புதன், 16 நவம்பர், 2011

இன்சைட் க்ளோபல் க்ரூப்பின் இலவச ஆன்லைன் கல்வி ( INSIGHT GLOBAL GROUP -- FREE ONLINE EDUCATION)

கல்வியாளர்கள்., மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு.... புத்தக மூட்டைக்கு பை பை.. இனி பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பொதி சுமக்க வேண்டாம்.இந்த சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி. இதை அறிமுகப்படுத்தியுள்ளவர் எனது முகப்புத்தக நண்பர் திரு நாகராஜன் ரவி அவர்கள். இதற்கான அவருடைய உழைப்பு பிரமாண்டமானது., பரந்து விரிந்த அவருடைய கனவுகளைப் போல்.


அரசு மாணாக்கருக்கு இலவச கணனியை வழங்கப் போவதால் இத்திட்டம் தமிழக மாணாக்கருக்குப் மிகுந்த அளவில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். எல்லா வகுப்பு மாணவருக்கும் இத்திட்டம் பயனளிக்கக் கூடியதா என இதைப் பற்றி விரிவான தகவல்களை சொல்லும்படி கேட்டோம். இந்த கல்வி சேவை பற்றி அவரது வார்த்தைகள் இதோ:-

திரு. நாகராஜன் ரவி.( CEO ., GLOBAL INSIGHT GROUP):-
ஆம் இந்த சிறுவர் தினத்தில் "இலவச ஆன்லைன் கல்வி"க்காக நான் ஆறு மாத உழைப்பில் இந்த பணியை செய்துள்ளேன். இது தான் ஆரம்பம். ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதக இருக்கும். இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்சி ஆங்கில மற்றும் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றும் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும்......

1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியை தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியை சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்த பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியர்க்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்த பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ணத் தேவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்த புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.

8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜெக்டர்" மூலம் இணைத்தால் இந்த ஈ புத்தகத்தை பெரிய திரையில் காண்பித்து எல்லாரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகப்படுத்தபடுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்த பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஷல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.

மிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றும் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ்., வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படிப் படியாக செயல்படுத்துவேன்.

இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக படிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது.

தயவு செய்து என் நெடுநாள் கனவான இந்த இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டலை கொண்டு செல்ல உதவுங்கள்.

www.samacheeronline.com / www.samacheerkalvi.info / www,samacheerkalvionline.in

நன்றியுடன் - நாகாராஜன் ரவி - nag@insightgroupglobal.com



மிக்க நன்றி ரவி.. உங்கள் சேவையால் அனைவரும் பயன்பெறட்டும். வாழ்க வளமுடன்., நலமுடன்..!!!

12 கருத்துகள்:

  1. என்ன உயர்ந்த நோக்கம். அற்புதமான சேவை. இதை அனைத்து பெற்றோர்களும், மாணவச் செல்வங்களும் உபயோகித்துப் பலன் பெற வேண்டும். இந்த நல்ல தகவலைத் தேடி தேனீபோல எங்களுடன் பகிர்ந்த தேனக்காவுக்கு ஜே!

    பதிலளிநீக்கு
  2. அற்புதமா இருக்கே, அரசு கவனத்திற்கு எடுத்து செல்லுங்கள்...!!!

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தேனம்மை

    அருமையான செயல் - உயர்ந்த நோக்கம். அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ள பதிவு. பயன் படுத்த வேண்டிய பதிவு. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.
    நல்ல பயனுள்ள செய்திகள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. உங்களில் உயர்ந்த நோக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி.

    பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல நோக்கத்துடன் முயற்சி செய்யும் எந்த திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி கணேஷ்

    நன்றி மனோ

    நன்றி சீனா சார்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி சிநேகிதி

    நன்றி சூர்யப்ரகாஷ்

    நன்றி சேலம் தேவா

    நன்றி ராஜி

    நன்றி ஆசியா

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா6 மே, 2012 அன்று 11:00 PM

    What light of day isn't today?

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)