சனி, 15 அக்டோபர், 2011

போடுரா ஷட்டரை..

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி..டாஸ்மாக்குக்குஎல்லாம் 5 நாள் ஷட்டர். ப்ளாக்குல கூட கிடைக்கலியாம்.. வீக் எண்டானா எஞ்சாய் பண்ணனும்னு நினைக்கிற வீக் எண்ட் ப்ரியர்களே.. பார், பஃப், கிளப்., நம்ம ஜனத்த எல்லாம் வாழவச்சிகிட்டு இருக்குற டாஸ்மாக்குல கூட கறுப்பு, வெள்ளை, நீலம் அப்பிடின்னு எந்தக் கலர்லயும் கிடைக்கலியாம்.
ரோட்டுல கூட்டம்கூட்டமா ஒரு இடத்துல வண்டிகளை ஆளுங்களை பார்க்க முடியலை. ஆனாலும் இதை எல்லாம் தெரிஞ்சு வெள்ளிக்கிழமையே வாங்கிவச்சவங்கள ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா பிள்ளைகுட்டியும் பொஞ்சாதியும் வீட்டுலயும் ரோட்டுலயும் அடிதடி இல்லாம அஞ்சு நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்.

போடுரா ஷட்டரைன்னு சூப்பர்ஸ்டார் கணக்கா ஆர்டர் போட்ட அதிரடி கவர்ண்மெண்டுக்கு ஒரு ஜே..

டிஸ்கி:- இன்னிக்கு ரோடு பூரா தாரை தப்பட்டை சத்தம் . கொஞ்சம் இதை குறைக்கலாம். பம்பரம்., ,மாம்பழம், தாமரை, முரசு எல்லாம் இன்னிக்கு உலாவந்துச்சு. மனிதநேயரா, முன்னாள் மேயரான்னு தலைப்பில எழுதவந்தபோது இந்த இனிப்பான சேதி கிடைச்சுது.. ஜெ அம்மாவுக்கு ஜே..!!!

14 கருத்துகள்:

  1. nallathu thaan.. naanum je poduren ungkaludan sernthu... intha je otta maarinaa naan poruppalla..

    பதிலளிநீக்கு
  2. டாஸ்மாக் மூடப்பட்டாலும் தங்களின் இந்தப்பதிவினில் ஏதோவொரு ’கிக்’ உள்ளது மேடம். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. போடுரா ஷட்டரைன்னு சூப்பர்ஸ்டார் கணக்கா ஆர்டர் போட்ட அதிரடி கவர்ண்மெண்டுக்கு ஒரு ஜே..

    repeat

    title super madam

    பதிலளிநீக்கு
  4. டாஸ்மாக் ஐ மூடினா
    பாஸ்மார்க் வந்திடுமா !!
    மாஸுக்கு ஒரே கோபமா கீதே !! அம்
    மாஸ் எல்லாத்துக்கும் ஒரே கவலை
    காஸ் வெல கூடிப்போச்சே.

    சுப்பு தாத்தா.
    http://bullandfight.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. அம்மாவின் அட்டகாச அதிரடியை அழகா பதிவு செஞ்சிருக்கீங்க தேனம்மை. அம்மா எதை எதையோ செய்யறாங்க.. உள்ளாட்சியில் என்ன செய்ய்ப் போறாங்க...

    பதிலளிநீக்கு
  6. இன்றைய தினமலர் நாளிதழ் பாருங்கள். ப்ளாக்கில் எப்படி விற்கிறார்கள் என்று போட்டோ போட்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. பாராட்டப்பட வேண்டிய ஆர்டர்தான், நம்ம குடிமகன்கள் மத்தியில் இதன் பயன் குறைவு, ஐந்துநாள் வியாபாரத்தை கடந்த 2நாளில் பார்த்துவிட்டார்கள், டாஸ்மாக் ஊழியர்களுக்கு குடும்ப சுற்றுலா செல்ல விடுமுறை கிடைதுள்ளதே நல்ல பலன்!

    பதிலளிநீக்கு
  8. இன்னைக்கு ஆட்டோகாரன் ஒருத்தன் புலம்புனான் எல்லாம் கள்ள மார்க்கெட்ல கிடைக்குதாம். விலை மட்டும் 4 மடங்காம். அப்பவும் குடி மக்கள் செலவு பண்ண தயங்கல

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஸாதிகா.

    நன்றி அம்பலத்தார்

    நன்றி மகேந்திரன்

    நன்றி சரவணன்

    நன்றி கோபால் சார்

    நன்றி சரவணன்

    நன்றி குமார்

    நன்றி சூரி

    நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி ஆதிரா

    அப்படியா ஸ்ரீராம்!

    உண்மை நம்பிக்கைப் பாண்டியன்

    அடடா வருத்தம் தரும் செய்தி வேல்முருகன்...

    குடிகாரர்களாய்ப் பார்த்துத் திருந்தினால் குடும்பம் உருப்படும்..ஹ்ம்ம் வேறென்ன சொல்ல..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)