செவ்வாய், 11 அக்டோபர், 2011

யாதுமானவள்.. SHE .. THE END AND THE BEGINNING.



யாதுமானவள். அப்பா என்ற சொல்லுக்கு எத்தனை பதம் பிரிக்க முடியும். தோழன், வழிகாட்டி, தந்தை. , இன்னும் இறைவன் என்றும் சொல்லலாம். இன்றும் கூட போனில் நான் சிறிது அப்செட் ஆக இருந்தால் அப்பா அன்று இரண்டு மூன்று முறை கூட பேசுவார்.. அப்பாவுக்கு மகள் என்பது அவ்வளவு பொக்கிஷமான உறவு. அது இந்த குறும்படத்தில் இன்னும் பலமாய் ஒலித்திருக்கிறது. அப்பாவுக்கு மகளைப் பிடிக்கும். அம்மாவுக்கு மகனைப் பிடிக்கும் என்பது இயற்கை.



ஐ எஸ் ஆர் செல்வகுமாரின் இந்தக் குறும்படத்தின் நாயகன் அன்பு மிக இயல்பாக செய்திருக்கிறார். நடிப்பதே தெரியாத அளவு இயல்பான பேச்சு. நடிகர் சிம்புவின் சாயலை அவ்வப்போது நினைவூட்டுகிறார். இளமையை பிரதிபலிக்கும் வயது. அளவான பங்களிப்பு.

சோலை மிக அருமை.. வாழ்க்கை செதுக்கி இருக்கும் கோடுகளோடு முதுகின் வளைவுகளோடு, உண்மைத் தந்தையை பிரதிபலிக்கிறார். நல்ல வசனங்கள். உச்சரிப்பு இருவரிடம் இயல்பாய் நெகிழ்வாய் வருகிறது. மிக நல்ல நடிகர் சோலை. வேறெதிலும் நடித்திருக்கிறாரா தெரியவில்லை. கடைசியில் கடற்கரையில் ஓடும்போது மூழ்கிவிடுவாரோ என்ற பதட்டமும், சிறிது கண்ணீரும் வந்தது. பெண்கள் தந்தைக்கு பேரரசிகள்தான்.

நடிப்பு, காமிரா, இசை, காட்சியமைப்பு, டப்பிங் அருமை. சப்டைட்டில்ஸ் ரம்யா முரளி.. சிறப்பாக செய்திருக்காங்க. விவேக் நாராயணன் இசை. எங்குமே உறுத்தல் இல்லாமல் காட்சியோடு இணைந்து அழகா இருக்கு. கார் செல்லும்போது செண்பகப் பூக்கள் கொட்டிக் கிடக்கும் சாலை அழகு.

இன்னும் பெண்களின் அன்பால் ஆளப்படுபவர்களாகவே ஆண்கள் இருக்க விரும்புகிறார்கள். அது மகளானாலும் சரி, மனைவியானாலும் சரி, சகோதரி ஆனாலும் சரி, அம்மாவானாலும் சரி. மகளுக்குத் தந்தை எல்லாமுமானவர். அன்பை இரப்பவர்கள் ஆண்களாகவும் வழங்குபவர்கள் பெண்களாகவுமே இருக்கிறார்கள் என்பது உண்மை.

ஆனா ரெண்டு கேள்விகள். மெட்ராசிலேயே பீச் இருக்கு. இவங்க எந்த ஊருக்கு கடற்கரையை தேடிப் போறாங்கன்னு ஒரு போர்டாவது காமிச்சிருக்கலாம். தெரியாத ஒருவர் இந்த ஊருக்கு இந்தக் கடற்கரைக்குத்தான் போவார்னு எப்பிடித் தெரியும்.? ஒரு தூக்கம் வேறு போடுகிறார் ஹீரோ. அப்ப அது எங்கிருந்து எந்த அளவு தூரத்தில் இருக்கும் ஊர். நேஷனல் ஹைவேஸ் போல இருக்கு.

இரண்டாவது எல்லா இடத்திலும் வசனம் சரி. ஆனால் ஒரு தகப்பனுக்கு அவர் பெண் சகோதரியா, தாயா இருக்கலாம். ஆனால் எப்பிடி காதலியா, மனைவியா இருக்க முடியும்?. இந்த இடத்தில் உங்க நேசத்துக்குரியவளா, தோழியா என கேட்டு இருக்கலாம். ஒரே வசனம் ரிப்பீட்ட் ஆகணும் என்று இந்தத் தவறை செய்திருக்க வேண்டாம். என்றைக்கும் தந்தைக்கு மகள் நேசத்துக்குரியவளா, தோழியா, சகோதரியா, தாயா இருக்கமுடியும். சின்னக் குறைபாடுகள் பார்ப்பவருக்கு இடறல்களை உண்டுபண்ணும்படி அமையக்கூடாது. ஒரு பர்ஃபெக்ட் படத்தில் எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும் என்பது எனது எண்ணம்.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் மிக அருமை. நல்ல முயற்சி ஐ எஸ் ஆர் வென்சர்ஸ். நிறைய குறும்படங்கள் இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வருது. நிறைய திறமையாளர்கள், படைப்பாளிகளை வெளிக் கொணரும் டைரக்டர் செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்.
இந்தப் படத்துக்காக உழைத்திருக்கும் இளம் திறமைசாலிகள் அனுஷாவுக்கும் தான்யாவுக்கும் வாழ்த்துக்கள்.

குறும்படத்தை பார்த்துட்டு உங்க கருத்துக்களையும் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


10 கருத்துகள்:

  1. அருமையான பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. பெண்களின் அன்பால் ஆளப்படுபவர்களாகவே ஆண்கள் இருக்க விரும்புகிறார்கள்.... எந்த காலக்கட்டத்திலும் இது நிதர்சனமான உண்மை....அருமை...செல்வா அண்ணா ..வாழ்த்துக்கள்....thenakka உங்கள் பகிர்வு super

    பதிலளிநீக்கு
  4. யாதுமானவள் சுனாமியின் வலியை மீண்டும் உணர்த்தியது. நன்றி

    பதிலளிநீக்கு
  5. தேனக்கா, பெண்ணே இவ்வுலகச் சுற்றுக்குக் கடையாணி என்பது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இளைய வயதில் மனைவி அவனுக்கு எல்லாமாக இருக்க, தந்தை ஸ்தானத்தில் இருப்பவருக்கோ, மகளே எல்லாமுமாகி நிற்க... நீங்கள் சொன்னதுபோல, என் தந்தை என்னோடு பகிர்ந்து கொண்டவையெல்லாம் நினைவுக்கு வருகிறது. மகளாய்ப் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி. :-))))

    பதிலளிநீக்கு
  6. நன்றி கோபால் சார்

    நன்றி கிரியேஷன்ஸ்

    நன்றிடா தமிழ்

    நன்றிடா கயல்

    நன்றி மார்ட்டின்

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)