அப்பாடா...! ரெண்டாவது நாளே எஸ்கேப்பில் டின்டினை பார்த்தாச்சு.!! அம்புலிமாமா., பாப்பா மலர்., பால மித்ரா., அணில் காமிக்ஸ்., ரத்னமாலா., பூந்தளிர்., கோகுலம் மட்டுமே படிச்சிகிட்டு இருந்த நான் திருமணமானதும் கணவரோட சேர்ந்து டின்டின், ஆஸ்ட்ரிக்ஸ்., டெனிஸ் த மெனேஸ் எல்லாம் படிச்சி ரசிகையாயிட்டேன். தமிழ்ல ராமு சோமு., டிங்குவைப் போல ஒரு பிள்ளை இருந்தால்( இது விளம்பரம்), ப்ளாண்டி., புதிர்பூமா., குட்டிக் குரங்கு கபீஷ்., அப்புறம் முக்கியமா வேதாளர் ( ஃபாண்டம் -- ஜானி வாக்கர் )., டயானா., மாண்ரெக்., லோதார்., இரும்புக்கை மாயாவி., சிஸ்கோ., பாஞ்சோ., ரிச்சி ரிச்., ரிப்கெர்பி., டெஸ்மாண்ட்ன்னு தீவிர காமிக் ரசிகை. டெக்ஸ்டர்., ஹாரி பாட்டர்., அட்வென்சர்ஸ் ஆஃப் ஜாக்கிஜான்.,மெர்மெயிட்., பாப்பாய்., ஹன்னா மோண்டனா., ப்ளாசம்., ஸ்மால் வொண்டர் .,பிகாச்சு., ஹீ மேன்., ஸ்பைடர் மேன்., பாட் மேன்., சூப்பர் மேன்., போகே மான்., பெண்டென்., எல்லாம் அதன் பின் வந்த செல்லங்கள்..
காதல் படங்கள்னா 007 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போல காமிக்னா அது முழுமையடையிறது டின்டினில்தான். டின் டின் (TINTIN) ஒரு 17 வயது இளைஞன். பத்ரிக்கையாளன். இவனை உருவாக்கியர் ஜ்யார்ஜஸ் ரெமி என்கிற ஹெர்ஜே. இவனுடன் ஸ்னோவி ..(SNOWY) ஒரு செல்ல வளர்ப்புப் பிராணி. அப்புறம் காப்டன் ஹேடாக் ( HADDOCK)., பியான்கா.,(BIANCA)., (PROFESSOR CALCULAS ,RASTAPAPULOUS இவங்க இதில நடிக்கலை) , ரெக்ஹாம்., (RECKHAM.), தாம்சன் அண்ட் தாம்ப்சன் (THOMSON AND THOMPSON )ஆகியோர் இதன் காரெக்டர்ஸ். ஹெர்ஜே எழுதிய (HERGE' ) 21 புத்தகங்களில் மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. (THE SECRET OF THE UNICORN) ( THE CRAB WITH GOLDEN CLAWS ) ( RED RECKHAMS TREASURE ) . டைரக்ஷன் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். (STEVEN SPIELBERG ). 3D படம் பிரமாதமாய் இருக்கு. இவரோட ஈ டி( E . T. EXTRA TERRESTIAL) எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ட்ரூ பாரிமோர் குட்டிக் குழந்தையா இருப்பாங்க அதுல.
அடிப்படையில் மிக நல்லெண்ணங்கள் கொண்ட டின்டின் ஒரு ஜர்னலிஸ்டா., உலகம் பூரா சுற்றிவந்த போது ஏற்பட்ட த்ரில்லிங்கான சாகச அனுபவங்கள்தான் இந்த காமிக்ஸ். இந்தப்படத்தில் ஜெமி பெல் ( JAMIE BELL) டின்டினாகவும்., ஆண்டி செர்க்கிஸ் (ANDY SERKIS) காப்டன் ஹேடாக் மற்றும் ஃப்ரான்சிஸ் ஹேடாக்காகவும்., டேனியல் க்ரேக் (DANIEL CRAIG) ஸாஹரின் மற்றும் ரேக்கமுமாகவும் -- வில்லனாக-- ( அட நம்ம ஜேம்ஸ்பாண்ட் ஹீரோதாங்க ( THE CASINO ROYALE..!) நடித்திருக்கிறார்கள்.
