ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

2561.CITY OF FLORENCE

2562. டிடிஸி


2563. நாம பெரிய ஃபோட்டோகிராஃபர்ல.. நம்ம கோச்ல உக்காந்து வானவில்லைக்கூடப் படம் பிடிப்பம்ல.. :)

#Black_forest_Germany


2564. Congrats K V Jeyasree . படித்து ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. 
கூடிய சீக்கிரம் நூல் பார்வை எழுதுவேன். இந்தவருடமே சூல், நிலம் பூத்து மலர்ந்த நாள் இரண்டும் விருது வாங்கியது குறித்து மகிழ்வாக இருக்கிறது. 
படிக்கும்போதே அப்படிப்பட்ட ஒரு (நிச்சயம் இவை உன்னதமான நூல்கள் என்றதொரு )உணர்வை இரு நூல்களுமே உருவாக்கின


2565. பலி கேட்பதில்லை காளி
பழி போடாதீர்கள் அவள்மேல்
நீங்களாக வெட்டிவிட்டு. 


2566. விடைபெறமுடியாத கனவுக்குள்
தேங்கிக் கிடக்கிறாள் அவள்
நானாக வெளியேறினால்தான் விழிப்பு.

2567. வேண்டியது விமர்சனங்களல்ல
விசாரிப்புகள். 

2568. ஒரு தோழியின் இறப்பு அசைத்துப் பார்க்கிறது. 
கலங்கடிக்கிறது மனதை

2569. எட்டுமணி ஆனா சில சின்னத்தம்பிங்க பாட ஆரம்பிச்சுடுவாங்க :) 

2570. ///Quick lesson about autoimmune diseases.
It takes an average of 3 years and 5 doctors for a person to get a proper diagnosis of an autoimmune disease. 
I just wish more people understood what an autoimmune disease is. 
It is not a cold or the flu, you will never get better, and even a nap will not help. 
Just eating a salad and hitting the gym won’t slim your face or get the pounds off. 
Sleeping 10 hours doesn’t leave you well rested, ever. 
Last minute changes in plans because that “just got ran over” feeling never makes appointments, 
just walks in whenever you aren’t ready. Achy joints and bones, dry skin, breaking hair, mood swings, 
and depression are just the tip of the iceberg. You are also prone to having multiple autoimmune diseases 
and have days where no matter how hard you try, you just can’t smile for anyone.
I am watching the ones who will take the time to read this entire post and react.
Please, in honor of someone who is fighting POTS, MCAD, Sjogren's, Scleroderma, Hashimoto Disease, 
Ankylosing Spondylitis, Fibromyalgia, Lupus, Sarcoidosis, Rheumatoid Vasculitis,Hepatitis, Raynauld's Syndrome, 
Diabetes, Mold Illness, Celiac, CROHN’S, Ulcerative Colitis, Pemphigus, SPS, MS, PBC, Psoriatic Arthritis, CIDP, 
MMN And GPA .Copy and paste to your page and reply "DONE" on mine.///


2571. 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம். மூன்று குழந்தைகளுடன் கூடிய குறவஞ்சி.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. 

இதை என் பதினொன்றாவது நூலின் அட்டைப்படமாகத் தேர்வு செய்த திரு ப. திருமலை சார் அவர்களுக்கும் நமது மண்வாசம் இதழுக்கும், பட்டறிவு பதிப்பகத்துக்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றி. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.


2572. அது 2008 ஆம் வருடம். வீட்ல கம்ப்யூட்டர் வந்து 10 வருஷம் ஆச்சு. ஆனா டஸ்டர் ஸ்பன் க்ளாத் வச்சு ஸ்க்ரீன் மோடம் பாட்டரி ரவுண்ட் காமிரா மௌஸ் எல்லாத்தையும் தொடைக்கிறதோட சரி.

நான் பாட்டுக்கு தேமேன்னு ட்ராவல் & லிவிங் சேனல் பார்த்துட்டு இருப்பேன். வீடு க்ளீனிங், சமையல், எதிர்த்தாப்புல கண்ணன்ல ரெண்டு நாளைக்கு ஒருக்கா ஷாப்பிங், வாஷிங், அயர்ன் செய்றதுன்னு ஆல் இன் ஆல் நாந்தான். டெய்லி சாயங்காலம் ரேஸ்கோர்ஸ் வாங்கிங் பாத் ல ஒரு மணி நேரம் வாக், வீட்டுக்கு வந்ததும் ஒரு மணி நேரம் விநாயகர் அகவல்லேர்ந்து ஸ்கந்தர் சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முகக் கவசம், ஆதித்ய ஹ்ருதயம், தமிழ் சுப்ரபாதம் ( இதெல்லாம் சாயங்காலம் சொல்லலாமான்னு கேக்கக் கூடாது - காலைல யாருக்கு டைம் இருக்காம் :) அப்றம் ராகவேந்திரர் ஸ்தோத்திரம், லெக்ஷ்மி பூஜை, குமாரஸ்தவம், திருவாசகம் , நரஸிம்மர் ஸ்துதி, ஜெய் அம்பேன்னு ஹாரத்திப் பாடலோட முடியும்.

டிஃபன் சாப்பாடு டின்னரோட டெய்லி ஈவினிங் ஒரு ஸ்வீட் காரம் காஃபி உண்டு. அடிக்கடி விருந்தாளிங்க வேறு. ஒரு நாள் மதிய சமையல் முடிச்சிட்டு நான் பாட்டுக்கு ட்ராவல் & லிவிங் பார்த்திட்டு இருந்தேன்.

