வியாழன், 31 டிசம்பர், 2020

வாளை மீனும் விலாங்கு மீனும்

2821.  இவர் எங்கே இருக்கார்னு சொல்லுங்க



2822. வாளைமீனும்  விலாங்குமீனும்




விண்ட்மில்லுக்குப் போகும் விசிறி ப்ளேடுகள். 









2823. கவின்மிகு கிருஷ்ணகிரி






2824. அதென்ன மாயமோ இல்ல வசீகரமோ தெரில. Jaya, Lavanya, Sangeetha  இந்த மூணு புள்ளைகளும் என்ன போஸ்ட் போட்டாலும் ரொம்பப் பிடிச்சிருக்கு. 

படிச்சா புன்னகை மலருது. மனசு லேசாகுது. நன்னி பிள்ளைகளா

2825. அதென்னவோ தெரியல என் ஃப்ரெண்ட்ஸ் வளர்க்குற நாயோட பேர் எல்லாம் டேனி, டேரி, டாலின்னே இருக்கு. நண்பர் ஒருத்தர் வளர்க்குற நாய்க்குத்தான் சிம்பான்னு பேர் வச்சிருக்கார்.

அதுங்களை நாய்னு சொன்னாலும் சண்டைக்கு வந்திடுவாங்க. நாம ஞாபகமா பேர் மட்டும் சொல்லணும்.

ஜெர்மனில எங்க போனாலும் நாய பிடிச்சிட்டு வாக்கிங் போறவுங்களைப் பார்க்கலாம். அங்கே எல்லாம் நாய் மாதிரி பெட் அனிமல் வளர்க்க கவர்மெண்ட் ஏதும் பணம் தருதான்னு (ஏங்கேயோ படிச்ச ஞாபகம் ) மருமகள் கிட்ட கேட்டேன். "தெரிலயே"ன்னா.

ஜன்னல்லேருந்து பார்க்கும்போது தம்பதி போல தோற்றம் தந்தவர்கள் இரு நாய்களைப் பிடிச்சிட்டு வாக்கிங் போறத பார்த்தேன்.

"ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நாயை வளர்க்கலாமில்ல எதுக்கு ரெண்டு"ன்னு கேட்டேன். அதுக்கு அவ சொன்னா " வீட்ல நாம சொல்றபடி கேக்குறதுக்கும் ஒரு ஆள் வேணும்ல. அதான் ஆளுக்கொண்ணு வளர்க்குறாங்க ! "

2826. ஏகம் இல்லத்திற்கு
ஏகும் வழிகாட்டியவர்.
தங்கத் தாமரையில் உறையும்
தாய் தந்தை பதம் பணிந்தவர்.
பதினாறிலிருந்தே
தாமரை இலைத் தண்ணீராய்
வாழ்கின்ற மெய்ஞ்ஞானி.
ஒரு தீபம் இரு தீபம் ஏற்றி
வணங்குவோர் பலர்.
தன் சுயத்தையே பல்லாண்டு
பிரதீபமாய் பகவானுக்கு சமர்ப்பித்தவர்.
உம்மில் தீபம் பெற்று
அம்மையப்பனில் ஒளிர்கிறோம் யாமும்.
இன்னும் பல்தீபம் கோடி கோடியாய்த்
தொடர்ந்து ஒளிர்விக்க
இறையருள் பெற்று வாழுங்கள்
முன்னோடியாய் ஒரு நூறாண்டு.
எங்கெங்கும் உம் புகழ் பெருக
அம்மா பகவானின் அருள் பொழிய
ஆட்கொண்டீர் மனங்களை.
ஆன்மீக வழிகாட்டியே
நிலைத்திருக்கட்டும் உம் சேவை
இன்னும் ஓராயிரமாண்டு.
வாழ்க வளமுடன்.
வாழ்க ஏகத்துவம். 

2827.உடல் ஒரு தாவரம்
மூளைதான் கிளைகள்
சிந்தனை இலைகள் விரிகின்றன
பசுமையாய்...
சில பழுப்பேறி உதிர்கின்றன.
எப்போதோ நாசியேறி
சில ரோஜாக்களும் மல்லிகைகளும்
முல்லைகளும் முகிழ்க்கின்றன.
பூவேறிப் பிஞ்சேறிக்
காயேறிக் கனியுதிர்ந்து
முதிர்ந்து மேலுரிக்கும்போது
எஞ்சுகின்றதொரு மரக்கொம்பு.

2828.கண்ணாடியைப் போட்டுக்கிட்டே கண்ணாடியைத் தேடுவது என்ன மாதிரியான நிலை...

2829.குடித்தவர்கள் குளறுகிறார்கள். குடிக்காதவர்களோ அவர்களை விட அதிகமாக  உளறுகிறார்கள்..

2830.ஆழமாக எழுதுவதையும் ஆழ்ந்து படிப்பதையும் விடுத்து ஃபேஸ்புக் எண்டர்டெயினர் ஆகிவிட்டோம் 

2831.செய்யமுடியாத அளவு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் தானே பொதி ஏற்றிக் கொண்ட கழுதைகளாகி விடுவோம். முதுகெல்லாம் பாரம் என்று கூனியே திரியவேண்டியதுதான். ஹார்ட் வொர்க்கர்ஸ் ஸ்மார்ட் வொர்க்கர்ஸிடம்  பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், உண்மையாய் இருக்கிறேன், உயிரைக் கொடுத்து உழைக்கிறேன் என்றெல்லாம் உளறிக் கொண்டிராமல்..

2832. ///தூண்டிலில் மீன் பிடிப்பது போல இருளில் அவள் சார்ஜரை இழுத்து செல்ஃபோனை மாட்டினாள். 

2833. பசி அவர் வயிற்றில் நாயைப் போல உறுமிக் கொண்டிருந்தது.

2834. திருமணமாகி அவள் காலடி எடுத்துவைத்த வீடு முதலையின் வாயைப்போல அவளை விழுங்கக் காத்திருந்தது. 

2835. கோபித்துக் கொள்ளும் கணவன் முன் அவள் பூனையைப் போல முனகினாள்.

2836. பயத்தில் நறுங்கிப்போன அவர் உருவம் ஏமாந்த நரியை ஒத்திருந்தது.///

-- இப்போது எழுத நினைத்த கதையிலிருந்து.

2837.குட்டிப் பயல்கள் 




2838. குட்டிப் பயல்கள் 




2839. படிக்கணும்னுதான் வாங்கியது. பத்து வருஷமிருக்கும்போல :) 8தான் படிச்சிருக்கேன். 


2840. நாற்காலியேதான். 


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

2 கருத்துகள்:

  1. // பசி அவர் வயிற்றில் நாயைப் போல உறுமிக் கொண்டிருந்தது... //

    ஓ....!

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)