செவ்வாய், 13 அக்டோபர், 2020

பணத்திருப்பேடும் குடிவழியும்.

 1621. கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல் :- திருமணம் முடிந்ததும் பெரியோர் அனைவரின் காலிலும் விழுந்து ஆசி பெறுதல். இச்சமயம் அவர்கள் பணமோ பொன்னொ கொடுத்து ஆசீர்வதிப்பார்கள். மற்றையோரும் பொருளோ பணமோ கொடுத்து ஆசி வழங்குவார்கள்.


1622. திருமண வாழ்த்துப்பா படித்தல். :- இச்சமயம் திருமணத் தம்பதிகளை வாழ்த்தி அவர்களின் சகோதர சகோதரியரோ, அவர்களின் குழந்தைகளோ வாழ்த்துப் பாக்களைப் படிப்பார்கள். இதை அவர்களேயும் இயற்றி இருக்கலாம். அல்லது தமிழறிஞர்களிடம் எழுதி வாங்கியும் படிப்பார்கள். இவ்வாழ்த்துப் பாக்களை 200, 300 என்ற அளவில் அச்சிட்டு வந்திருந்தோருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்

1623. பொட்டலம் பிரித்தல். :- இது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. மணமக்கள் இருவருக்கும் உறவுக்குழந்தைகள் இரு பொட்டலங்களைக் கொடுத்துப் பிரிக்கச் சொல்வார்கள். யார் முதலில் பிரிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய. இக்குழந்தைகள் அதில் சாக்லேட், குழந்தைகளின் பாட்டில், ரப்பர், ஜால்ரா, விசில் போன்ற பொருட்களைப் பேப்பர்களில் பலமுறை சுற்றிக் கட்டிப் பொட்டணமாகக் கொடுத்துப் பிரிக்கச் சொல்வார்கள். இந்நிகழ்ச்சியை உறவுக்காரர்கள் அனைவரும் கண்டு களிப்பார்கள்.  இதேபோல் வாழைப்பழத்தையும் மணமகனுக்கும் மணமகளுக்கும் ஐத்தை மக்கள், அம்மான் மக்கள் தடவுவார்கள்.

1624. பணம் எழுதுதல்:- மணவறைச் சடங்கு முடிந்ததும் மணமகன்/மணமகள் வீட்டுப் பங்காளிகள் தனித்தனியாகக் கூடி ஓரிடத்தில் அமர்ந்து பணம் எழுதுவார்கள். அதற்குப் பதிவேடாக பணத்திருப்பேடு பயன்படும். இதுவும் இசைகுடிமானம் போல் ஒரு ஆவணமாகும். 

1625. பணத்திருப்பேடு.:- புதுமை, திருவாதிரைப் புதுமை, கார்த்திகைப் புதுமை, மணிவிழா, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாய பங்காளிகள் பணம் எழுதித் தங்கள் வருகையைப் பதிவு செய்வதே பணத்திருப்பேடு. இதை மொய்ப்பண ஏடு என்றும் சொல்வார்கள்

1626. குடிவழி :- பணத்திருப்பேட்டில் வரிசை முறைப்படி பங்காளிகளின் குடிவழியைப் பின்பற்றி எழுதப்படுவது. வாரிசு முறைப்படி எந்தெந்த ஐயாவீடு முதலில் வருமோ அந்தந்த ஐயாவீட்டின் வரிசைப்படி எழுதுவது. அதேபோல் பாட்டையா, ஐயா , மகன் பேரன் என்ற வரிசைப்படி எழுதுவார்கள்.


1627. காப்புக் கழட்டிக் காமோதிரம் இடுதல்:-  மாமியார் மணமகளின் கரத்தில் தனது காப்பைக் கழட்டிப் போட்டு காலில் மிஞ்சி அணிவித்தல். மிஞ்சியைக் காமோதிரம் என்பார்கள். அதன் பின் தன் வளையலை மாமியார் திரும்பி வாங்கி அணிந்து கொள்ள வேண்டும்.

