வியாழன், 24 நவம்பர், 2011

சாயல்கள்...



ஒன்பதினாயிரம் நாட்கள்
கடந்திருக்கும்..
அவளுக்கும் அவருக்குமான உறவில்..

முதல் சந்திப்பிலேயே
அவர் முழுமையாய்
அங்கீகரித்துக் கொள்ள..
அவளுக்கு சில கேள்விகளும்
ஆசைகளும் மிச்சமிருந்தன..


ஏதேதோ பிம்பங்களில்., விழைவுகளில்
இருவரும் மாயமானைத் துரத்தி..
திரும்பி ஒரு புள்ளிக்கோட்டில்
சந்தித்துக் கொள்வர். ,
இரண்டு பிள்ளை ரேகைகளின் ஊடே..

அவ்வப்போது இது நிகழ்ந்தாலும்
குளியலறையும்.,
ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியும்.,
படுக்கும் அறையும் ஒன்றுதான்..

சுருக்கங்களும் நரைகளும்
இருவருக்கும் பொதுமையான போது
அவள் சாயலோ.,
அவள் அன்பின் சாயலோ படர்ந்து
அவர் அவளாயிருந்தார்..
அவரின் கம்பீரமும் கனிவும் படிந்து
அவள் அவராயிருந்தாள்..

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 6, 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

9 கருத்துகள்:

  1. அன்பின் வரிகளாய் அருமை தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  2. முத்திரைக் கவிதை! அவர் அவளாகியிருந்தார்... அவள் அவராகியிருந்தார்... என்ன ஒரு அன்பின் வெளிப்பாடு. மனதை நெகிழச் செய்த வரிகள். இக் கவிதை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளை, மகிழ்வை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லைக்கா...

    பதிலளிநீக்கு
  3. நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததற்கு அடையாளமாய் - அவன் அவளாக... அவள் அவனாக... நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  4. //சுருக்கங்களும் நரைகளும்
    இருவருக்கும் பொதுமையான போது
    அவள் சாயலோ.,
    அவள் அன்பின் சாயலோ படர்ந்து
    அவர் அவளாயிருந்தார்..
    அவரின் கம்பீரமும் கனிவும் படிந்து
    அவள் அவராயிருந்தாள்..//

    நிறைஞ்ச வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரிகள்.. உண்மையில் அப்படித்தான் நடக்குது :-))

    பதிலளிநீக்கு
  5. அருமை.
    குங்குமத்தில் வெளியாகியுள்ள 'ஆசை' சின்னஞ்சிறுகதைக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  6. சுருக்கங்களும் நரைகளும்
    இருவருக்கும் பொதுமையான போது
    அவள் சாயலோ.,
    அவள் அன்பின் சாயலோ படர்ந்து
    அவர் அவளாயிருந்தார்..
    அவரின் கம்பீரமும் கனிவும் படிந்து
    அவள் அவராயிருந்தாள்../

    very informative...

    பதிலளிநீக்கு
  7. //அவ்வப்போது இது நிகழ்ந்தாலும்
    குளியலறையும்.,
    ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியும்.,
    படுக்கும் அறையும் ஒன்றுதான்..

    சுருக்கங்களும் நரைகளும்
    இருவருக்கும் பொதுமையான போது
    அவள் சாயலோ.,
    அவள் அன்பின் சாயலோ படர்ந்து
    அவர் அவளாயிருந்தார்..
    அவரின் கம்பீரமும் கனிவும் படிந்து
    அவள் அவராயிருந்தாள்..
    //

    அருமையான வரிகள்
    அன்புடன் :
    ராஜா

    அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

    பதிலளிநீக்கு
  8. நன்றி ராம்லெக்ஷ்மி

    நன்றி கணேஷ்

    நன்றி ரமேஷ்

    நன்றி சாந்தி

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி ராஜி

    நன்றி ராஜா..

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)