வெள்ளி, 12 ஜூன், 2020

கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும். 

1571. சுவாமிக்குக் காசு முடிந்து வைத்தல் -  திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகளின் போது ஊரில் இருக்கும் எல்லாச் சாமிக்கும் நிகழ்வு நல்லபடியாக நிறைவேற வேண்டுமென்று காசு முடிந்து வைப்பார்கள். இது அந்தக்காலத்தில் நாலணா, எட்டணா என்ற அளவில் இருந்தது. சோமண்ணன் என் அம்மாவிடம் இந்தப் பணத்தைப் பெற்று ( விட்டுப் போன சாமிகளையும் அவரே சொல்லுவார் – நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில், கீழ ஊரணிப் பிள்ளையார் கோவில், முத்தாளம்மா, முத்துமாரி, அத்திமரத்துக்காளி என்று இன்னும் பல சாமிகள் உண்டு ) கோவில்களில் செலுத்தி விடுவார்.

1572. படிஅளத்தல் :- உக்கிராணத்துக்குப் பொருட்களைக் கொடுக்கும் முன் தலைமைச் சமையல்காரரிடம் அரிசி அளந்து கொடுப்பார்கள். வீட்டின் பெரியவர் தலைப்பாகை கட்டிச் சாமி வீட்டில் எதிரில் தடுக்குப் போட்டு அமர்ந்து இருப்பார். அவர் முன் அரிசி நிறைந்த பாத்திரமும் மரக்கால் அல்லது படியும் இருக்கும். தலைமைச் சமையற்காரர் வீட்டுப் பெரியவரிடம் ஒரு பெரிய அண்டாவில் அரிசி அளந்து போடச் சொல்லி வாங்கிக் கொள்வார். சாமியைக் கும்பிட்டு விட்டு வீட்டுப் பெரியவரும் ஒரு கைப்பிடி முதலில் போட்டுவிட்டு அதன்பின் மரக்காலிலோ படியிலோ அரிசி அளந்து அண்டாவில் போடுவார்.

1573. சாமான்களை லிஸ்ட் போட்டு அடுக்குதல் ( சமுக்காளம் சாமான்கள் மளிகைச்சாமான்கள் ) – 3, 4 நாளைக்குத் திருமணச் சமையல் மெனு லிஸ்டைத் தலைமைச் சமையற்காரருடன் தயார் செய்து ஆளுக்கொரு காப்பி வைத்துக் கொள்ளுவார்கள். வீட்டில் புழங்கும் சாமான்கள் எடுத்தால் பித்தளை அண்டா, வாளி, காசாணி அண்டா, சில்வர் வாளிகள் பேசின்கள், அலுமினிய சட்டிகள் ப்ளாஸ்டிக் வகையறா ஆகியவற்றையும் சமுக்காளம் பந்திப்பாய் போன்றவற்றையும் பேப்பரில் குறித்துக் கொண்டு சமையல்காரர் வசம் ஒப்படைப்பார்கள்.

1574. உக்கிராணம் , அடுப்பு வெட்டிச் சமையல் ஆரம்பித்தல் – மளிகை, தீஞ்சாமான்கள் ( வற்றல் வரளி, உப்புமா, இடியப்பமா, ஊறுகாய் ) வகையறாக்களை உக்கிராணம் பார்க்கும் பெண்மணியிடம் ஒப்படைப்பார்கள். அதே போல் சந்தைக்கோ அயலூருக்கோ ( திருச்சி, மதுரை ) சென்று இங்கிலீஷ் காய்கறி நாட்டுக்காய்கறி வெங்காயம் தக்காளி உருளை போன்றவற்றை வாங்கி வந்து கொடுப்பார்கள். மூகூர்த்தக் கால் ஊன்றும் அன்றே அடுப்பு வெட்டிச் சமையலை ஆரம்பித்துவிடுவார்கள் சமையல் கலைஞர்கள். பருப்பு மசித்துக் கத்திரிக்காய் வாழைக்காய் எடுத்துச் சமைப்பார்கள்.

