வெள்ளி, 8 மே, 2020

ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

2601.  கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சில கோலங்கள் 


2602. woww..Azadji kalakkureengka.. எனர்ஜிடிக்கா இருக்கு. ட்ரெட்மில்லைக் கொடுத்தாச்சு, வாக்கிங் போக யோசனை. சோ நானும் யோகாவைத் தொடரப் போறேன்.


2603. என்ன செய்றதுன்னே தெரில. நிசப்தம் காதை அறையுது. தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. சூடா ஒரு கப் காஃபியோ டீயோ குடிப்போமா..

2604. Enga flatsil oru kutti pappa clap panra


2605. BE SAFE & TAKE CARE MAKKAS

2606. செய்தி சேனல்களுக்கு பொறுப்புணர்வு அவசியம். இத்தாலியில் வயதானவர்கள், குஜராத்தில் வயதானவர்கள் அதிக விகிதத்தில் இறப்பு என்ற புள்ளி விவரமெல்லாம் எதற்கு. டிவி பார்ப்பவர்கள் பெரும்பாலும் பெரியவர்களே. வீட்டில் நிம்மதியாக இருக்கும் அவர்களுக்கு மனக்கிலேசத்தை ஏன் உண்டாக்குகிறீர்கள் ? உங்களுக்கெல்லாம் அப்பா, அம்மா, தாத்தா பாட்டி இல்லையா?. தொலைபேசியில் அவர்கள் அசந்த குரலைக் கேட்டாலே பதறி வருது..

2607. இந்த வைரஸை உருவாக்கி தப்பிக்க விட்டவங்க கையில கிடைச்சா தலைகீழா பிடிச்சு பாறையில அடிச்சுக் கொல்லணும்போல இருக்கு. சின்னப் புள்ளயில ஐ சக்கா ஐ அரப்படி நெய் சீனாக்காரன் தலையில தீயைப் பத்த வைன்னு விளையாட்டுத்தனமா பாடினது ஞாபகம் வருது. 72 சீனப்போர் பாட்டா இருக்கலாம்.. அவங்க மேல ஏற்படுற வெறுப்பைத் தவிரக்க முடில.

2608. BREAK FROM CORONA NEWS

*TODAY HOME WORK* 24 March 2020

Write your name in Japanese language, pls dont spoil the fun!!! Lets laugh a bit by writing your name in JAPANESE ALPHABET:

A= ka, B= tu, C= mi, D= te, E= ku, F= lu, G= ji, H= ri, I= ki, J= zu, K= me, L= ta, M= rin, N= to, O= mo, P= no, Q= ke, R= shi, S= ari, T= chi, U= do, V= ru, W= mei, X= na Y= fu, Z= zi.

Pls send your funny names

Chirikutokarinrinkaki Takameariririnkatokato 

2609. ஆஞ்சநேயர் காப்புகள்.


2610. பெரும் பறவைகள் இறக்கை அடித்துக் கொண்டு பறப்பதுபோல் ஓடுகின்றன சில பேருந்துகள்.

2611. சிறு பறவைகளின் கீச்சொலிகள் போல் ஓரிரு இருசக்கர வாகனங்களின் சத்தமும் சன்னமாகக் கேட்கிறது. மதியத்திலும் ஒரு சேவலின் ஓங்காரக் கூவல் காதைக் கீறுகிறது.

2612. அடிபட்ட புறாக்களாய் அவ்வப்போது ஆம்புலன்ஸ் சப்தங்கள் , கழுகு கொரோனாவோ, வேறு ஏதோவோ..

2613. 100 post blog LA prepost/ scheduled post as potu vaichruken. Irrelevant as post panna vendi irukku. Enna panrathunnu therila 

2614. நோயின் பிடியில் அச்சத்தின் பிடியில் இல்லையென்றாலும் எப்போதும் ஏதோ ஒன்று பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது மனதை

2615. மனிதரை மனிதர் மனதார நெருங்கக் கூட விடாமல் ஏதோ ஒன்று மௌனித்தும் மரமரத்தும் போகச் செய்து கொண்டிருக்கிறது

2616. இனிமேல் நம் வாழ்நாளெல்லாம் இப்படிப்பட்ட அச்சங்களுடனே மனிதர்களை நெருங்காமலே வாழ்ந்து மடிவோமென்று தோன்றுகிறது.

2617. நிழல் கிரஹங்கள் நம்மையும் நிழல் மனிதர்களாக்கி விட்டன.

2618. தொண்டையின் உச்சியில் நுழையும் பேய் நுரையீரல்களில் ஊஞ்சலாடுகிறது. விழுதுகளும் வேர்களும் இற்று வீழ்கின்றன

2619. நுரையீரலைப் பாதுகாப்பதோடு இதயத்தையும் சீர்படுத்துங்கள். தீர்ப்பு நாள் வரை குழம்பிக் குழம்பி அதற்குப் பைத்தியம் பிடிக்காமலிருக்கட்டும்.

2620.நம்ம மொத்தப் படைப்பையும் ஃபேஸ்புக்குல ஸ்டேடஸா போட்டுறலாம் போல. இன்னொரு ஐடிலேருந்து பார்த்தா எல்லாம் இங்கிலிபீஸுல தெர்து. என்ன கொஞ்சம் அர்த்தங்கெட்டதனமா இருக்கு. அம்புட்டுத்தான். இலவசமா படிச்சு இங்கிலீஷ்காரங்க கூட ஃபான் ஆயிடுவாங்க. 

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

3 கருத்துகள்:

  1. மனிதரை மனிதர் சந்தித்து பார்த்து பேசும்நாள் விரைவில் வந்துரும்.நல்லதே நடக்குமென்று நினைக்கவேண்டும்.நிச்சயம் நடக்கும்.நமது தெய்வங்கள் கருணையுள்ள தெய்வங்கள்.நமக்கு நல்லதே செய்து ஆசீர்வதிப்பார்கள்.நல்லது

    பதிலளிநீக்கு
  2. முகநூல் இற்றைகள் இங்கேயும் ஒரு தொகுப்பாக - நன்று. தொடரட்டும் சிந்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆத்தா

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)