வெள்ளி, 10 மே, 2019

போக்கும் ப்ளாக்கும்

2181. எனது இருபதாவது நூல்,”கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே. :)

கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்: KAMBAN VIZHAVUM KAMBAN PATRIYA NOOLGALUM (Tamil Edition)

https://www.amazon.in/dp/B07R5CWWRH

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

///ச. கைலாசபதியின் அகலிகையும் கற்பு நெறியும் பல்கோணப்பார்வை. பழைய காப்பியக் கதைகளை நவீனத்துவமாக எழுதிப்பார்ப்பது குறித்து எடுத்துக் காட்டுக்களோடு கூறியுள்ளார். கோவிந்தன் எனப்படும் விந்தன் ( பாலும் பாவையும் – நவீன அகலிகை கதை ) , ஜெயகாந்தன் ( அக்கினிப் பிரவேசம் ) ஆகியோர் புதுமைப் பார்வையில் படைத்திருப்பதை ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் மற்றும் அமெரிக்க நாடகாசிரியர் ஓநீல் ஆகியோரின் எழுத்துக்களோடு ஒப்புமைப் படுத்துகிறார்.
கருத்து முதல் வாதம், வர்க்க சமுதாயம் தோன்றிய பின் பெண்ணினம் பெற்ற இடம். , ஆணின் யதேச்சதிகாரம், தாயுரிமையை ஒழித்துத் தந்தை உரிமையைப் புகுத்தியது, ஆண் தலைமை, அரசியல் அதிகாரம், மத அதிகாரம், வம்ச அதிகாரம், ஆண் அதிகாரம் ஆகியவற்றைச் சாடுவதோடு சாப விமோசனம் பெற பெண்ணுக்குத் தொழிலோ உத்யோகமோதான் முடிவு என்னும் கருத்தை முன் மொழிகிறார். ///

2182. சீச்சீ ஜீனியா அதெல்லாம் வெஷம் மாதிரி புளிக்கும். ஃப்ரெஷா காச்சுன பசும்பால்ல ஃப்ரெஷா எடுத்த ஃபில்டர் டிக்காக்‌ஷன் மட்டும் போட்டு சாப்பிட்டு பழகுங்க.
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இந்த ஜீனி எல்லாம் அந்நிய நாட்டு இறக்குமதி சதி :) ;) :p


2183. அம்மம்மா.. இதென்ன காதா இல்ல வளையம் மாட்டுற ஸ்டாண்டா. ?!

2184. ஒரு குளுகுளு பயணம்

2185. அழகான இந்த மஸ்ஜித் எங்க இருக்குன்னு சொல்லுங்க

2186. இதுகள்ல சமைச்சு சாப்பிட்டா வெயிட்டே ஏறாது.

2187. இப்பிடி ஒரு மழை பொழிஞ்சா நல்லாருக்கும்
theen sinthuthey vanam

2188. சில பேருக்கு பிடிச்சது போக் விளையாட்டு. சில பேருக்கு பிடிச்சது ப்ளாக் விளையாட்டு

2189.
பள்ளிக்குச் சென்றிருக்கும் பசங்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்தே மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ.

கொண்டவர்க்கெது பிடிக்கும், குழந்தைகள் எதை விரும்பும், தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன..

பள்ளிப்பருவத்தில் படித்த பாரதிதாசனின் பாடல்கள். புரட்சிக்கவியின் குடும்பநலப் பாடல்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே..

ஆமா கூகுள் சர்ச்சில் இப்ப எல்லாமே ஹிந்தியில் மாறிக்கிட்டு இருக்கே என்ன செய்யப் போகிறோம் தலைவா ????? !!!!!

2190. நானும் எல்லா ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வெஸ்டையும் அக்சப்ட் செய்யத்தான் நினைக்கிறேன். ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் அதிகமா இருந்தா படம் கொசகொசன்னு இருக்கு. இல்லாட்டி பூ, புறா, கண், தலைவர், நடிகர், குழந்தைகள், கும்பம், தெய்வம், கும்பலா ரெக்வெஸ்ட் கொடுத்தது யாருன்னே தெரியாதபடிக்கு ஒரு ஃபோட்டோ, இல்லாட்டி சந்தேகத்துக்கிடமான ரெட்டையர், ஏன் மக்கா ஏன்.? பேஜ் போய் பார்த்தா எல்லாம் ஷேரிங்கா இருக்கு.

மொத்தத்துல தமிழ்நாட்டுல மட்டும் ஒவ்வொருத்தருக்கும் அஃபிஷியலா ஒரு ஐடியும் அன் அஃபிஷியலா பத்து ஐடியும் இருக்கு.
இம்புட்டுப் பேரையும் கட்டி மேய்க்கிறியே மார்க்கு நீ தெய்வம்பா.

2191. வெய்யிலுக்கு இதமா ஒரு bubble ride. :)
#Shilparamam_hybd

2192. டான்ஸ் ஸ்டெப்ஸ் கொஞ்சம் காமெடியாக சிரிக்க வைத்தாலும் இசை, பாடல், குரல், ஜெய்ஷங்கர், ராஜஸ்ரீயின் இளமை & அழகு எல்லாம் சூப்பர். குட்நைட் மக்காஸ்
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA&fbclid=IwAR0XHda9z-2Cw6xT0pFzm4yg4U7t2LtCpPRVEpqaeK3oIDJdZlu0TdWbjdI

2193. ஜில் ஜில் லால்பாக்

2194. My kids fav snacks, "Chilli Barotta "

2195. Ithu pona masam.. Intha masam eclairs kooda kidaiyathu. Veera sugar aakkum

2196.கோட்டை எல்லாம் இல்லை. குற்றாலம் சித்திரசபை கோவில் மதில்.

