வியாழன், 17 நவம்பர், 2011

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள். மூத்த பெண்ணின் திருமணத்திற்கு தயார் ஆக நீண்ட காலம் இருந்தது. அவள் திருமணம் முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த பெண் திருமணத்திற்கு தயாராக.
தங்கத்தில் செய்த முதலீடு அபாரமானது. சிறுக சிறுக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் தங்கத்தின் இமய விலை என்னை மிரட்டவில்லை.


திருமணத்திற்கு மண்டபம் தேர்ந்தெடுக்கும் போது ஒரு சில விஷயங்களை மனதில் இருத்தி தேர்ந்தெடுத்தோம். சுலபமாக வந்து சேரக் கூடிய இடத்தில் இருந்தது. திருமணத்திற்கு சில நாட்கள் முன்னரே போய் மண்டபத்தை செக்யூரிட்டி நோக்கில் முழுவதும் சுற்றிப் பார்த்தோம். மணப் பெண் தங்கும் அறை போதுமான அளவு பாதுகாப்பில் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டோம். வழக்கமாக நாம் போய் திருமண மண்டபத்தின் அமைப்பை ஆராய்வதில்லை. ஆனால் சில திருடர்கள் முதல் நாள் ஒரு நோட்டம் பார்த்து விடுகிறார்கள். நல்ல நாளும் அதுவுமாக எதையாவது பறி கொடுத்தால் இழப்பது பணமாக மட்டும் இராது. மணமக்களின் மகிழ்ச்சியும் அதோடு தொலைந்து போகும். அதை மனதில் கொண்டு ஒரு செக்யூரிட்டி ஒருவரை ஏற்பாடு செய்தோம். அவர் மக்களோடு மக்களாக அமர்ந்து இருந்தாலும் எல்லோரையும் முக்கியமாக மேடையில் இருப்பவர்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தார். சில மண்டபங்களில் அங்கே பணி புரிபவர்களின் துணையோடே திருட்டும் ஜெகஜோதியாக நடைபெறுகிறது.

திருமணம் என்பதில் பல விதமான பணிகள் இருக்கும். அதை பகிர்ந்து கொடுப்பது நல்லது. ஒவ்வொரு வேலைக்கும் இருவரிடம் பொறுப்பு கொடுக்கலாம். மண்டபத்தின் சாப்பாட்டு அறையில் மணப் பெண்ணின் உறவினர் ஒருவர், மண மகனின் உறவினர் ஒருவர், இன்னும் அலுவலகங்களில் இருந்து வருபவர் அதிகம் இருந்தால் அவர்களை அறிந்தவர் ஒருவர் என்று நிறுத்தி வைத்தால், சாப்பிட வருபவர்களுக்கு சரியான உபசரிப்பு கிடைக்கும், இப்பொழுதெல்லாம் கல்யாண வீடுகளில் நாமே தேடிச் சென்று சாப்பிடுவது சகஜமான ஒன்றாகி விட்டது. அதிலும் முக்கிய பிரபலம் யாரையாவது திருமணத்திற்கு அழைத்திருந்தால் யாராவது ஒருவர் அவரோடு சென்று சாப்பிட இடம் பார்த்து அமர்த்தி வருவது மரியாதைக்குரிய ஒரு விஷயம் .

முக்கியமாக திருமண நேரங்களில் டென்ஷன் ஆகாமல் நாம் எதிர் பாராத ஏது நடந்தாலும், இரண்டே இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள். "அதனாலென்ன ?" அடுத்தது என்ன ?" அவை திருமண சந்தோஷம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சீராக இருக்க உதவும்.

ரூபினா ராஜ்குமார்.

10 கருத்துகள்:

  1. கட்டுரை மூலம் பல நல்ல தகவல்கள் கொடுத்து இருப்பது அநேகருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.பகிர்வுக்கு நன்றி தேனம்மை.கட்டுரையை பத்தி பிரித்து எழுதினால் படிப்பதற்கு சுலபமாக இருக்குமே:)

    பதிலளிநீக்கு
  2. திருமணங்களில் பந்தி பரிமாறுவதே பெரிய கலைதான். அதை சுலபமாக சமாளிக்க வழிமுறை சொல்லியிருப்பது அருமை. (லேட்டஸ்டாக நிறையக் கல்யாணங்களில் பஃபே முறையில் சாப்பிட வைக்கிறார்கள். எனக்குத்தான் அது இன்னும் பழகவில்லை) நல்ல பகிர்வுக்கு நன்றி தேனக்கா...

    பதிலளிநீக்கு
  3. கல்யாண சத்திரத்தில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ. ரொம்பவே பத்திரமா இருந்துக்க வேண்டியதை அழகாக உணர்த்தியிருக்கீங்க. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. தேனக்கா,

    ஐடியா சூப்பரா இருக்கே!

    நாங்க இப்பதான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. கருத்தில் கொள்ள வேண்டிய நல்ல பதிவு. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. //இரண்டே இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள். "அதனாலென்ன ?" அடுத்தது என்ன ?" அவை திருமண சந்தோஷம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சீராக இருக்க உதவும்.

    //
    100 % உண்மை

    பதிலளிநீக்கு
  7. என்ன இப்போ திடீர்னு பதிவேறுது; இருந்தாலும் நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஸாதிகா

    நன்றி கணேஷ்

    நன்றி புதுகைத் தென்றல்

    நன்றி கோபால்

    நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன்

    நன்றி ராஜா

    நன்றி ரூஃபினா

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)