வியாழன், 11 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்

1281. சதப்பெறட்டு, - சதை பிரண்டு போதல். ஏதாவது கடினமான காரியம் செய்யும்போது சதை பிசகிப் போதல். பொதுவாக கை அல்லது காலில். படிகள் அல்லது சீரற்ற தரையில் நடக்கும்போது கால் பிசகி கெண்டைக்காலில் அல்லது பாதத்தில்தான் அதிகம் சதைப்பிரட்டு ஏற்படும்.

1282. தவிடு வறுத்து ஒத்தனம், - இந்த சதைப்பிரட்டுக்குத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுப்பார்கள். ஒரு துணியில் தவிட்டை முடிந்து வெறும் வாணலியை அடுப்பில் சூடேற்றி அதில் இந்த தவிட்டு மூட்டையைச் சூடுபடுத்தி வலிக்கும் இடத்தில் ( சுளுக்கு அல்லது சதைப்பிரட்டு ) ஒத்தடம் கொடுப்பார்கள்.

1283. புளிப்பத்து, - இந்த ஒத்தடத்தில் ( தவிட்டு ஒத்தனம் ) வலி தீராவிட்டால் புளியைக் கெட்டியாக கரைத்துக் கொதிக்க வைத்து வலிக்கும் இடத்தில் அந்தப் புளிச்சாறால் தடவி சூடாகப் பத்துப் போடுவார்கள்.

1284. முட்டப்பத்து, - நரம்பு போன்றவை பிசகி இருந்தாலோ அல்லது எலும்பில் விரிசல், மெல்லிய விரிசல் இருந்தாலோ ரத்தக்கட்டு ஏற்பட்டாலோ அதற்கு முட்டைப் பத்துப் போடுவார்கள். முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துப் பத்தாகப் பூசி விடுவார்கள். அது இறுக இறுக வலி குறையும். எலும்பை இணைக்கும். இந்தப் பத்துக்களை எல்லாம் முட/நுட வைத்திய சாலையில் போடுவார்கள்.  


1285. ஆல்றீசு, - ஹார்லிக்ஸ் பேச்சு வழக்கில்.

1286. சத்தவடஞ்செண்டு,  - சிறிது நேரம் கழித்து.

1287. ஊட, ஊடால, -  நடுவில்

1288. எடுத்தொதவிக்கு, - கையுதவி செய்வது போல். கூட மாட இருந்து உதவி ஒத்தாசை செய்ய ஒரு ஆள் வைத்துக் கொள்வது.

1289. அடச்சி வைத்தல், - வட்டிக்குப் பணம் அடைத்தல். லேவாதேவி செய்யும் ஒருவரிடம் தனது பணத்தைக் கொடுத்து அவரிடம் வட்டிவாங்கிக் கொள்ளுதல். அவர் தனது தொழிலுக்கோ அல்லது இவரிடம் குறைந்த வட்டி கொடுத்துவிட்டு அதிக வட்டிக்கு வெளியே பணத்தை விட்டு வசூல் செய்வார்.

1290. அக்கறையாப் பேசன பேசாம, - அக்கறை இல்லாமல் பேசுதல், பிரியம் இல்லாமல் பேசுதல், நடந்து கொள்ளுதல். , ஒருவரோடு விருப்பமில்லாமல் கட்டாயத்துக்காகப் பேசுதல்.

1291. பிரிசுகடயா, பிரிசுபுடியா, மலுக்கிக்கினு :- பிருசு பிடித்தல், மலுக்கிக் கொள்ளுதல். செய்ய வேண்டிய ஒரு விஷயத்தைச் செய்யாமல் பிடிவாதம் பிடித்தல். தன்னைப் பற்றிப் பெருமையாக எண்ணிக்கொண்டு மலுக்கிக் கொள்ளுதல்.

1293. கா(ல்)ப்பொறப்பு – குழந்தை பிறக்கும்போது அம்மாவின் வயிற்றிலிருந்து காலால் உதைத்து தலையால் வெளிவரும். அதாவது குழந்தை பிறக்கும்போது தலைதான் முதலில் வெளிவரும். சில குழந்தைகள் தவறுதலாக உருண்டு காலை எத்தி கருப்பை வாயில் காலால் உதைத்து காலை வெளியே கொண்டு வந்து விடும். அப்போது மருத்துவச்சியர் காலை உள்ளே தள்ளிவிட்டுத் திரும்பித் தலையால் வெளிவருமாறு இழுப்பார்கள். அல்லது கால் அதிகம் வெளிவந்தால் அப்படியே காலைப் பிடித்துப் பதமாக குழந்தையை எடுத்துவிடுவார்கள். இதற்குக் கா(ல்)ப்பொறப்பு என்று பெயர்.

1294. ஆத்தா வீடு விட்டுருச்சா, - ஆத்தா வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் மருமகளிடம் மாமியாரோ மற்ற உறவினர்களோ விசாரிப்பது.

1295. துண்டி வடிக்கிறது, துண்டா வடிக்கிறது, - ஒரே வீட்டில் மாமியாரும் மருமகளும் அடுத்த அடுத்த அடுப்படிகளில் துண்டாக - தனியாக சமைப்பது

1296. சொல்லவிட்டி,  - சொல்லியபின்பு.

1297. பெரிய தலைக்கட்டு,  - பெரிய ஆட்கள், பெரிய பேர் உடைய குடும்பத்தினர். பிரபலமான கௌரவத்திற்குரிய பணக்கார மனிதர்.

1298. தோமாலை, - தோளில் போடும் மாலை. பிள்ளையார் பட்டி விநாயகர் மலையுடன் இணைந்த விக்ரகமாக செதுக்கப்பட்டிருப்பதால் இவருக்கு தோமாலைதான் அணிவிப்பார்கள். தோளில் போடும் துண்டு, தாவணி, முந்தி போன்றவற்றிற்கும் தோமாலை என்று பொருள் கொள்வதுண்டு.

1299. பொட்டொடை,  - நெற்றிப் பொட்டு உடைப்பது. தலைவலி, தலைவலியால் தலையும் நெற்றிப் பொட்டும் விண் விண்ணென்று தெறிப்பதைப் போல் வலித்தால் பொட்டொடை என்று கூறுவார்கள்.

1300. தெகமட்டுதல், - திகட்டிப் போதல். உச்சகட்டத்(மான) தித்திப்பு. 


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!






டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

4 கருத்துகள்:

  1. நிறைய சொற்கள் எனக்குப் புதியவை.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  2. சில சொற்கள் பொதுவாக இருந்து விளங்கினாலும் பல சொற்கள் புதியவை. அறிந்துகொண்டோம்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக புத்தகமாக கொண்டுவாருங்கள் !

    பதிலளிநீக்கு
  4. நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி ஆரூர் பாஸ்கர்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)