செவ்வாய், 15 நவம்பர், 2011

எல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.



திருமணங்களில் கலட்டாக்களுக்குக் குறைவிருக்காது. என் திருமணத்தில் நடந்த சிறு சுவாரஸ்யமான சம்பவம். கல்யாணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்பொழுது மாப்பிள்ளைக்கு மோதிரமோ இல்லை கைக்கடிகாரமோ மச்சினன் போடுவான். இது வழக்கம். எனது திருமணத்தில் எனது மாமனார் மோதிரமும், மச்சினன் கடிகாரமும் போடுவதாக இருந்தனர்.


நிச்சயதார்த்தம் ஆரம்பம் ஆகி நடந்துக் கொண்டிருக்கிறது. மோதிரம் போட்டாயிற்று. அடுத்து கடிகாரத்தை கொடுக்கலாம் என்று தேடினால் கடிகாரத்தைக் காணவில்லை . ஏற்கனவே அனைவருக்கும் கல்யாண பரபரப்பு. இது அவர்கள் வீட்டில் முதல் கல்யாணம். எங்கள் வீட்டில் நான்தான் கடைசி பையன் என்பதால் இதன் பிறகு அடுத்தத் திருமணம் பல ஆண்டுகள் கழித்துதான். எனவே இரண்டு பக்கமும் ஏற்கனவே இருந்த டென்சனுடன் சேர்ந்து கடிகாரம் தொலைந்த டென்சனும் சேர்ந்துக் கொண்டது.

திருமண மண்டபம் முழுவதும் தேடியாச்சு. கிடைக்கலை. சிலருக்கு இது அபசகுனம் போலத் தோணியது. அப்பதான் யாரோ "வீட்லயே விட்டுட்டு வந்தீங்களா ?" என்றுக் கேட்க, ஒரு வேலை அப்படி இருக்குமோ என்று என் மனைவி வீட்டார் யோசித்தனர். நேரமும் ஓடிகிட்டிருக்கு , சரி நைட் வீட்ல போய் பாருங்க. இருந்தால் காலையில் கொண்டு வந்திடலாம். இல்லாட்டி பிறகு பார்த்துக்கலாம் என்று என் தந்தை சொல்ல ஒருவழியா அப்போதைக்கு அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இரவு என் மைத்துனன் வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது டிவி மேலே இருந்தது என்று அடுத்தநாள் காலையில் கொண்டுவந்துத் தந்தான்.

எல்கே .

9 கருத்துகள்:

  1. பரப்பரப்பில் இதுபோல நடக்கும்

    பதிலளிநீக்கு
  2. எல்லாத் திருமணங்களிலும் இதுபோல் நடப்பதில்லை. (என் திருமணம் போல)நினைவுகூர, பின்னாளில் சிரித்து மகிழ இனிய நிகழ்வு. எல்.கே.யின் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிக்கா...

    பதிலளிநீக்கு
  3. எங்க சித்தி திருமணத்திலும் இப்படி நிகழ்ந்தது. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சு வரை வந்து விட்டது..ஹூம்...

    பதிலளிநீக்கு
  5. புகைப்படமும் பகிர்வும் இண்ட்ரெஸ்டிங்..

    பதிலளிநீக்கு
  6. எல்.கேயின் கல்யாண கலாட்டா நல்ல பகிர்வு .

    காலங்கள் தோறும் நினைவு படுத்தி பார்க்க தூண்டும்.

    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  7. நன்றி எல் கே

    நன்றி ராஜா

    நன்றி கணேஷ்

    நன்றி கலா

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி ஆசியா

    நன்றி கோமதி..:)

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)