செவ்வாய், 21 ஏப்ரல், 2020

சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

2541. பாலங்களுக்குள் பாத்திகள். பாத்திகளில் பூச்செடிகள். ஹைதை ப்யூட்டி

2542. ஊரே புகைமயமா இருக்கே.. தெர்மல் பவர் ஸ்டேஷனாம். ரெய்ச்சூர் அட்ராசிட்டீஸ் :) #ஹைதை.


2543. இராட்டையில் நூற்கும் பெண். இரணிக்கோவில் விதானச் சிற்பம்

2544. இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவிலில் இருந்து

2545. கட்டங்கள், வட்டங்கள், கோடுகள், கம்பிகள், ஜன்னல்கள், கதவுகள், இருக்கைகள் எல்லாத்தையும் அஞ்சு மணியிலேருந்து ஏழு மணிவரை எண்ணியாச்சு. டாக்டர் அதன் பின் வந்தார். இந்த தியான மனநிலையில் பிரஷர் சுகர் ஃபீவர் எல்லாம் ஆல்ஃபா ஸ்டேஜுக்கு போயிடுச்சு. கொசுக்கள் மட்டும் அப்பப்ப கடிச்சி உயிர்பிச்சுச்சுங்க. ஐ யாம் ஓகே
2546. அவங்க சிரிச்சா அது தெய்வீகச் சிரிப்பாம். அடுத்தவங்க சிரிச்சா அது இளிப்பா

2547. ஃபோட்டோவைத் தாலாட்டுறாய்ங்க.. இதுதான் திரிடியா. ஹாஹா.

2548. வழக்கமான கவிதைகள் போல் இல்லாவிட்டாலும், வெகுஜன ரசனைக்குட்பட்ட சினிமா சித்தரிப்புப் போல இருந்தாலும் மிகவும் யதார்த்தமாகவே பாய் பெஸ்டி கவிதையை எழுதியிருக்கிறார். படித்ததும் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு வாட்ஸப்பில் நிறைய க்ரூப்களுக்கு உடனே ஷேர் செய்தேன். உடன் நான் பலகாலம் முன்பு எழுதிய கவிதை ஒன்றையும். மணமான ஆண் பெண்களுக்கிடையில் புதிதாய் இணையப் பயன்பாட்டின் மூலம் உருவாகும் நட்பு பற்றியது.

ஒற்றைப் பெண் பிள்ளையும் தாயும்..

ஒற்றைப் பெண்பிள்ளையைக்
கொண்ட தோழிகளை
அவனுக்குப் பிடித்திருந்தது.
அவர்கள் தங்கள் மகள்களின்
கன்னத்தோடு கன்னமிழைப்பதும்
கடிந்து கொள்வதும்
கொஞ்சிக் குலாவுவதும்
கிளர்ச்சியளித்தது.
பூக்களாய்ப் புன்னகைக்கும்
அவர்களைப் பார்த்துப்
பூவாவான்..
குழந்தைகளைக் கடிவதுபோல
தன்னைக் கடிவதையும்
இனிப்பு மிட்டாய் போல ருசிப்பான்.
கொலுசணிந்து ஓடும் குழந்தையின்
புகைப்படத்திலிருக்கும்
கொலுசணியாத அவள் தாயின் காலிலும்
கொலுசுச் சத்தம் தேடிப் பார்ப்பான்.
அவர்களின் உணவுக் குறிப்புக்களும்
அரசியல் அலம்பல்களும்
உறவுகளின் உரசல்களும் அங்கங்கே
சிதறிக்கிடக்கும் புத்தகம் போலத்
தன்னைக் கொடுத்திருப்பான்.
குஞ்சுகள் பெரிதானதும் பறந்துவிடும்
குருவிகளைச் சுமந்த கூடுபோல
அந்த நட்புக்களைச் சுமந்துகொண்டிருந்தான்.
அவர்கள் குழந்தைகளின் பரிட்சைகளுக்காகவும்
குடும்பத்திலுள்ளோர் உடல் நலனுக்காகவும்
பிரார்த்திக்கும் பெருமனம் பெற்றிருந்தான்.
சிலசமயம் வருத்தத்தோடு சுற்றும் அவர்களை
துணைக்கோள் போல் சுற்றி
அவர்கள் சுற்றும் பாதை சலிக்காமல்
சுலபமாக்குவான்.
தனக்கு வருத்தம் நேரும்போதெல்லாம்
வேறொரு விதமாய்க் காண்பித்து
வினோதமாய்த் திரிவான்.
சமயத்தில் ஆதி மூர்க்கம் மேலெழும்ப
காமமும் காதலும் கிளைக்கும்போது
ஒடித்து ஒளித்துப் போடுவான்.
குழந்தைகளோடு குழந்தையாயும்
அவர்களின் அம்மாக்களோடு அம்மாவாயும்
உணரும் அவனுக்கும்
அவனைத் தாயாக்கியும் சேயாக்கியும்
கொஞ்சிக் குலாவிப் புதுப்பிக்கும்
ஒரு பெண் குழந்தையிருந்தது.
எனவே அவனுக்கு
தன் மனைவியைப் போன்றே
ஒற்றைப் பெண்பிள்ளையைக் கொண்ட
தோழிகளைப் பிடித்திருக்கிறது..

