திங்கள், 24 அக்டோபர், 2011

ஆனந்தவிகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்கள்.

26.10.2011 விகடனில் கடவுளை நேசித்தல் என்ற என் கவிதை.. :)


லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் நிறைய ப்ரபலங்கள் எழுதி இருக்காங்க.. சாந்தா தத்.,திருப்பூர் கிருஷ்ணன், பாக்கியம் ராமசாமி,விமலா ரமணி, சாருகேசி, காந்தலெக்ஷ்மி சந்த்ரமௌலி, புஷ்பா தங்கதுரை, இரண்டு நாளில் 25 கோயில்கள் என்று ம. நித்யானந்தம், மனைவி கணவன் மகிழ்விப்பது எப்படி என்று டாக்டர் பாலசாண்டில்யன் இவங்களோட நம்ம வலையுலகப் பிரபல பெண் பதிவர்கள் ஹுசைனம்மாவும் அமைதிச்சாரலும் எழுதி இருக்காங்க. மிக அழகான குழலூதும் கண்ணனோட அருமையா வந்துள்ளது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர். எல்லாருடைய படைப்புக்கும் இடம் கொடுத்துட்டு மிகச் சின்னச் சிறுகதையா ஜ்வாலா எழுதின பாட்டியின் தீபாவளி எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஜ்வாலா வேறு யாரும் இல்லிங்க. நம்ம கிரிஜா ராகவன் மேடம்தான். மிக அருமையான கதை வாழ்த்துக்கள் மேடம். பெருநகரங்களில் தீபாவளி ஒரு விடுமுறைநாள் . அவ்வளவே .




என்னுடைய கவிதை காத்திருக்கிறேன்.. பக்கம் 39 இல்


டைட்டனிக் என்றால் காதல் என்ற நினைவு வரும் உங்களுக்கு . ஆனா உண்மையில் அது ஒரு சோகம். அதுபற்றிய கட்டுரை இதில். பக்கம் 104 இல்.




டிஸ்கி..1..:- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரை நீங்க இணையத்தில் http://www.ladiesspecial.com/ என்ற லிங்கை க்ளிச் செய்தால் படிக்கலாம். படிச்சிட்டு உங்க கருத்துக்களை அங்கே பதிவு செய்யுங்கள்.




டிஸ்கி. 2.:- குமுதத்தில் அ. ராமசாமி, கி.ரா., இ. பா., ஜெயமோகன் ஆகியோர் ஞானபீட விருதுக்கு மிகப் பொருத்தமானவர்கள் எனக் கூறி இருக்கிறார். தமிழுக்கு விருது கிடைக்கவில்லையே என வருத்தம் ஏற்படும் இந்நேரத்தில் ,”விருதுக்கு ஆசைப்படும் நாம் அதற்காக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் விட்டுவிட்டோமோ என்றும் தோன்றுகிறது.ஞானபீடம் விருது தமிழுக்குக் கிடைக்கவேண்டும் என்றால் முதலில் நாம் செய்ய வேண்டியது பரிந்துரைக்கத்தக்க எழுத்தாளர்கள் யார்
என்பதை முடிவு செய்து, அவரைப் பற்றி ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டும். தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய அளவிலோ, உலக அளவிலோ விருதுகள் கி்டைக்கிறது என்றால் அதில் அவருக்கு மட்டும் பெருமையில்லை. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மக்களுக்கும் கிடைக்கும் பெருமை என நாம் நினைக்க வேண்டும்.” என்கிறார். இதை நானும் வழிமொழிகிறேன்.


முக்கஜ்ஜீய கனசுகளு(பாட்டியின் கனவுகள்) என்ற சிவராம் காரந்த்தின் நூல், காண்டேகரின் யயாதி, அகிலனின் சித்திரப் பாவை, ஜெயகாந்தனின் கதைகள் போன்றவற்றை வாசித்திருக்கிறேன். இதுபோல அருமையாக எழுதக்கூடியவர்களில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் இருக்கிறார்கள்.

மற்ற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வருகின்றன. தமிழிலும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள் ஆங்கிலத்தில் , மற்ற மொழிகளில் மாற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் குறைவு எனத்தான் சொல்லவேண்டும். மற்ற மொழிகளிலும், தமிழ் மொழியிலும் பயிற்சி உள்ளவர்கள் மிக அற்புதமாக உள்ள நம் நூல்களை மற்ற மொழிக்கு மாற்றி எழுத முயற்சி எடுக்க வேண்டும். நாம் நம் எழுத்தாளர்களை, படைப்புலக பிரம்மாக்களை கொண்டாட வேண்டும். புக் கிளப் இண்டியா போன்ற க்ரூப்புகளில் ஆங்கில மொழி நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. தமிழ்மொழி நூல்களுக்கும், அவற்றின் மொழிபெயர்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். நிறைய பதிப்பகங்கள் இதை செய்ய முன்வர வேண்டும். இதை இடுகையாக எழுத வேண்டுமென்றால் இன்னும் மேலதிக தகவல்களோடு, புள்ளி விவரங்களோடு, நுண்மையாக எழுதவேண்டும். இது வெறும் என் எண்ணப் பகிர்வுகள் மட்டுமே. எனவே டிஸ்கியில் பகிர்ந்துள்ளேன்.


