புதன், 14 நவம்பர், 2018

விஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.

1941. இங்கிட்டு எல்லோரும் நலம். அங்கிட்டு எல்லோரும் நலமா ;)

1942. அங்ஞாடே அங்ஞாடே என்ன அர்த்தம் . அங்க ஆடா. அங்கிட்டா .. அங்கிட்டு ஆடா ஹாஹா யார்பா எழுதினது இந்தப் பாட்டு.

1943. படிக்கும் ஒவ்வொரு நூலுக்கும் என்னை ஒப்புக் கொடுக்கிறேன். மிகச் சிறந்த தவமாய் அமைகிறது அது.

1944. 100 சிறந்த சிறுகதைகளில் நான் தேர்வு செய்த முதல் சிறப்பான கதை நீர்மை. திரு. நா. முத்துசாமி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி. 😔

1945. முத்த விதைகள்

முத்த விதைகள் விழுந்தவுடனேயே
பூக்கத்தொடங்குகிறது
தேகம்.



1946. எஜமான் பின் ஓடும் குட்டி நாய் மனநிலையிலிருந்து விடுபடுவது எப்படி

1947. அவள் சாப்பிட்டது அவல் உப்புமா. ( இனி வேற உப்பணுமா ;) )

1948. நேர் நேர் தேமாவென
நெய்து கொண்டிருக்கிறது
மழை

1949. பேரன்புக்காரிக்கு அன்பும் முத்தங்களும். <3 :="" p="">
இதை விட இந்த வாழ்க்கையில் பெரிதாக என்ன சாதித்துவிடப் போகிறேன். எங்கோ தொலைதூர முழுமதியாய் நீ. உன் நினைவில் நான் வாழ்ந்திருந்தேன் என்பதே பெரும்பேறு.

NIMMI SIVA AT SHARJAH BOOK FAIR.

///Nimmi Siva Thenammai Lakshmanan
நல்ல உள்ளத்துடன் சேர்ந்து நல்ல எழுத்தையும் எப்படி மறப்பேன்❤️///

இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்டா நிம்மி. ஜெர்மனி  வந்து உங்கள் இருவரையும் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்

1950. பெருமதிப்பிற்குரிய தமிழ்க்கடல் திரு. இராய. சொ. அவர்கள் . ( சிறு பூங்காவில் மழைக் குடை ( வெய்யில் காப்போ ) யின் கீழ் அமைக்கப்பட்ட அழகு கண்ணையும் கருத்தையும் கவர்கிறது )

1951.மஞ்சள் கங்குகளைப்
பாறையில் தூவிக் கொண்டிருக்கிறது
வெய்யில்.

1952. தல ஏன் போட்டு படுத்துது. ஆஃப்கானிஸ்தான்லேருந்து வந்த ஆர்யாஸ் உச்சரிப்பு. இத பார்க்குற தில் நம்ம தலைவருக்கு மட்டுமே உண்டு. மிடில. எப்போ படம் முடியும்.

#விஸ்வரூபம்_அட்ராசிட்டீஸ் - தலையின் அலப்பறை.

1953. விக்ரம், விஜயின் அநேக வெற்றிப் படங்கள் காரைக்குடியில் எடுக்கப்பட்டவைதான். ஆனா விஜயோட வெற்றிக் கோட்டை காரைக்குடிதான். மூணு நாளுக்கு முன்னாடிலேருந்து பாண்டியன் தியேட்டர் பக்கம் ட்ராஃபிக் ஜாம். கோபுரம் சைஸ் கட் அவுட்டெல்லாம் இப்ப இவருக்கு மட்டுமே

1954. பார்ட் பார்ட்டா சித்திரவதை செய்வதும், அமயம் சமயம் புரியாம ரொமான்ஸ் ஸாங்கும் மிடிலன்னு மாத்தினா பக்கம் பக்கமா சீரியல்ல சபதம் போடுறாய்ங்களே. அரை மணி நேரத்துலேயே டிவி வெறுத்துறுது. இவர் வேற வெள்ளை சட்டைல கலியாண் கலியாண்கிறாரு. நல்லதா யூ ட்யூப்ல போய் பாட்டு பார்க்கலாம்

#why_i_hate_tv

1955. Theri ummeedhu thera inthazaar karthey hain... Isanam hum tho sirf thum se...

1956. HAPPY BIRTHDAY THALA. !.  இந்த பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், தெனாலி மாதிரி ஒரு படம் கொடுத்தா என்ன. ? ரொம்ப நாளாச்சு நாங்க ரெண்டு பேரும் உங்க நல்ல படம் பார்த்து. போத்தீஸ் சுவரு, பிக் பாஸுன்னு பார்த்து காண்டாகி கிடக்கிறோம். நேத்து சன் டிவி பேட்டி அருமை. நாங்க அப்பப்ப ஒண்ணு சேர்ந்து முகம் பார்த்து சிரிக்கவாவது ஒரு படம் கொடுங்க ப்ளீஜ். :)

எங்க ரெண்டு பேருக்கும் உங்கள விட இந்த ( சினிமா ) ஒலகத்துல ஒசந்தது ஒண்ணுமில்ல.

#HAPPY_BIRTHDAY_KAMALHASSAN.

1957. ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் புக்கா இருக்கவரைக்கும் நோ ப்ராப்ளம். அத ஃபேமிலி ( மெம்பர்ஸும் இருக்குற ) புக்கா ஆக்காம இருக்கது நல்லது

1958. பல்லை சுத்தம் பண்றேன்னு ட்ரில்லிங் பண்ணிட்டாங்க. ரெண்டு கப் ரத்தம்ம்ம்ம்ம்  :(

1959. என் முகநூல் பக்கத்தில் ஏதும் எழுதாமல் உள்டப்பியில் உரையாடல் நிகழ்த்துபவர்களை ப்ளாக் செய்து கொண்டிருக்கிறேன். நடப்பு வெளியிலேயே நட்பை நிகழ்த்தலாமே. இதை அன்பான அறிவிப்பாக எடுத்துக்கொள்ளவும்

1960. அதிகமும் அணுகாது விட்டும் அகலாது நிற்கும் நட்புகளே நீடித்திருக்கின்றன.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்.


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்














2 கருத்துகள்:

  1. முத்தக் கவிதை அருமை...

    எஜமான் பின்னாடி ஓடும் நாயின் மன நிலை// வாவ்...

    மழைக் கவிதையும் ரொம்ப நல்லாருக்கு

    தல தல என்றதும் அஜீத் என்று நினைத்துவிட்டோம்....கமல்ஹாசனா...

    அனைத்தும் அருமை...ரசித்தோம்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி & கீத்ஸ் :))))))))))))))))

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)