செவ்வாய், 11 ஜூன், 2019

பெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும்.

2201. ஜென்சியின் குரலில் நிறம் மாறாத பூக்கள் பாடலில் ராதிகா அணிந்ததுபோல் ஃப்ரில் வைத்த மாக்ஸி அணிந்திருக்கிறேன்.மலேஷியாவில் இருந்து சபாபதி மாமா வாங்கி வந்தது :) ப்ரில் வைத்த ஜெர்சி பாவாடைகள், டபுள் நெட்டட் டாப்ஸ், சாட்டின் ஹவுஸ்கோட் எல்லாம் அப்போதைய ஃபேஷன், இப்ப விளம்பரங்களில் கையில் ஃப்ரில் வைத்த ப்ளவுஸஸ். :) பேஷன் திரும்பிருக்குபோல :)

2202. பெடலிங் குதிரையில் பெரியம்மா பேரன்


2203. ரொம்ப போர் அடிக்குது. யாரையும் ஒறண்டை இழுத்தும் பழக்கமில்லை.. :P

2204. அமேசான்ல 20 புக் போட்டு இருக்கேன். யாரும் போய் வாங்க மாட்டீங்களா. ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டு விக்குது. ஒரு நாளைக்கு ஒண்ணுமே இல்லை.

https://www.amazon.in/s?k=thenammai+lakshmanan&lo=list&fbclid=IwAR3Psm52fAwnFjov6tC2cfqBQHWZn8QDoNWJ9SmQ2ciMn-NyA65GsGu5Nqg&qid=1557463072&ref=sr_pg_


உங்களை எல்லாம் வச்சிக்கிட்டு புக் கூட போட முடியல. ஹாஹா

2205. தினை அடை. நல்ல வேளை காரம் சாப்பிடாதேன்னு இன்னும் யாரும் சொல்லல. இந்த சப்ஜா, சியா, ஃப்ளாக்ஸ் விதையிலெல்லாம் இப்பிடி செய்ய முடியாதா :) :) :)

2206. வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் வசதி வாய்ப்பில்லாத ஏழைகள் என நினைக்கிறார்கள்

2207. பெருநகரங்களில் இருப்பவர்கள் காரைக்குடியை குக்கிராமமாகக் கருதுகிறார்கள் . ஹாஹாஹா

2208. மெஸ் பில்லுல கூட பாடம் எழுதிப் பார்த்திருக்கேன். ( ஹிஹி அதெல்லாம் பேபிலதா மிஸ், பாலாம்பாள் மிஸ்ஸை வரைஞ்சதில்லை.

2209. நிலவெளி, டிஸ்கவரி நடத்தும் பிரபஞ்சன் நினைவுப் பரிசு நாவல் போட்டி. . ஆகஸ்ட் 31க்குள்ள அனுப்பி வைங்க மக்காஸ்.

( ஏ ஃபோர் ஷீட்டில் 150 பக்கத்திலிருந்து 200 பக்கம்வரை என்றால் 15,000 இலிருந்து 20,000 வார்த்தைகள் வரை இடம் பெறலாம். ! ) மிகப் பெரிய நாவலாக எழுத வேண்டும். :)

வாழ்த்துக்கள் வேடியப்பன் & டிஸ்கவரி புக்பேலஸ்.

////மதிப்பிற்குரிய எழுத்தாளர் Prapanchan நமது காலத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையாவார். அவர் நினைவைப் போற்றும்வகையிலும், புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டும் அவர் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது அறிவிக்கிறோம். இவ்விருது பற்றிய அறிவிப்பை நிலவெளி முதல் இதழில் வெளியாக காரணமாக இருந்த, கே. என். சிவராமன் , Bhaskar Sakthi உள்ளிட்ட நண்பர்கள் குழுவை இத்தருணத்தில் நினைவுகூர்கிறோம். 

இந்த நிகழ்வை #பிரபஞ்சன்_அறக்கடளைசார்பில் திரு Pns Pandian மற்றும் Discovery Book Palace-ம் ஒருங்கிணைக்கிறது.
 — withPrapanchan.//////


2210. ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகிலிருந்தாலே

2211. மொட்டைமாடியில் ஹெலிகாப்டர். சும்மா ஒரு வெளம்பரந்தான்

2212. யார் யாரையோ நெருக்கமாய் உணர்ந்திருக்கிறீர்களே..
உங்களையே உங்களுக்கு நெருக்கமாய் உணர்ந்ததுண்டா..
உங்களையும் நேசியுங்கள். கடைசியில் உங்களுக்கு நீங்களாவது சுயத்தோடு மிச்சமாவீர்கள்.

2213. போகும் பாதை தூரமே.


2214. நாகாபரணம் அணிந்த இந்த ஆள் யார் ??


2215. திறப்புவிழாவுக்காக இருந்தாலும் என்ன கொடுமை சரவணா இது..


2216. ஃபேனுக்கும் வேர்க்குது. அதான் கொண்டை போட்டிருக்குது


2217. ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் நு நினைக்கிறேன். மகன் விளையாடின வெள்ளாட்டு


2218. Husband:- Ennachu pal thechapadiyee vanthutiyaa.. Ore pal podiya irukku.
Wife..:- hmm. Enna kindal pannikittey irukkingannu palla kadichen.. Powder aayiduchu pola..

2219. கோமாதா ( குப்பைகளை உண்டு உயிர்க்கும் ) எங்கள் குலமாதா .. ஹ்ம்ம்.

அதென்ன அங்க்ரேஸி ஷராப் தூகான். ஹாஹா இங்கிலீஷ் மருந்துக் கடை மாதிரி.. :P

கோஸ்வாமி க்ருஷி சேவா ( விவசாயப் பொருள் விற்பனை ) கொஞ்சம் இந்த மாடுகளுக்கும் தீவனம் கொடுத்தாலென்ன


2220. கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக டிஸ்கவரியும் சகோ வேடியப்பனும் என் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.

டிஸ்கவரியின் மாபெரும் பங்கும் சகோ வேடியப்பன் அவர்களின் தொடர்ந்த ஊக்குவிப்பும் இல்லாமல் என் எழுத்துப் பயணம் சாத்யப்பட்டிருக்காது.
மதிவதனியின் வயது எங்கள் நட்புக்கு.

எத்தனை இடர்ப்பாடு வந்தாலும் அதை எல்லாம் சாதுர்யமாக எதிர்கொண்டு டிஸ்கவரியை நன்முறையில் இயக்கி வருவதற்கு பூங்கொத்துக்கள் வேடியப்பன்.

இன்னும் பல்லாண்டுகாலம் நம் நட்பு இப்படியே தொடர இறைவனை வேண்டுகிறேன்.

மேலும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்.

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


























111. பெடலிங்க் குதிரையும் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)