வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒற்றை ஆள்.. தயாபாய். சமூகப் புரட்சியாளர். OTTAYAL. DAYABAI SOCIAL ACTIVIST.




ஒத்தை ஆள்.. என்னவெல்லாம் செய்ய முடியும்.. எல்லாம் முடியும் என்கிறார் தயாபாய். உலகையே புரட்டிப் போட முடியும். நீதி, நியாயம், நேர்மை, உழைப்பு, எளிமை, சமூகப் போராட்டம் என பல பரிமாணங்கள் உண்டு 60 வயது தயாபாய்க்கு. இவரது வாழ்வை ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் ஷைனி ஜேக்கப் பெஞ்சமின்.




“KEEP EACH FOOT FORWARD CAUTIOUSLY

IF U FALL JUST GET UP

AND BE CAREFUL NOT FALL AGAIN."


இதுதான் தாரக மந்திரம் தயாபாய்க்கு. கேரளாவைச் சேர்ந்த 16 வயது மெர்சி மாத்யூ கன்யாஸ்திரிகளுக்கான மடத்தில் இருக்கும்போது ஒரு கிறிஸ்மஸ்தினத்தில் இங்கே விதம் விதமான உணவுகள் பரிசுப்பொருட்கள் நிரம்பி இருக்க ஆதிவாசி மக்களின் ஏழ்மையை., வெறுமையையான நிலையை நினைத்துப் பார்க்கிறார். தான் இருக்கும் இடத்தில் தனக்கான இயங்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை எனவே தான் சுதந்திரமாய் இயங்க - அன்னை தெரசா போல களப்பணி செய்ய -- வெளியேறுவதாக மதரிடம் அனுமதி கோருகிறார். இதற்காக அவர் முதல் நாள் நள்ளிரவில் தன்னுடைய இடம் இதுவல்ல., தனக்கான வாழ்க்கை இதுவல்ல.. தான் செயல்படுத்த நினைப்பவற்றை இப்போதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறுகிறார். இறையியல் துறவியாய் இருப்பதைவிட சமூக மேம்பாட்டுக்கான போராளியாக விரும்புகிறார்.



தான் வாழ விரும்பிய சேவை வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணிக்கிறார். தயாபாய் ஆகிறார். தயா என்றால் கருணை என்று அர்த்தம். இவரின் கருணை ஆதிவாசிகளின் மேல் பெண்ணினத்தின் மேல் துயரப்படுபவர்களின் மேல் பொழிகிறது., இவர் ஒரு ஆதிவாசி தலைவி என ஒரு அரசியல்வாதி சொல்கிறார். மத்தியப்பிரதேச கிராமங்களில் பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்ய வலியுறுத்தி அழைத்துச் செல்கிறார். அப்போது அவர்கள் புகாரை விசாரிக்கும் விதம் , வீடியோ எடுக்கக்கூடாது என கட்டுப் படுத்தும் விதம்., மும்பை சேரிகளில் பாடுபட்டது., பாலியல் தொந்தரவுகள் என எந்த ஒரு விஷயத்தையும் ஜனநாயக நாட்டில் கூட ஒரு பொதுஜனம் சத்தமிட்டு தன் உரிமையை ., தன் பாதுகாப்பை நிலைநாட்ட எவ்வளவு பாடுபடவேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தியது.



ஆதிவாசி மக்களிடம் பேசி அவர்களை ஒன்றுபடுத்தியது., கல்வியின் தேவை., தண்ணீர் , மின்சாரம் மற்ற பல வசதிகளுக்காக போராடுதல் என பரந்து விரிகிறது இவர் பணி. மக்களோடு மக்களாக எளிமையாக புடவை ரவிக்கை அணிந்து வாரப்படாத கூந்தலை கொண்டை போட்டு எளிய சிரிப்போடும் தன்னம்பிக்கையோடும் தான் செல்லும் இடங்களில் பேசவேண்டியவற்றை மக்களுக்காக தைரியமாக பேசி , செயலாற்றி என பிரமிக்க வைக்கிறார் தயாபாய்.. சமயங்களில் ஆங்கிலத்திலும் உரையாடுகிறார்.. அற்புதம். தன் உணவை தானே பயிரிட்டு விளைவித்துக் கொள்கிறார்.