என் உறவுப்பெண் ஒருத்தி வேலை பார்த்துட்டு இருந்தா. ஒருநாள் எங்க வீட்டுக்கு எதிர்த்த பில்டிங்ல இருந்த ரங்ஸோட ஆஃபிஸுக்கு அலுவல் விஷயமா பிரபலமான ஆளோட ( அவ பாஸோட ஃப்ரெண்ட் - அவ பாஸும் ஒரு லேடிதான் ) வந்துட்டுப் போயிருக்கா. அதன்பிறகு ரங்ஸ் லஞ்சுக்கு வீட்டுக்கு வரும்போது என்னய பார்த்து கொஞ்சம் கடுப்ஸ்.

அம்மா அப்பா வீட்ல டிகிரி படிக்க வச்சதே பெண்ணின் திருமண வயது 21 அப்பிடிங்கிறதாலதான். என் உறவுப் பெண் 18 வயசுல ஒரு வருஷ டிப்ளமா முடிச்சிட்டு வேலைல சேர்ந்ததால அன்னைக்கே 30 000 க்கு மேல சம்பளம் வாங்கிட்டிருந்தா.

அப்றம் சென்னை வந்தோம். லாப்டாப் வாங்கினோம் 2009 மார்ச்சில். ஜூன்வரை அதையும் பழைய கம்ப்யூட்டர் போல பசங்க ஓபன் பண்ணித் தந்தா மட்டுமே ஜிமெயில் யாஹூ ஃபேமிலி க்ரூப் மெயில் எல்லாம் பார்க்குறது. 2009 ஜூலை 13 பையன்கிட்ட ஜிமெயில்லேர்ந்து ப்லாக் ஆரம்பிக்கலாம்னு சுசீலாம்மா சொன்னதை சொன்னேன். அன்னிலேர்ந்து பிஸியாயிட்டேன்

ப்லாக்ல சிலப்போ விளம்பரம் போட்டு 3000 , 3000 ஆ பணம் க்ரெடிட் ஆயிருக்கு. பத்து வருடமா மாசாமாசமும் ஏதோ ஒரு தொகை எழுத்துக்கான, புக்குக்கான வருமானமா வருது. புஸ்தகா அமேஸான்லேர்ந்தும் க்ரெடிட் ஆகும். வேலைக்குப் போனா என் நேரம் என்னுதுல்ல. வீட்ல உக்கார்ந்து இத எல்லாம் பண்றதுக்கு இப்போதான் அங்கீகாரம் கிடைச்சிருக்கு.

சிலப்போ கிண்டலான பார்வையும் சிங்கத்தைச் சீண்டுறதும் நல்லதுக்குத்தானோ ;) ;) 


2573. இன்று மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் எனது பெண் அறம் நூல் வெளியிடப்பட்டது. எட்டரை லட்சம் பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் நமது மண்வாசம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.


2574. மதுரை தானம் அறக்கட்டளையின் மைய அலுவலகத்தில் சர்வதேச பெண்கள் விழா கொண்டாடப்பட்டது. எனது பதினோராவது நூலான " பெண் அறம்" மருத்துவர் நல்லினி அருள் அவர்களால் வெளியிடப்பட்ட து. களஞ்சியத்தின் தலைவி சின்னப் பிள்ளை அம்மா அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். 


அப்போது இந்நூல் வெளிவர உறுதுணையாய் இருந்த நமது மண்வாசம் ஆசிரியர் திருமலை சார் அவர்களின் உரையில் ஒரு பகுதி.



2575. எதற்கு இந்த இருமல் நாடகம். இரண்டு மூன்று உறவினர்களுக்கு ஃபோன் செய்து இருமல் சத்தம் கேட்டதும் பதறிப் போனேன். பொதுஜனத்தின் மனதில் வியாதிகளைப் பற்றிய பீதிகளைப் பரப்புவதற்கு செல்ஃபோன் கம்பெனிகள் பெற்ற பர்சண்டேஜ் என்ன. மருந்து கம்பெனிகள் சதியா ? இருமல் சத்தத்தில் காரக்டர்களை உருவாக்குவதில் கேபியையும் மிஞ்சிட்டாங்க.

2576. சென்ற வருட, இந்த வருட நமது மண்வாசத்தின் பரிசு


2577. நம் கையே நமக்கு எதிரின்னு ஆக்கிடுச்சே இந்த கொரோனா

2578. முடிந்துவிட்டதென
முறிக்கும்போதெல்லாம்
முளைத்துவிடுகிறது

2579. வீடியோவில் விமர்சனம் செய்ய வாங்க. என்னுடைய படைப்புகளை பற்றிய உங்களது
விமர்சனங்களை வரவேற்கிறேன். கீழே உள்ள லிங்க்யை கிளிக் செய்து உங்களது
விமர்சனத்தை வீடியோவில் பதிவு செய்யுங்கள்.
https://www.thereviewclip.com/profile/Thenammai_Lakshmanan_Author?fbclid=IwAR0nB9iUal6sPwhkoVhb5nEx6EGfWeyQYnJDy-Dx0tVjkR9-LewwFWatJQY

2580. காய்கறித் தோரணம். #ராஜராஜேஸ்வரி_கோவில், பெங்களூரு.



டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2 கருத்துகள்:

  1. நிகழ்வுகள், படங்கள் என அனைத்தும் அருமை...

    காணொளி மட்டும் :-

    Video unavailable
    This video may no longer exist, or you don't have permission to view it.

    பதிலளிநீக்கு
  2. அஹா அது ஏன்னு தெரியலையே டிடி சகோ. பையனிடம் கேட்கிறேன்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)