டிஸ்கி .3. :- அனைவருக்கும் தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள். மங்கலம் பொங்குக எங்கும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.




21 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. "கடவுளை நேசித்தல் "

    யதார்த்தம்
    சுவராசியம்
    ரெம்ப அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  3. மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

    (jpeg பெரிதுபடுத்திப் படிப்பது சற்றுச் சிரமமாக இருக்கிறது.)

    பதிலளிநீக்கு
  4. லேடீஸ் ஸ்பெஷலிலும் தங்கள் படைப்புக்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நீங்கள் சொல்லியபடி தகுதிமிகு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டியது அவசியம். கிழக்குப் பதிப்பகத்தில் அப்படிச் செய்தார்கள். சரியானபடி விற்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்ய... உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  6. கடவுளை நேசித்தல் என்ற கவிதையை விகடனிலேயே வாசித்தேன். மிகச்சிறப்பாக இருந்தது. காத்திருக்கிறேன் கவிதையை இங்கே தங்களின் பதிவில் வாசித்தேன். இரண்டுமே நல்ல கவிதைகள். புரிபடாமலேயே எழுதுவதுதான் கவிதை என்ற எண்ணமே ஒரு சாரார் மத்தியில் இருக்கும்போது புரிபட்டு ஒரு நல்ல அனுபவத்தை மனதில் ஏற்படுத்துவதே கவிதை என்ற நோக்கத்தில் எழுதப்படும் உங்கள் கவிதைகளைப் பாராட்டத்தோன்றுகிறது.
    தமிழுக்கு ஞானபீடம் கிடைப்பது தொடர்பான கருத்துக்களை சென்ற பிப்ரவரி மாதத்திலேயே 'கலைஞரும் ஜெயகாந்தனும் ..' என்ற தலைப்பில் என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறேன். அந்த கருத்துக்களெல்லாம் செயல்படுமாறு செய்கின்றபொழுதுதான் தமிழுக்கான இலக்கிய அங்கீகாரங்களை நாம் எதிர்பார்க்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி வாழ்த்துக்கள் தேனம்மை:)! விகடன் கவிதை வாசித்தேன் பத்திரிகையில். மிக அருமை. லேடீஸ் ஸ்பெஷல் படைப்புகளும் வாசிக்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  8. Congratulations, akka!

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் விகடனிலும் லேடீஸ் ச்பெஷளிலும் படைப்பு வெளி வைத்ததற்கு.

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இனிய தீபாவளி வாழ்த்துகள் தேனக்கா.

    லேடீஸ்ஸ்பெஷல்லயும், ஆ.வியிலும் வந்த அருமையான கவிதைகள் ரொம்பப் பிடிச்சிருந்தது.

    அப்புறம்.... ரொம்ப ரொம்ப நன்றி ;-)

    பதிலளிநீக்கு
  11. சொல்ல விட்டுப்போனது..

    பாட்டியின் தீபாவளி என் பையருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது :-)

    பதிலளிநீக்கு
  12. இனிய தீபாவளி வாழ்த்துகள் தேனக்கா.

    பதிலளிநீக்கு
  13. அருமையான படைப்பு.
    என் இனிய
    அன்பின் தோழிக்கு.
    இனிய தீபாவளி நல்
    வாழ்த்துக்கள் .
    அன்பின் .
    "யானைக்குட்டி "
    ஞானேந்திரன்

    பதிலளிநீக்கு
  14. அருமையான படைப்பு.
    என் இனிய
    அன்பின் தோழிக்கு.
    இனிய தீபாவளி நல்
    வாழ்த்துக்கள் .
    அன்பின் .
    "யானைக்குட்டி "
    ஞானேந்திரன்

    பதிலளிநீக்கு
  15. நேற்றிரவு தான் விகடனைத் திருப்பியபோது, உங்கள் கவிதையை வாசித்தேன். அருமையான கவிதை! அழகிய, அர்த்தம் பொதிந்த வ‌ரிகள்!!

    பதிலளிநீக்கு
  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் மேடம்


    விகடனிலும் லேடீஸ் ஸ்பெஷல் லிலும் பங்கு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. நன்றி ஸாதிகா

    நன்றி செய்தாலி

    நன்றி மனோ

    நன்றி அப்பாதுரை

    நன்றி கணேஷ்

    நன்றி மேனகா

    நன்றி அமுதவன்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி சித்து

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி சாந்தி

    நன்றி ஆசியா

    நன்றி ஞானேந்திரன்

    நன்றி மனோ

    நன்றி நசரேயன்

    நன்றி சரவணன்

    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)