இவரது வாழ்க்கையை ஷைனி ஜேக்கப் பெஞ்சமின் எடுத்திருக்கிறார். இவர் இதற்கு முன்பே பல டாக்குமெண்டரிகள் எடுத்திருக்கிறார். துபாயை சேர்ந்த க்ளோபல் ஸ்பார்க் குரூப்பின் தயாரிப்பு. தயாரிப்பாளர் நிஜாமுத்தீன்.



மிக துல்லியமான இசையுடனும் இயற்கையான லைட்டிங்குடனும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தயாபாயின் உழைப்பும்., புன்னகையும் ஒளிவிடுகிறது. ’WOMAN'S SOLITARY QUEST FOR TRUTH. HER NAME IS DAYABAI' என ஒற்றை மனுஷியின் உண்மையின் தேடலை விவரிக்கும் படம். கேரளாவின் பூவாராணி., கோட்டயத்திலிருந்து மத்தியப்பிரதேஷின் கிராமங்கள் வரை நீண்டிருக்கிறது. தன் வளர்ப்பு பிராணியுடனான நடனம்., கவிதை புன்முறுவலைத் தோற்றுவித்தது.



ஆதிவாசிகளின் பிரச்சனைகளை மட்டுமல்ல மொத்த பெண்ணினத்துக்குமான விஷயங்களை தன் வீதி நாடங்களில் செய்தியாய் பகிர்கிறார். எந்த என் ஜி ஓ., அல்லது ஃபாரின் ஃபண்டின் உதவியையுன் நாடாமல் ( நந்திதாதாஸ் போன்ற இவரின் தோழிகள் இவரின் முயற்சிக்கு கைகொடுக்கிறார்கள்) தன் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.



இந்தப் படம் NATIONAL AWARD WINNING DOCUMENTARY ( மலையாள டாக்குமெண்டரி -- SPECIAL MENTION AWARD IN THE NATIONAL FILM AWARDS 2010)வென்றிருக்கிறது.



வாழ்க தயாபாய். .! சமூகத்துக்காக உழைக்கும் நல்ல மனிதர்களை உலகுக்கு தன் டாக்குமெண்டரி மூலம் அறிமுகப்படுத்திய ஷைனி ஜேக்கப் பெஞ்சமினுக்கு வாழ்த்துக்கள்..!!




யூட்யூபில் இதற்கான லிங்க்.


http://www.youtube.com/watch?v=A4szbBRba4o

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


12 கருத்துகள்:

  1. தன்னலம் கருதாத் தொண்டு செய்பவர்கள் அருகி வரும் இந்நாளில் இப்படியும் ஒருவரா? ஆவணப்படம் முழுமையாகப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன். நன்று.

    பதிலளிநீக்கு
  2. //வாழ்க தயாபாய். .! சமூகத்துக்காக உழைக்கும் நல்ல மனிதர்களை உலகுக்கு தன் டாக்குமெண்டரி மூலம் அறிமுகப்படுத்திய ஷைனி ஜேக்கப் பெஞ்சமினுக்கு வாழ்த்துக்கள்..!!
    //

    நல்லவர் பற்றிய நல்லதொரு தகவல் தந்தமைக்கு என் நன்றிகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லவர் பற்றிய நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  4. “KEEP EACH FOOT FORWARD CAUTIOUSLY

    IF U FALL JUST GET UP

    AND BE CAREFUL NOT FALL AGAIN."


    இதுதான் தாரக மந்திரம் தயாபாய்க்

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சமூக அக்கறை உள்ள நல்லவரை உற்சாகப்படுத்துவதும் கௌரவிப்பதுவும் இன்னும் பல நல்லவர்களை உருவாக்கும்

    பதிலளிநீக்கு
  6. நல்லவரை அடையாளம் கண்டு டாக்குமன்டரி எடுத்தவர்களிற்கும் இதுபற்றிய பதிவிட்ட உங்களிற்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. நன்றி கணேஷ்.

    நன்றி கோபால் சார்

    நன்றி தமிழ் ரைட்டர்

    நன்றி குமார்

    நன்றி ராஜா

    நன்றி ராஜி

    நன்றி அம்பலத்தார்.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. நாமெல்லாம் உயிரோடு இருக்க... தயாபாய் வாழ்கிறார்.

    அற்புதமானவரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி அம்மணி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)