செவ்வாய், 30 ஜூலை, 2019

டாஸோஸும் டார்டெல்லானியும்.

2281. சொல்லிக் கொள்ளும்படியாக என்ன செய்தாய் என்ற கேள்வி துரத்தும்போது தூக்கம் போய்விடுகிறது.

2282. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பாதி தூரம் மலை ஏற வேண்டும்.பின் இறங்க வேண்டும். இறக்கத்தில்தான் கோவில் அமைந்திருக்கிறது.

பயணத்தில் பதட்டப்பட வைக்கும் சரிவுகள் அதிகம். அதிலும் சிலர் குதிரைகளில் தேசிங்கு ராஜன்/ராணிகள் போல் பட்டிவாரில் கால்மிதித்து உய்யெனப் பறப்பார்கள்.

சிலர் டோலியில் போய்ச் சேர்ந்தால் போதும் என அரைகுறையாகப் படுத்திருப்பார்கள்.

ஜெய் மாதா தீ என ஒரு கோலைப் பிடித்து ஔவையார் பாணியில் ஏறி இறங்கிப் போய் வந்த நோவு ஒன்றுதான் நம் கடவுட் தேடலில் கிடைத்த அடையாளம்.

ஏறினோமா இறங்கினோமா. எதைப் பெற்றோம். வாழ்க்கையும் சிலசமயம் அப்படித்தான். எழுத்தும்..

2283. Tazos

2284. ஒரே இட நெருக்கடி. :D

#Gulbarga

2285. https://www.youtube.com/watch?v=ioExEcUB9o0 
tango

 https://www.youtube.com/watch?v=8ZX7xURWsYM
tango

 https://www.youtube.com/watch?v=Qvnei5JKGVs
tango artistic & mesmerising

2286. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வாட்ஸப்புல ரிப்ளை பண்றாங்க. ஃபேஸ்புக்ல இனி விஷ் பண்றது வேஸ்ட்னு தோணுது

2287. கிரிக்கெட் மேட்சை ஒருதரம் கூட முழுசா பார்த்ததேயில்லை. ஹாஸ்டலில் தோழியருடன் 83 வேர்ல்ட் கப் பார்த்ததோடு சரி. அதன் பின் அகஸ்மாத்தாக எப்பவாச்சும் பார்த்தா உண்டு. இதை மெனக்கெட்டு ஆஃபீசுக்கு லீவ் எல்லாம் போட்டுட்டு எப்பிடிப் பொறுமையாய்ப் பார்க்கிறாங்கன்னு ஆச்சர்யமா வேற இருக்கும். இதுக்கு பழமொழி எல்லாம் சொல்லி யார்ட்டயும் நான் வாங்கிக் கட்டிக்க விரும்பல.

சேலம் வில்வாத்ரி பவன் நடத்தியவரின் பேரன் வெங்கட்ராமன் எங்கள் ஃபேர்லேண்ட்ஸ் , அனுக்ரஹா அபார்ட்மெண்டின் பில்டிங் ப்ரமோட்டர். என் சின்ன மாமனார் அரசுக் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது வெங்கட்ராமன் அங்கே கிரிக்கெட் மேட்ச் நடத்தி நிறைய இளம் வீரர்களை இனம் கண்டிருக்கிறார். டீ ஷர்ட்ஸ் எல்லாம் பரிசாக வழங்கி சிறந்த வீரர்களை ஸ்டேட் டீமுக்கு எல்லாம் செலக்ட் செய்திருக்கிறார்.

பில்டிங் கீழேயே ஆஃபீஸ் என்பதால் அவ்வப்போது அகஸ்மாத்தாக சந்தித்து கொண்டதுண்டு. அவரிடம் ஒருமுறை ஷேர் ட்ரேடிங் பிஸினஸ் (அப்போது நான் ஆன்லைன் ட்ரேடிங் செய்து வந்தேன், கணவரின் ஆலோசனையுடன், ஐசிஐசிஐ டைரக்ட் டாட் காமில் . காலையில் ஏறி ஆயிரக்கணக்கில் லாபம் வந்து மாலையில் அதைவிட அதிகமாய் ஸ்டாப் லாஸ் கூடப் போடமுடியாமல் நட்டமாகிவிட எனக்கு பிபி இல்லாமலே தலை சுற்றும். ) பற்றி அவரிடம் சொல்ல அது பற்றி அவர் எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமேற்படுத்தியது. அது மட்டுமல்ல அதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. !

