வெள்ளி, 11 நவம்பர், 2011

பங்கேற்பு..

பங்கேற்பு.:-
*******************
பின்புறமிருத்தல்
சௌகர்யமாய் இருக்கிறது
மஞ்சள் வெளிச்சங்கள்
ஆக்கிரமிக்காத
மெல்லிய இருட்டு.
இருக்கிறோம்
ஆனால் இல்லை..

எல்லா ஆட்டங்களிலும்
பங்கேற்பாளராக
பரிசுக் கோப்பையை
நூலிழையில்
தவறவிட்டு.


மேடையில் ஒலிக்கும்
சங்கீதங்கள் சில
சோக ராகத்தோடு..
கரைந்து போகிறது
குளிர்பான பனிக்கட்டியாய்
இயலாமையோடு

துப்பு இருக்கிறது
உரித்தெரிந்து விட்டு
மேடையேறி
எல்லாவற்றையும்
கைப்பிடிக்குள் சுழற்ற..
காலடியில் அடக்க..

பின் தொடரப் போகிறதா
ஊத்தி மூடப் போகிறோமா
பித்தம் தெளியாமல்
என முற்றும் தெரியாமல்
எல்லையற்ற ஆட்டத்தில்

டிஸ்கி:- ஃபிப். 27. 2011 திண்ணையில் வெளியானது.

16 கருத்துகள்:

  1. எல்லையற்ற ஆட்டம்
    எல்லையுள்ள பாடலாக....

    அருமை.

    பதிலளிநீக்கு
  2. //முற்றும் தெரியாமல்
    எல்லையற்ற ஆட்டத்தில்// அருமை!

    பதிலளிநீக்கு
  3. இந்த வேதனை எனக்கும் உண்டு. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  4. இதை எனக்காகவே எழுதியது போல இருக்குக்கா. நம்மால நாலு விஷயம் செய்ய முடியும்கற நம்பிக்கையும், எவ்வளவோ பெரிய மனுஷங்க இருக்கறப்ப நாம யாருங்கற அவநம்பிக்கையும் எனக்குள்ள எப்பவும் போட்டி போட்டுக்கிட்டிருக்கு. இந்தக் கவிதை எவ்வளவு தூரம் என் மனசைத் தொட்டுச்சுன்னு என்னால வார்த்தைகளால விவரிக்க முடியல. நன்றிக்கா...

    பதிலளிநீக்கு
  5. கடைசி வரிகள் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  6. வாவ் சூப்பர்.

    என்னை மாதிரி ஆட்களை நினைச்சுக்கிட்டு எழுதிட்டீங்களோ? :-))

    பதிலளிநீக்கு
  7. நன்றி ராஜா

    நன்றி கோபால் சார்

    நன்றி கும்மாச்சி

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி மாதவி

    நன்றி ரமேஷ்

    நன்றி கணேஷ்

    நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி விச்சு

    நன்றி ராஜி

    நன்றி சரவணன்

    நன்றி ரூஃபினா

    நன்றி வேல்முருகன்.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)