சனி, 8 அக்டோபர், 2011

காமமும் லஞ்சமும்..

தண்டவாளக்
கழிவறைகளைப் போல்
எங்கெங்கும் சிதறிக்
கிடக்கிறது காமமும் லஞ்சமும்..

அகலக்கால் வைத்து
தாண்டிச் செல்கின்றன
பெட்டிகளும் எஞ்சினும்..


கழிவுகளையும் காமத்தையும்
சுமந்து திரியும் மனிதர்கள்
கிடைக்கும் இடமெல்லாம்
கழித்துக் களிக்கிறார்கள்..

நாற்றங்களை சுவாசித்து
மூச்சடைத்த எஞ்சினும்
பெட்டிகளிலிருந்து
தற்காலிகமாக கழன்று
ஓடிப்போகிறது ஓய்வெடுக்க..

கழுவிசுத்தமாக்கும் பணியில்
தொடர்ந்த போராட்டத்தோடு
துடைப்பமும் கையுமாய்
துப்புரவுப் பெண்களும்..

லஞ்சத்தைப் போல்
ஒழிக்க முடிவதி்ல்லை
எல்லா இடத்திலும் என்றாலும்
துடைப்பத்தால் தொடப்பட்ட
சில இடமாவது சுத்தமாய்...

டிஸ்கி 1 :- இந்தக் கவிதை ஏப்ரல்18. 2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி 2. :- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்காக கவிதைகள் 10.10.2011க்குள் அனுப்பி வையுங்க மக்காஸ். ஈமெயில் ஐடி. raghavan.girija@gmail.com . உங்க கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட வாழ்த்துக்கள் மக்காஸ்..:)

12 கருத்துகள்:

  1. நல்லதொரு ஒப்பீட்டுக் கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. லஞ்சத்தைப் போல்
    ஒழிக்க முடிவதி்ல்லை
    எல்லா இடத்திலும் என்றாலும்
    துடைப்பத்தால் தொடப்பட்ட
    சில இடமாவது சுத்தமாய்...

    very nice

    பதிலளிநீக்கு
  3. //
    நாற்றங்களை சுவாசித்து
    மூச்சடைத்த எஞ்சினும்
    பெட்டிகளிலிருந்து
    தற்காலிகமாக கழன்று
    ஓடிப்போகிறது ஓய்வெடுக்க..
    //

    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  4. //லஞ்சத்தைப் போல்
    ஒழிக்க முடிவதி்ல்லை
    எல்லா இடத்திலும் என்றாலும்
    துடைப்பத்தால் தொடப்பட்ட
    சில இடமாவது சுத்தமாய்...//

    ம்ம்ம் ரெம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  5. கழிவுகளையும் காமத்தையும்
    சுமந்து திரியும் மனிதர்கள்
    கிடைக்கும் இடமெல்லாம்
    கழித்துக் களிக்கிறார்கள்..

    மனதைத்தொட்ட வரிகள்

    பதிலளிநீக்கு
  6. நன்றி கோபால்

    நன்றி கோபால் சார்

    நன்றி சரவணன்

    நன்றி ராஜா

    நன்றி குமார்

    நன்றி செய்தாலி

    நன்றி சாரல்

    நன்றி அம்பலத்தார்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)