ஜாபர்ஸ் ட்ரேடர்ஸ் போல் கோட்டை விடாமல் பணத்தை நிஜமாகவே ஏ ப்ளஸ் கம்பெனிகளில் முதலீடு செய்து பலவருடங்கள் பொறுமை காத்து ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில் ஈட்டியவர்களும் உண்டு.

வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்தியதால் கிரிக்கெட் புத்திசாலிகளின் விளையாட்டா/ புத்திசாலித்தனமான விளையாட்டா?

ட்ரேடிங் புத்திசாலித்தனமும் கேமிங் புத்திசாலித்தனமும் நிச்சயம் வேறுவேறுதான்.

2288. இப்ப உள்ள திருமண வாழ்க்கை எல்லாம் பார்க்கும்போது நம்ம காலம் எல்லாம்  பொற்காலம்னு தோணுது. :)

2289. ஆணவம், ஆவணம் இது இரண்டுக்கும் பேதம் தெரியாத பேரறிஞர்களும் இருக்கிறார்கள். :)

2290. சிலர் அழுவார். சிலர் வைவார். நாம் சிரித்துக்கொண்டே கடக்கின்றோம்

2291.பதினஞ்சு நாளாச்சு. வீல் எல்லாம் வீல் வீல்னு கத்துது. நாளைக்காச்சும் தார் ஊத்துவாங்களா ;) :p

2292. பொத்தாம் பொதுவாக ஒருவருக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பு இருக்கும் நல்லவர்களையும் காலி செய்துவிடுகிறது

2293. எதிலாவது முரண்பட்டுக் கொண்டே இருந்தால்தான் உயிர்ப்பு என்பது சிலர் கொள்கை. அமைதிக் கடல் பிடிப்பதில்லை. பாறையோ பனிச்சிகரமோ வேண்டியிருக்கிறது தன்னை உடைக்க.

2294. என் வலைத்தளத்தின் பக்கப் பார்வைகள் பதிமூன்று லட்சத்தைத் தாண்டிவிட்டன. நன்றி மக்காஸ்.

#ஒவ்வொரு_சின்ன_விஷயத்தையும்_கொண்டாடுவோம்

2295. Mint Tortelloni with melted butter & sauce. Yummy

2296. ஹாஹாஹா என்ன பேசுறேன்னு எனக்கே வெளங்கல.( என் கல்லூரித்தோழி ஒருத்தி இப்போ மிகப் பெரும் இலக்கியவாதியா கொண்டாடப் படுறா. அவ பத்தி சொன்னேன். அவ என் ரூம்மேட். இருவரும் ஒன்றாகவே எழுதத் தொடங்கினோம். நடுவில் 24 வருடங்கள் நான் எழுதவே இல்லை. இருந்தும், ஆங்கில இலக்கியம் பயின்ற அவள் எழுத்து அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே பிரமாதமாகத்தான் இருந்திருக்கிறது.
அதத் தான் சொல்லிட்டு இருக்கேன் இந்த வீடியோல.

2297. Vijayammaa my first love.
மன்னவனே அழலாமா.

2298.Insomnia.. ? Prescription - Reading some poetry bookssss.. Zzzzzzzzz

2299.நகரும் நிழலோடு
நடந்து கொண்டிருக்கிறது
குடை

2300. நீர் ஜரிகை
நெய்து கொண்டிருக்கின்றது
சாரல் தறி


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்




























115.

2 கருத்துகள்:

  1. நல்லதொரு தொகுப்பு. வைஷ்ணோ தேவி பயணம் - மூன்று முறை சென்று வந்திருக்கிறேன் - இனிய நினைவுகள் தந்த பயணங்கள் அவை.

    பதிலளிநீக்கு
  2. ஆம் வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)