1628. மஞ்சள் நீராடுதல்.:- மாப்பிள்ளையும் பெண்ணும் மஞ்சள் நீராடுவார்கள். பண்டாரம் இந்நிகழ்வின்போது இருவரின் காலிலும் ஊற்றச் சொல்லிச் சொல்லுவார். அதேபோல் மணமக்களின் பெற்றோர் இருவரும் தமது வேஷ்டிகளின் நுனியிலும் சேலைகளின் நுனியிலும் ஒருவர் மற்றவருக்கு மஞ்சள் நீர் தந்து நனைத்துக் கொள்வார்கள். அன்றையக் காலகட்டத்தில் மஞ்சள் நீர் ஊற்றி மஞ்சள் நீராடி இருப்பார்கள் போல் தெரிகிறது.

1629. பிள்ளை எடுக்கிக் கொடுத்தல் / குழவி கொடுத்து வாங்குதலும் சொல்லிக் கொள்ளுதலும். :- மாப்பிள்ளை வீட்டில் பங்காளிகளிடத்தில் பெண் பட்டுத்துணியில் சுற்றிய குலம்வாழும்பிள்ளையைக் கொடுத்துக் கும்பிட்டு விழுந்து வாங்கி ஆசி பெற்றுக் கொள்வார். நல்ல குலம் வாழும் பிள்ளை பிறக்க வேண்டுமென. அதன் பின் தனது தாயாதிகளிடம் பெண் சொல்லிக் கொள்வார். இப்போதும் விபூதித் தட்டுக் கொடுத்துக் கும்பிட்டு விபூதி பூசிக் கொள்வதுண்டு.

1630.பெண் அழைத்துக் கூட்டி விடல் :- பெண் வீட்டில் நிலைக் கோலத்தில் மணமக்களை நிற்கவைத்து பெண்ணின் அத்தை அல்லது அப்பத்தா ஸ்லேட்டு விளக்கு ஏற்றி வைத்து ஆலாத்தி காட்டி விபூதி பூசி மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண்ணைக் கூட்டி விடுவார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. 
காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. 
காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. 
காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. 
காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29.
 காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. 
காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. 
காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. 
காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. 
காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.


35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.


59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே

75.  காவடியாம் காவடிகந்தவேலன்காவடி

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்

80. செட்டிநாடும் செந்தமிழும்தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும்சில திருமணச்சடங்குகளும்.

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும்சுவற்றலமாரிகளும். :-

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும்பெருமாளும் தேவியும்

87. இந்த சீர் போதுமா ?! 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

92. இனியெல்லாம் பிஸினஸே

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.

98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

100. கானாடுகாத்தான்கடியாபட்டிதெக்கூர்கோட்டையூர்காரைக்குடிவீடுகள்.

101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.

102. பழம்பெரும் வீடுகள்.

103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்குபிச்சோடாவும் சித்தாடையும்.




106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார்காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.

108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்

109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.

110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.

111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும்சிவப்பு மாத்தும்.

112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.

113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.

115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.

116. காரைக்குடிச் சொல்வழக்குசம்போவும் கவுடும்.

117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.

118.காரைக்குடிச் சொல்வழக்குலண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.

 

119. காரைக்குடிச் சொல்வழக்குகிட்டங்கியும் பொட்டகமும்.

120. காரைக்குடிச் சொல்வழக்குதுடுப்பும் ஒலுகும்.

121. காரைக்குடிகானாடுகாத்தான் வீடுகள்.

 

122. கண்டனூர்கானாடுகாத்தான்தெக்கூர் வீடுகள்.

 

123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.

 

124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.

 

125.காரைக்குடிச் சொல்வழக்குசிலேட்டு விளக்கும் சாரட்டும்.

 

126.காரைக்குடிச் சொல்வழக்குகா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்


127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.

 

128. காரைக்குடிச் சொல்வழக்குபொன்னுளியும் விராகனும்.


129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்

 

130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

 

131.காரைக்குடி முனியையா கோயில்.

 

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

 

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

 

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

 

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

 

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

 

137. வட்டாரப் பழமொழிகள் - 4.

 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

 

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

 

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

 

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

 

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

 

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

 

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

 

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

 

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

 

147. பேர் பெற்ற வீடு.

 

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

 

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

 

150. பூசைச் சாப்பாடு.


151.


152.


153.


154. 

 

டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.




 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. 
மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

2 கருத்துகள்:

  1. பல புதியனவற்றை அறிந்தேன். பணத்திருப்பேட்டில் முறைவாரியாக பதியப்படுவதை தற்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)