டின்டின் ”யூனிகார்ன்” என்ற ஒரு மாடல் கப்பலை வாங்குகிறான். அதை வாங்கியபின் அங்கே வரும் ஸாஹ்ரின் தனக்கு அதைத் தரக் கேட்க டின் டின் மறுக்கிறான். அதிலிருக்கும் ஒற்றைக் கொம்புடைய குதிரை அவன் கவனத்தை ஈர்க்கிறது. வீட்டில் பூனைக்கும் ஸ்னோவிக்குமான ஒரு ஆட்டத்தில் அது உடைந்து அதிலிருந்த ஒரு குழாய் விழுந்து டேபிள் அடியில் சென்று மறைகிறது. லைப்ரரிக்கு அது பற்றி மேலும் அறிய செல்லும் போது அவன் வீடு சூறையாடப்படுகிறது. அப்போது ஸ்னோவி குழலை எடுத்துத் தர அவன் அதனுள்ளே உள்ள வரைபடத்தைப் பார்த்து அது புதையலுக்கான குறியீடு உள்ளது என தெரிந்து கொள்கிறான்.
அதன் பின் ஆரம்பமாகிறது சேசிங். காரில் வந்து சுட்டுச் செல்பவர்களிடமிருந்து தப்பித்து ரோட்டில் பாயும் கார்களுக்கிடையே பாய்ந்து பாய்ந்து கடப்பதும்., பின் அதைப் போல இன்னுமிரு மாடல்கள் இருப்பதை அறிவதும். ( ஒன்று மார்லின் ஸ்பைக் ஹாலிலும் இன்னொன்று பாக்ஹரிலும் இருப்பதை அறிந்து) அதை எடுக்க பயணம் மேற்கொள்வான். இதில் அவன் சந்திக்கும் இடையூறுகள்., அதைக் கடக்கும் விதம் காமிக்ஸில் சொல்லப்பட்டது போலவே கார்ட்டூனிலும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு 8 வருடங்களுக்கு முன் கார்ட்டூன் சேனலில் பிள்ளைகளுடன் இதைப் பார்த்து ரசிப்பதே வேலை. அதே போல் சினிமாவிலும் ரொம்ப தத்ரூபம்..
மோஷன் காப்சர் பிக்சர் மூலம் அவதார் எடுக்கப்பட்டது போல இது பெர்பார்மென்ஸ் காப்சர் டெக்னாலஜி மூலமாக எடுக்கப்பட்டதாம். காமிக்ஸ் & கார்ட்டூன் மூலம் பரிச்சயமான டின் டினை முதன் முதலில் சினிமாவில் பார்த்தபோது கொஞ்சம் வித்யாசமாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க அது உண்மையான டின் டினைப் போலவும் ஹேடாக்கைப் போலவும் ( ஒரு ப்லாகில் சொல்லி இருந்தார்கள் .. ஆங்கிலப் படங்களில் ஹீரோயின் முதலில் சுமாராக இருப்பார்., படம் முடியும்போது அவர் மட்டுமே அழகாக தென்படுவார் என.. அது உண்மைதான். இந்தப் படத்திலும் டிண்டினும் ஹேடாக்கும் கொள்ளை அழகு., தத்ரூபம்) இருந்தார்கள்.
இதில் மிகவும் ரசித்த இடங்கள்., டின் டின் ஹேடாக்கைக் சந்திக்கும் முதல் சந்திப்பு.. ”டெண்ட் தவுசண்ட் தண்டரிங் டைபூன்ஸ்” ( TEN THOUSAND THUNDERING TYPOONS.!!!) என்ற வசனத்தை அவர் சொல்லும்போது நாம் மட்டுமல்ல. தியேட்டரில் உள்ள குட்டீஸ் எல்லாம் ஒரே குதூகலம். சிலர் விசில் கூட அடித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னொரு பிடித்த வசனம் ”ப்ளிஸ்டரிங் பர்னக்கிள்ஸ்.. ”( BLISTERING BARNACLES..!!!).
அடுத்து பியான்காவின் இன்னிசைக் கச்சேரி ( BIANCA BONAFIRE) . அதில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் கூட தெறித்து விழுவது., ஸாகரினின் வல்லூறு., ஹேடாக் டேமை ( DAM) சுடுவது., அந்த காரில் புதையல் வரைபடத்தை மலைப்பாங்கான ரோடிலும்., நீர் வீழ்ச்சியிலும்., ஆற்றிலும் குறுக்கே பாய்ந்து பாய்ந்து பிடிப்பது. ஸ்னோவியின் சாகசம் டிண்டினுக்கு ஈடானது. லைவ் போட்டில் ., பாலைவனத்தில் என சொல்லிக் கொண்டே போகலாம். இவங்களுக்கு உதவ வரவங்க தாம்சன் அண்ட் தாம்ப்சன்.. இவங்க லாரல் அண்ட் ஹார்டி போல. ஆனா ஒரே சைஸ்.. காமெடியர்கள்.