2197. ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதுதான் இவரை அறிந்தேன். எல்லா இடையூறின் போதும் எழுத்தையே சுவாசித்தவரை நுரையீரல் புற்றுநோய் அரித்தது கேட்டு அதிர்ச்சியாய் இருந்தது. தோழி கலை இலக்கியாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

6.கலை இலக்கியா
அணையும் உலையும்...

பேசுகிறாய் பேசவில்லை.
நினைக்கிறாய் நினைக்கவில்லை
இருக்கிறேன் என்பதையும்
புறக்கணிக்கிறாய் பரவாயில்லை.

எப்போதும் தளும்பும்
அணைக்கட்டொன்று
வரண்டதும் அன்றி,
புகை கக்கும்
சூளையானதை
எப்படிச் செரிக்க...?

2198. விகடனில் மல்லிகைக் கிழமைகள் மூலமே பரிச்சயம் ஃப்ரான்சிஸ் க்ருபா. அட என ஆச்சர்யப்படவைத்தவர். நேற்று நண்பர்களின் அரவணைப்பில் மல்லிகைக் கிழமைகள் பழி நீங்கி மீண்டது பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது.

பழிக்கும் பரிசுத்தத்துக்கும் சிசி டிவி காமிராக்கள்தான் ஒரே விடிவு/தீர்வு போலிருக்கிறது. ஹ்ம்ம். இனிமேல் யார்க்காவது உதவுமுன் சுற்றிலும் எங்காவது சிசிடிவி காமிராஇருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெ.பிரான்சிஸ் கிருபா

இருள் குளிரும் இரவில்
நிலா மணக்கும் மஞ்சள் பொழுதில்
தூரங்கள் துயிலும் பாதையில்
கண்களில் கடும் கோடை வெயில் வழிய
உன் காதலனைப் போல் ஒருவன்
கால்களால் கனவுகளை அளந்தபடி
நடந்துகொண்டிருக்கிறான்.

யாரை வரவேற்க அல்லது
யாரை வழியனுப்ப அவன்
சென்றுகொண்டிருக்கிறான் அல்லது
வந்துகொண்டிருக்கிறான்
கேள்விக்குறியாகி சுழிந்து நிற்கிறது
நிசிக் காற்று.

உறங்க ஆளற்ற தனிமையில்
விழித்திருக்கும் ஒரு படுக்கையறை
சுவர்கள் குலுங்கச் சிரிக்கிறது விரக்தியோடு.

உன் வியர்த்த கழுத்தோரம், என்றோ
கொதித்த வெப்பம் ருசித்த உதடுகளில்
விளக்கு போல் எரிந்து
ஏற்றும் வெளிச்சத்தில்
அவன் முகத்தைத் தெளிவாகக்
காண முடிகிறது.

கண்களில் களைப்போடு சுழலும்
கருவிழிகளில் காதலின் பசி
காலத்தின் நடனத்தைக் கோபித்தாடுகிறது.

யாருக்கும் எட்டாத
எட்டாவது கிழமை
அவன் இடது கையில்
இறந்த முயல் குட்டி போல்
துவண்டு ஆடுகிறது.

எந்தக் காரணமும் இல்லாமல்
அவன் வலது கையில்
ஒரு நதி
தண்ணீரைக் கோபித்துக்கொண்டோடுகிறது.

நீ கண்டால்
நிச்சயப்படுத்திவிடுவாய் அவன் யாரென்று
எனக்கும் அவனை
அவ்வப்போது பார்த்த ஞாபகமிருக்கிறது
நிலைக் கண்ணாடியில்!

2199. ////பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் மிக அற்புதமான கதைகள்......பஷீர் ஒரு விதத்தில் நம்மிடம் பிரபஞ்சம், தத்துவங்கள் என்று பேசி வியக்கச் செய்கிறார் என்றால் இதில் யதார்த்தம், மொழி ஆட்சி, மனவோட்டத்தில் சொல்லப்படும் கதைகள் என மீரானும் அசரடிக்கிறார்.////

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான மீரான் அவர்கள் மறைவுக்கு அஞ்சலிகள். எழுத்தால் வாழும் அவரை இழந்ததாக உணரமுடியவில்லை என்பதுதான் உண்மை.

2200.
இதுல ரெண்டு படிச்சிட்டேன். இன்னும் நாலு படிக்கணும். இன்னும் நிறைய புக்ஸ் பெண்டிங். 1000 மணி நேரம் வாசிப்புக்கு போகலாமன்னு யோசிச்சிங் 

டிஸ்கி :-




4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


























2 கருத்துகள்:

  1. படங்களும் அதற்கான கேப்ஷன்ஸ் விளக்கம் எல்லாம் சூப்பர் இடையே கூடவே ஒரு வருத்தமான செய்தியும் உங்கள் தோழியின் மறைவு.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)