள். அது ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் போல் ஆனது. அதன்பின் வாசிப்பு கொஞ்சம் குறைந்தது


3027.நிறைவாழ்வு வாழ்ந்த எங்கள் பேரன்புக்கு உரிய ஆயா தனது 96 வது வயதில் இன்று சிவபதம் அடைந்தார்கள். என்ன இருந்தாலும் ஆயா அல்லவா . மனம் கலங்குகிறது. 


கனடாவில் இருக்கும் என் தம்பி எழுதியது இது.

"பாடு பட்டு வளத்தவளே சொல்லாம போயிட்டியே
கோபிக்கமா வளத்தவளே சொல்லாம போயிட்டியே
பசியறியாம வளத்தவளே சொல்லாம போயிட்டியே
என்ன சொல்லி நா அழ இப்படி சொல்லாம பொயிட்டடியே
ஊட்டி ஊட்டி வளத்தவளே சொல்லாம போயிட்டியே
ஆஸ்டல்ல படிக்கும் போது விடாம வந்து பாத்தியே,
உன்ன இப்ப பாக்க எனக்கு குடுத்து வைக்கலயே.
அஞ்சாம் தலைமுறை பேராண்டி பாத்தாலும் ,
இப்படி பாடு பட்டு போனியே
என்ன சொல்லி நா அழ இப்படி சொல்லாம போயிட்டியே."


3028.வெய்யில் காலம்தான். அதுக்காக ஃபோட்டோவுல பனியன் மட்டும் போட்டுக்கிட்டு  நட்பு அழைப்பு விடுப்பது ஏன் ? இங்கே என்ன ஸ்டண்ட் மாஸ்டர் செலக்‌ஷனா பண்றோம். மொதல்ல ப்ரொஃபலுக்கு ஒரு சட்டையப் போடுங்கப்பா


3029.குஜராத்தில் மது இல்லை. சூரத் சென்றுவந்த உறவினர் கூறினார், டாமன் டையூ சென்றுதான் அருந்த வேண்டும் என. இதைக் கேட்டு முகநூலில் ஒரு பதிவு போட்டேன். குஜராத் மாதிரி இந்தியா முழுமையும் மாற வேண்டும், ஆட்சியாளர் வாழ்க என்று.

அதற்கு  டிவி மீடியா நண்பர் ஒருவர் அப்ப ஹஷீஷ், கொகேய்ன், ஹெராயின்  இருந்தா பரவால்லையா. இன்னும் உரக்க அவர் புகழ் பாடுங்க என்கிறார்.


3030.மத்தியதர குடும்பங்களில் கணவர் குடிப்பதைப் பெண்கள் விரும்பாதது பணப் பிரச்சனையால் அல்ல. உடல் நலம் கெட்டுவிடுமே என்ற அச்சம்தான் காரணம். மேலும் தினம் எட்டு - எட்டு  அந்தத் தங்கமான மனிதருக்குள் புகுந்துவிடும் அந்நியன் பற்றிய பயமும்தான். 

அரசே இதை ஏற்று நடத்தி பின் ரேஷன் மானியங்கள் உதவித் தொகைகள் அளிப்பது எல்லாம் வீண். ஐடிசி இப்போது சிகரெட் விற்பனையைக் குறைத்துக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிப்பில் தன் கவனத்தைத் திருப்பி உள்ளது பாராட்டத்தக்கது.

 

3031. 1992 மும்பை நினைவுகள். 

ஜூஹூ, மஹாலெக்ஷ்மி, பாவ்பாஜி, சமோசா, டிஃபன்வாலாஸ், பாலிவுட், கணேஷ் பப்பா மோரியா, தெருவுக்குத் தெரு பாபா, கேட் வே ஆஃப் இண்டியா, எஸ்ஸெல் வேர்ல்ட், ஜுனூன், நயா நுக்கட், தேக் பாய் தேக், சபான் சம்பால்கே, பாஸிகர், ஷாரூக், மாதுரி, மந்திரா பேடி ..  1992 நினைவுகள் 😊


3032.திறமையாளர். மகான் அல்ல.