என்னவோ தினம் தினம் அந்த பாய் பெஸ்டியைப் புதுப்பிக்கிறாங்க. இந்தக் கவிதையையும் கொஞ்சம் புதுப்பிங்கப்பா :) ஹாஹா..

2549. வெட்டுப்படும் போதெல்லாம் உயரவேண்டுமெனப் புரிகிறது

2550. lasagne :)

2551. வெட்டி வெட்டி விருட்சமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

2552. அப்ப உபயோகமா இருந்துச்சு. ஓவியமா இருந்துச்சு.. இப்ப இதை எல்லாம் என்ன பண்ணுறது..

இதுபோல் டிவிடி பிளேயர், விடியோ ஆடியோ கேஸட்ஸ், சயிண்டிஃபிக் கால்குலேட்டர், ஆல்பம்ஸ், பென் ட்ரைவ்ஸ், டிஜிட்டல் காமிரா, வெப் காம், ஸ்கானர், எம்பி 3, டேப்ரெக்கார்டர் எக்ஸட்ரா.. இருக்கு

2553. கலவரம் ஏதுமில்லை.. புல் முளைக்காமலிருக்கக் கரம்பை மண்ணைக் குமிச்சிருக்காங்க

2554. பிட்டுக்கு மண் சுமந்த அயர்வு

2555. எங்க ஊரில் வெள்ளை மிளகாய், மாவடு இஞ்சியை எலுமிச்சை அல்லது நாரத்தை உப்பு ஊறுகாய்த் தண்ணீர் ஊற்றி ஊறவைப்பாங்க. செம டேஸ்ட்.
ஆ.. காரம்.. பிச்சு ஒதறும் மா. ஒரு கடி கடிச்சா வண்டி வண்டியா தயிர்சாதத்தை முழுங்கலாம்

2556. ஸ்பேஸ் ஸ்டேஷன் இல்லை.. ரயில்வே ஸ்டேஷன்தான். சொன்னா நம்பணும். :)

#ஜெர்மனி_ஸோலிங்கன்

2557. தமிழ்த்தாய், கம்பன், வள்ளுவன், இளங்கோ.

விழிகள் பெற்றதன் பயன் உணர்ந்தோம்

#தமிழ்த்தாய்_திருக்கோயில்_காரைக்குடி

2558. ஒண்ணாவது திங்கிற மாதிரியா இருக்கு.. (பேரப்) புள்ள பொறந்ததுக்கு மிட்டாய் ரொட்டி வைக்கிறம்னு கூப்பிட்டாங்க. நம்பிப் போனா இந்தக் கொடுமை. அதுலயும் கலர் கலரா இருக்கே இந்தப்பஞ்சு மிட்டாய் மாதிரி அது ரொம்பக் கொடுமை.. அசல் லப்பரேதான்.

மலயாக்காரங்க..எங்கதான் வாங்குவாங்களோ.

#அண்டை_அயலாரின்_பெருமை #நமக்குக்_கிடைக்கும்_கொடுமை

2559. Activity log la oru post ai timeline la allow pannalamnu pona.. You searched so & so nu varuthu. Parthathum thikkunnu aayittu. Nallavelai.. Only me la irukku. Rascals. Yarta ellam mati Vida parkireenga ;) :)

2560. புத்தம்புது பூமி வேண்டும்.. நித்தம் ஒரு வானம் வேண்டும்.. டிட்லிஸ்

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2 கருத்துகள்:

  1. அனைத்தும் நன்று.. உடல்நலன் டேக் கேர் அக்கா.
    படங்கள் அழகு.. உங்க குறும்பும் கருத்தும் தொனிக்கும் வரிகளும் அழகு

    பதிலளிநீக்கு
  2. நன்றிடா தேன்மதுரத்தமிழ் கிரேஸ். நீங்களும் பத்ரமா இருங்க.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)