அந்த பாலைவன சீனில் ஷாம்பெயின் குடிகாரரான ஹேடாக்குக்கு ( கானல் நீர் போல ) மயங்கிக் கிடக்கும் டின் டினின் தலை ஷாம்பெயின் பாட்டில் போலத் தென்படும் காட்சி காமிக்ஸிலும் கார்ட்டுனிலும் வரும். அதனால் முன்னேறும் அவர் காலைப் பிடித்து ஸ்னோவி இழுக்கும். அந்த சீனை ரொம்ப எதிர்பார்த்தேன். அது வரவில்லை ஆனால் மிக அருமையான கப்பல் பாலைவனத்தில் நீந்தி வரும் பாருங்கள்.. அட்டகாசம்.. கடைசியில் க்ளோபில் குறிப்பிட்ட இடத்தை ஹிட் செய்ததும் உள்ளே இருக்கும் தங்கக் காசுகள் ஜொலிப்பதும்., கடலில் மூழ்கிய ட்ரெஷரின் அடையாளம் கிடைப்பதும் அற்புதம்.
அந்த க்ரேன் சண்டைக் காட்சிகள்., கடல்கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட கொள்ளைக் காட்சிகள் எல்லாம் பிரமாண்டம்., பிரம்மாதம். ஏமாற்றவில்லை ஸ்டீவன்.. கார்ட்டூனுக்கு அதிகபட்ச நெருக்கமாகத் தந்துள்ளார். மிக நுண்ணிய தகவல்கள். நேத்து என்னுடைய முகப் புத்தக நண்பர் கண்பத் விஸ்வநாத்., தன்னுடைய டீனேஜின் ஹீரோவை சந்திக்க போறேன் என்ற இன்ஃபர்மேஷனோடு சென்றவர் இதன் நுண்ணிய தகவல் பதிவுகளை பார்த்து பிரமித்து ஸ்டேடஸ் போட்டிருந்தார். எல்லாத்தையும் நான் இங்கே சொல்லிவிட்டால் நீங்க படம் பார்க்க மாட்டீங்க.. எனவே பிள்ளை குட்டிகளோடு சென்று 3டி படமா பாருங்க.. குதித்துக் கூத்தாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் லைஃபை என்ஜாய் பண்ணுங்க.
தமிழ் மொழி பெயர்த்து கஷ்டப்படுத்தாமல் டிண்டினும் எல்லாரும் ஆங்கிலத்தில் உரையாடுவது படத்துக்கு ரொம்பப் பொருத்தம். இதை இங்கே வெளியிட்டவர் கௌதம் வாசுதேவ மேனன். மேனன் அண்ட் ஸ்டீவன் நல்ல காம்பினேஷன். அடுத்த படத்தை எப்போ தரப்போறீங்க.. சீக்கிரமா அடுத்த படத்தையும் கொண்டுவாங்க. டிண்டின் ஃபான்ஸ் காத்துக்கிட்டு இருக்கோம்.
இன்னும் அப்துல்லா ., ப்ரொபசர் கால்குலஸ்., ராஸ்டப்பாப்புலஸ் நு எல்லாரையும் பார்க்க ஆவலா இருக்கோம். ( ABDULLA., PROFESSOR CALCULAS., RASTAPAPULOUS ) .. வாழ்த்துக்கள்.. !!!
டிஸ்கி :- ராத்திரி 1.30 மணி வரை முழிச்சிருந்து டிக்கெட் புக் செய்து தந்த என் பையனுக்கு நன்றி..!!!
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.
2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.
2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.
ரெம்பவும் ரசித்து பார்த்தது - விமர்சனத்தில் தெரியுது.
பதிலளிநீக்குCinema Vimarsanam by Thenakka! What a surprise... Film review kooda nallave panni irukkeenga. Neengal Rasitha Film-ai viraivil naanum parthu rasikkirane. tks. -Ganesh.
பதிலளிநீக்கும்ம்ம் அனுபவிச்சு எழுதி இருக்கீங்க...!!!
பதிலளிநீக்குரத்னபாலா, பூந்தளிர் படித்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குஎனக்கும் டின் டின் பிடிக்கும். கால்குலஸ் இல்லாதது தான் வருத்தம்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஆமாம் ரமேஷ்..:)
பதிலளிநீக்குஆமாம் கணேஷ்..:)
ஆமாம் மனோ.,
நீங்க சொன்னவுடனே அதையும் சேர்த்துட்டேன் நிஜாம்.. நன்றி..:0
ஆமாம் மாதவி
நன்றி ராஜி
நன்றி ராஜா