புதன், 28 டிசம்பர், 2011

கட்டுக்கள்..:-

கட்டுக்கள்..:-
*****************

தற்காலிக கட்டுக்கள்..
கைக்கட்டோ கால்கட்டோ
நினைக்க வைத்தது
நிரந்தரமின்மையை..

காலூன்றிக்
கிளைத்திருந்த மரங்கள்
நதியோரம் கூட
சருகு தூவி
களைத்திருந்தன..


வெய்யிலின் பரிவட்டம்
சூடிய தாவரங்கள்
வெறுக்க முடியவில்லை
வெம்மை அனத்தியும்

மாலைநேர
வாடைக் காற்றுக்காய்..
ஜீவனை சுமந்து
வயதேறியும் வாழ்ந்து
கிடந்தன ஒற்றையா்ய்..

எதை நம்பியும்
எதுவுமில்லை எனினும்
கட்டுக்கள் ஏதோ ஒரு
விதத்தில் ஆதரவாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 3, 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது. :)

7 கருத்துகள்:

  1. //எதை நம்பியும்
    எதுவுமில்லை எனினும்
    கட்டுக்கள் ஏதோ ஒரு
    விதத்தில் ஆதரவாய்..//

    அருமையான வரிகள்!

    உண்மை தான்! எதை நம்பியும் வாழ்க்கை இல்லையென்றாலும் கட்டுக்களும் தளைகளும்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன!!

    பதிலளிநீக்கு
  2. /எதை நம்பியும்
    எதுவுமில்லை எனினும்
    கட்டுக்கள் ஏதோ ஒரு
    விதத்தில் ஆதரவாய்../

    உண்மைதான். நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  3. -நிஜம்தான்! சில கட்டுக்கள் தேவையாகத்தான் இருக்கின்றன. நல்ல கவிதைக்கு நன்றிக்கா!

    பதிலளிநீக்கு
  4. எதை நம்பியும்
    எதுவுமில்லை எனினும்
    கட்டுக்கள் ஏதோ ஒரு
    விதத்தில் ஆதரவாய்..
    >>>
    ஆதரவு இருந்தால் மலையையே புரட்டலாமே

    பதிலளிநீக்கு
  5. நன்றி மனோ

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ஹாட்லிங்ஸ்

    நன்றி கணேஷ்

    நன்றி சிபி

    நன்றி சரவணன்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)