ஒரு முறை பாலமுரளிகிருஷ்ணா நிகழ்வில் நான் ராஜாதான். ஆனால் இளைய கிருஷ்ணன் இல்லையே என்று ஏங்கிச் சொன்னவர். அந்நிகழ்விலேயே அவரிடம் ஆவலோடு பேச நெருங்கிய ஒருவரை மதிக்காதவர். மேதமைத்தனத்தைவிட மேட்டிமைத்தனத்தை விரும்பிய பூர்ஷ்வா.


3033. யாரையும் மதிக்காத வித்வத்வம் பயனற்றது. 


3034.ஞானி பாரபட்சமானவர்தான். இது ப்ரத்யட்சம். பாதியிலிருந்து சிம்பொனி அமைத்துவிட்டுத் திருவாசகத்தைத் தானே எழுதியதுபோல் பெருமைப்பட்டுக்கொண்டவர். அவர் பாடிய சில பாடல்கள் தரமற்றவை. சில விதந்தோதக் கூடியவை. 


3035. முந்தைய அரசு ஞானி விருது வழங்கியது பெருமைப்படுத்த.ஆனால் அவர் தன் சகோதர்களைக்கூட முன்னிலைப்படுத்தியதில்லை.  


3036.இவ்வோவியத்திற்கு ஒரு கதை உண்டு 

தேனம்மையின் எழுத்துக்கள் விண்ணைத் தொட 

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரைக்குடி - அவர்களின் சின்னம் சந்திரனாய் விண்ணில் வந்து பாராட்ட 

விண்ணைத் தொட்ட தேனம்மையின் வரிகள் மாரியாய்ப் பொழிய

உலகெங்கும் உள்ள உயர்ந்த மலைகள், மாரி கொடுத்த அமிர்தத்தை சிந்தாமல் சிதறாமல் பூமித் தாயிடம் சேர்க்க

பூமியில் உள்ளோர் பயனுற்று விளைந்து நிற்கும் காட்சியை மனக்கண்ணில் கண்டதன் விளைவு

இவ்வோவியம்

மீனாள் முத்து

சென்னை’



#அருமை ஆச்சி. மகிழ்ச்சியும் முத்தங்களும் அன்பும் நன்றியும். 


3037.ஓவியத்தை வரைந்தவருக்கு தங்கள் மேல் உள்ள பேரன்பு நன்றாகவே தெரிகிறது. நட்பு வட்டத்தின் ஆரம் அதிகமாகட்டும். வாழ்த்துக்கள் அக்கா


3038.வாழ்த்துக்கள் 👏👏👏👏 💐💐💐💐சில காலமாக எங்கும் உங்கள் புகழ் குன்றிலிட்ட விளக்காக ஒளிர்கிறது. 

வாழ்த்துக்கள் இன்னும் மேலே மேலே சென்று தமிழக அரசு விருதுகள், தேசிய விருதுகள் பெற்று  சிகரம் தொட என் அப்பன் ஸ்ரீ காசி விஸ்வநாதன் துணை இருப்பார்.


3039.இராவண காவியம் 60 பாடல்கள் வரை படித்தேன். புலவர் குழந்தை எழுதியது. 3100 பாடல்கள் உள்ளன. 

இராமாயணத்தில் ராமன் திருமணத்துக்காக மிதிலைக்கு தசரதன் மக்கள் செல்லும் வழியெல்லாம் கள்மயக்கம். 

பாஞ்சாலி பஞ்சபூத தத்துவம். சத்யவதியிலிருந்து குந்தி மாத்ரி குழந்தைகள் பெற்றதெல்லாம் ஐவி எஃப் மாதிரி. 

பொதுமக்களுக்கான பொழுதுபோக்குக் காவியம் என்பதைத் தவிர சொல்ல வேறு ஒன்றும் இல்லை. 


3040.வேட்டை சமூகம் வேளாண் சமூகமாக மாறி நிலவறை கருவறை, ஓரிறைத் தத்துவங்கள் பின்னே வந்தன 


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)