வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஜெயிக்கப்போவது யாரு.?

சென்னை மேயர் மா. சுப்பிரமணியன் அவர்களின் சாதனைப் பட்டியல்.


முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன். இந்த முறை சைதை தொகுதியில் போட்டி இடுகிறார்.

**************************************************************


சைதை சா துரைசாமி அவர்கள் நிறைய ஐஏஎஸ்களை உருவாக்கியவர். தமிழகத்தை பெருமையுறச் செய்தவர். சைதை சா. துரைசாமி குளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முகப்புத்தகத்தில் என்னுடைய நண்பரான அவருடைய தேர்தல் வாக்குறுதியை முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன்.


////சைதை.சா. துரைசாமிCHENNAI MAYOR 2011
எனது தேர்தல் வாக்குறுதி:

1. கடந்த தி.மு.க மாநகராட்சில் நடைபெற்ற ஊழல் , மத்திய மாநில அரசுகளில் தி.மு.க செய்த ஊழல் போன்று அல்லாது என்னை மாநகராட்சி மேயராக தேர்தெடுத்தால் நேர்மையான, ஊழலற்ற மக்களாட்சி நிர்வாகத்தை நடைமுறை படுத்துவேன்.

2. சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் இணையதளம் மையம் தொடங்கப்படும். அந்ததந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு உரிய இணையதள மையத்திற்கு சென்று தங்கள் புகாரை பதிவு செய்யலாம். தனியாக புகார்களுக்கென உறுவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார்கள் பெறப்படும். இணையதளத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு, அதே மையத்தில் புகார் பெட்டி வைக்கப்படும். தங்கள் புகார்களை இந்த புகார் பெட்டியில் போட்டு தீர்வு பெறலாம். புகார்கள் பெற்ற 10 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.

3. சென்னையில் ஒவ்வொரு பகுதியும் தனி சிறப்பு வாய்ந்தது. அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு செயல்படுவோம். மக்களின் தேவை அறிந்து செயல்படும்போதுதான் அவர்களின் குறைகளை சரி செய்ய முடியும். 155 வார்டுகளாக இருந்த மாநகராட்சி, இப்போது 200 வார்டுகளாக உருவாகியுள்ளது. இதனால், சென்னை பகுதி மக்களுக்கு கிடைத்து வந்த அனைத்து வாய்ப்புகளும் புறநகர் பகுதி மக்களுக்கும் கிடைக்கும். மருத்துவம், சாலை, குடிநீர், தெருவிளக்கு என்று அடிப்படை வசதிகள் கிடைக்கும்.

4. அறிவியல் பூர்வமாக வெள்ள தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்படும், பாதாள சாக்கடை திட்டங்கள் காலதாமதமின்றி விரைவாக முடிக்கப்படும்.

5. முதல்வரின் ஆலோசனைப்படி, அதி நவீன கருவிகளை பயன்படுத்தி சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6. அனைத்து வார்டுகளிலும் சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

7. சாலைகள் அனைத்து காலநிலைகளையும் தாங்ககூடிய All Weather Roads ஆக மேம்படுத்தப்படும்.

8. தெருவோரங்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரம் காப்பாற்றப்படுவதுடன் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். SOLID WASTE MANAGEMENTல் அதிக கவனம் செலுத்தப்படும்.

9. தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்

10. முதல்வரின் உத்தரவை பெற்று நீண்டகாலமாக இருந்து வரும் வீட்டுமனை பட்டா பிரச்னை தீர்க்கப்படும்.

11. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக மேம்படுத்தப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமல்ல அவர்கள் எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளை அடைய தேவையான போட்டி தேர்வுக்கு தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

12. மாநில அரசிடம் கூடுதல் நிதி உதவி பெற்று சென்னையை முன்மாதிரி மாநகராட்சி ஆக்குவோம். ///

இவரைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் மற்றும் வீடியோவுக்கு இந்த சென்னை ஆன்லைனைப் பாருங்கள்.

***************************************************************


இருவரைப் பற்றியும் நிறைய பேர் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதால் இருவரைப் பற்றியும் பகிர்ந்துள்ளேன்.. மக்கள் மனதில் இடம் பிடித்து சென்னை மேயரா ஜெயிக்கப் போவது யாருன்னு பார்க்கலாம்.

8 கருத்துகள்:

  1. ம்ம்ம்... எனக்கு என்னவோ சைதை துரைசாமிதான் ஜெயிப்பாருன்னு தோணுது. பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  2. அதிலென்ன சந்தேகம்?கண்டிப்பா சைதயார்தான் ஜெயிப்பார்.

    பதிலளிநீக்கு
  3. காலத்திற்கேற்ற நல்ல பதிவு.
    அறிவாளிகளும், சாதனையாளர்களும் இது போல பிறருக்கு அடையாளம் காட்டப்பட்டால் நல்லது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. //தெருவோரங்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரம் காப்பாற்றப்படுவதுடன் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும்//

    The greatest achievement will be removing the garbage at least once a week, if not everyday. Our Valasaravakkam roads are the worst, and in rainy days, drinking water supplied by municipality is invariably mixed with sewerage water.
    We need suththamaana (clean) chennai, not singara chennai.
    subbu rathinam.
    http://bullandbearfight.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. வல்லவைகளும் நல்லவைகளும் செய்வதற்காய்
    பல இளம் ஆட்சியாளர்களை உருவாக்கியவர்
    சைதை.துரைசாமி. சட்டமன்ற தேர்தலில் அவர் தோற்கடிக்கப் பட்டதே
    மிகுந்த வேதனைக்குரியது.
    உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என்ற
    நம்பிக்கையுடன்....

    இன்று முதல் நானும் உங்கள் வலையைத் தொடர்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நன்றி கணேஷ்

    நன்றி ஸாதிகா

    நன்றி கோபால் சார்

    நன்றி ராஜி

    நன்றி சூரி

    நன்றி மகேந்திரன்..:)

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)