செவ்வாய், 4 அக்டோபர், 2011

சகுந்தலை துஷ்யந்தனும் பின்ன கென்னும் பார்பிகளும்.

சென்ற வருடம் போல் இந்த வருடமும் நண்பர் அருண்குமார் வீட்டில் கொலு. அவரது அம்மா தான் கையாலேயே செய்த நெட்டி பொம்மைகள் கொலுவை விவரித்தார்.





அருண்குமாரின் பெண்ணின் பார்பி கலெக்‌ஷன் கொலு.



கென்னுடன் பார்பிகள். பிரிக்க முடியாத பந்தம்.! (கென் கார்சன் 1961 இல் இருந்து ). 1959 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பார்பிகளின் ஆண் நண்பன். 1961 இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டான்.


ஜாலியாய் அமர்ந்திருக்கும் விதம் விதமான பார்பிகள். CELEBERATING PARTY.


சகுந்தலை கண்வ மகரிஷி ஆஸ்ரமத்தில் மான் குட்டியோடு விளையாடிக் கொண்டிருத்தல், சகுந்தலையை துஷ்யந்தன் சந்தித்தல்., மோதிரம் அணிந்து (காந்தர்வ ) காதல் கடிமணம்புரிதல்., பின் பிரிதல்., விசுவாமித்திரர் சாபம்., மோதிரத்தை இழத்தல், துஷ்யந்தன் சகுந்தலையை மறத்தல், மீனின் வயிற்றில் மோதிரம் கிடைத்தவுடன் துஷ்யந்தனுக்கு நினைவு வரல்., ஆஸ்ரமம் சென்று புலியுடன் விளையாடும் தனது மைந்தனை அடையாளம் காணல்., பிரிந்தவர் ஒன்று கூ்டுதல்., ராஜ தர்பாரில் குழந்தையுடன் சகுந்தலை துஷ்யந்தன் அமர்ந்திருக்கும் காட்சி. இத்தனை பொம்மைகளையும் அவர் தன் கையாலேயே செய்திருக்கிறார்.




அடுத்த வருடம் தீம் மாற்றும்போது வேறு புராணக் கதையை பொம்மைக்காட்சியாக கொலுவில் செய்து வைப்பார்களாம். மிக அபாரமான அரிய முயற்சி.. ஆர்வத்தில் இரவு 2, 3 மணி வரை கூட பொம்மைகளுக்கு உடைகள்., நகைகள் தைத்து கோர்த்து அலங்கரித்துக் கொண்டிருப்பாராம். கொலுவுக்காக பல நாட்கள் முன்பிருந்தே இந்த வேலைகள் ஆரம்பித்து விடுமாம்.




நமது பாரம்பர்யக்கலைகள் ., கைவேலைப்பாடுகள் எல்லாம் குறைந்து, கரைந்து , அழிந்து வரும் வேளையில் இவர்களைப் போன்றவர்களால்தான் நமது தொன்மையான பண்டிகைகள் அதன் முழு உத்வேகத்தோடு அடுத்த தலைமு்றைகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.


தன் பாட்டி, அம்மா மற்றும் அப்பாவின் ஈடுபாட்டைப் பார்த்து அருணின் மகளும் தனது பொம்மைகள் கலெக்‌ஷனில் இருந்து கென்.,பார்பியை தனி கொலுவாக வைத்திருந்தது இந்த பாரம்பர்ய விழாவின் அடுத்தகட்ட பரிணாமமாக இருந்தது


நவராத்திரியில் முப்பெரும் தேவியரின் ஆசீர்வாதமும் அனைவருக்கும் கிடைக்கட்டும் என வாழ்த்தி வந்தோம்.

9 கருத்துகள்:

  1. கொலு ஜோரா இருக்கு.. அதுவும் அந்த சீர்வரிசைப் பாத்திரங்கள ச்சான்ஸே இல்லை, நல்ல கலெக்ஷன் :-)

    பதிலளிநீக்கு
  2. அழகழகாக கொலுவேற்றியுள்ள கொலு பொம்மைகள்; அதுவும் கை வேலையாகச் செய்தது பெரும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. அவர்களுக்குப் பாராட்டுகள். அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. மிக அபாரமான அரிய முயற்சி

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி துபாய் ராஜா

    நன்றி சாரல்

    நன்றி சரவணன்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி குமார்

    நன்றி கோபால் சார்

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)