
என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதரி, சகோதரர்களே..!
என்னுடைய முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்”.
வெளியிடுபவர்:- என் கணவர் திரு. லெட்சுமணன் அவர்கள்.
முதல் பிரதி பெற்றுக் கொள்பவர் :- நடிகர் ,எழுத்தாளர், உயர்திரு. பாரதிமணி ஐயா அவர்கள்.
பதிப்பகம்:- முத்துசபா பதிப்பகம்.
வெளியீட்டு தேதி - ஜனவரி 8 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு.
இடம் :- புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புத்தக நிலையத்தின் 334 ஆம் அரங்கு.
விநியோக உரிமை ;- டிஸ்கவரி புத்தக நிலையம்.
விலை :- ரூபாய் 50/-
வெளீயீட்டு விழாவுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள். அன்பு அழைப்பு..!



அப்பாடா...! ரெண்டாவது நாளே எஸ்கேப்பில் டின்டினை பார்த்தாச்சு.!! அம்புலிமாமா., பாப்பா மலர்., பால மித்ரா., அணில் காமிக்ஸ்., ரத்னமாலா., பூந்தளிர்., கோகுலம் மட்டுமே படிச்சிகிட்டு இருந்த நான் திருமணமானதும் கணவரோட சேர்ந்து டின்டின், ஆஸ்ட்ரிக்ஸ்., டெனிஸ் த மெனேஸ் எல்லாம் படிச்சி ரசிகையாயிட்டேன். தமிழ்ல ராமு சோமு., டிங்குவைப் போல ஒரு பிள்ளை இருந்தால்( இது விளம்பரம்), ப்ளாண்டி., புதிர்பூமா., குட்டிக் குரங்கு கபீஷ்., அப்புறம் முக்கியமா வேதாளர் ( ஃபாண்டம் -- ஜானி வாக்கர் )., டயானா., மாண்ரெக்., லோதார்., இரும்புக்கை மாயாவி., சிஸ்கோ., பாஞ்சோ., ரிச்சி ரிச்., ரிப்கெர்பி., டெஸ்மாண்ட்ன்னு தீவிர காமிக் ரசிகை. டெக்ஸ்டர்., ஹாரி பாட்டர்., அட்வென்சர்ஸ் ஆஃப் ஜாக்கிஜான்.,மெர்மெயிட்., பாப்பாய்., ஹன்னா மோண்டனா., ப்ளாசம்., ஸ்மால் வொண்டர் .,பிகாச்சு., ஹீ மேன்., ஸ்பைடர் மேன்., பாட் மேன்., சூப்பர் மேன்., போகே மான்., பெண்டென்., எல்லாம் அதன் பின் வந்த செல்லங்கள்..