1575. முளைப்பாரிக்கு தானியங்கள் ஊறவைத்தல் – முகூர்த்தக் கால் ஊன்றிய அன்று இரவே முளைப்பாரிக்கு என்று சொல்லிக் கடையில் வாங்கி வந்திருக்கும் தானியங்களை ஊறவைப்பார்கள். சாமி வீட்டின் எதிரில் ஒரு செம்புத் தவலையில் நீர் நிரப்பி அதில் நெல், பயறு போன்ற தானியங்களை ஆளுக்கு (இரண்டு கையாலும் கோதினாற்போல் அள்ளி ) மூன்று கைப்பிடி கிழக்குப் பார்த்து வணங்கிவிட்டுப் போடுவார்கள். இதுவும் வீட்டில் இருக்கும் பெண்டிர் அனைவரும் கலந்துகொள்ளும் நிகழ்வு.

1576. கோட்டைகட்டுதல் – வைக்கோல் பிரி கொண்டு வந்து அதில் நெல் கொண்ட பையை வைத்துக் கோட்டை கட்டுவார்கள். திருப்பூட்டியதும் கைகள் இணைந்தபடி மணமகனும் மணமகளும் மாமன்மாருடன் மணவறையைச் சுற்றி வந்து இந்தக் கோட்டையைத் தாண்டிச் சாமி வீட்டிற்குள் சென்று அமர்ந்து சாமியை வணங்கி வருவார்கள்.

1577. விதைநெல் கொடுத்தல் – கோவிலுக்கு விதைப்பு நெல்லை வாங்கிக் கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் அனைவரிடமும் ஒரு துண்டு விவசாய நிலமாவது இருந்தது போல. அதனால் அதில் வரும் விளைச்சலைக் கடவுளுக்கு வீட்டு விசேஷ தினத்தில் அளிக்கும் பழக்கம் வந்திருக்கலாம். விதைப்புப் பெருகி வருவது போல குடும்பமும் பெருக வேண்டும் என்று கொடுப்பதாக இருக்கலாம்.

1578. ஆலாத்தி தயார் செய்தல் ( நீராலாத்தி, சதுராலாத்தி கூம்பு ஆலாத்தி ) – நீராலாத்தி அப்போதைக்கப்போது தயார் செய்வது ஒரு சின்ன பேஸினில் மஞ்சள் சுண்ணாம்பு போட்டு சிறிது நீர் விட்டுக் கரைத்து வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு வைத்து அதைக் கொண்டு திருஷ்டி கழிக்க ஆலாத்தி எடுப்பார்கள். இன்னொன்று சாதம் அல்லது இட்டிலியில் மஞ்சள் சுண்ணாம்பு விளக்கெண்ணெய் விட்டுப் பிசைந்து சதுரமாகவும் கூம்பாகவும் செய்து அதில் தென்னையின் குச்சிகளை ஒடித்து அதில் புதுக் காடாத்துணியைச் சுற்றி விளக்கெண்ணெயில் தோய்த்து ஆலாத்தியில் குத்தி வைப்பார்கள். சதுராலாத்தி ஒன்றும் கூம்பு ஆலாத்தி மூன்றும் இருக்குமென நினைக்கிறேன்.  

1579. முதல் சீர் வைத்தல் – உள்ளூர்த் திருமணத்தில் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று முதல் சீர் வைத்து வருவார்கள். இதனை உப்புப் புளி வைத்தல் என்றும் சொல்கிறார்கள். மஞ்சள், உப்பு, புளி, பஞ்சு, விபூதி, பச்சரிசி, பாக்கு, ஆகிய ஏழு பொருட்களை ( சடங்குத்தட்டில் வைப்பது )கொண்டு சென்று வைத்து வருவார்கள்.  


1580. மறுசீர் வைத்தல் – இதனை மறுநாள் காலையில் மாப்பிள்ளை அழைப்பின்போதே செய்துவிடுகிறார்கள். மாப்பிள்ளை அழைக்கும்போது மாலை, வேட்டி துண்டு பூச்செண்டு மோதிரம், கைக்கெடிகாரம் தங்கச் சங்கிலி, கைச்சங்கிலி போட்டு மேளதாளத்தோடு ( சிலர் பேண்ட் வாத்தியத்தோடு ) மாப்பிள்ளை அழைத்து வருவார்கள். 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


















































129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும். 


130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

131.காரைக்குடி முனியையா கோயில்.

 

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

 

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

 

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

 

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

 

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

 

137. வட்டாரப் பழமொழிகள் - 4.

 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

 

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

 

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

 

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

 

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

 

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

 

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

 

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

 

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

 

147. பேர் பெற்ற வீடு.

 

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

 

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

 

150. பூசைச் சாப்பாடு.



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)