செவ்வாய், 11 டிசம்பர், 2018

வான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.

1981. வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும் இன்றைய காலையை உயிர்ப்பித்தார்கள். ராய சொவின் பாரதி பரலியாருக்கு எழுதிய கடிதம் நூற்றாண்டுக்குப் பின்னும் ஒளிர்கிறது.

1982. சுயத்தை திருப்திபடுத்தவே எழுதுகிறோம். பசி தீர்வதாயில்லை.  ஆன்ம அமைதிக்குள் ஒடுங்கும் நேரம் சாத்யமாகலாம்.  அப்போதும் அது நீராயும் காற்றாயும் நிரம்பி இருக்கும்.

1983. Senthil ஒரே நாள்ல சாட்டர்டே போஸ்ட்/ஜாலிகார்னர் ஆல்பத்துல நூத்திப்பதினோரு போஸ்ட்லயும் லைக்ஸா. கிறுகிறுன்னு வருது. விறுவிறுன்னு எழுதி அனுப்பவும்

1984. கார்த்திக் உங்க ஃபோட்டோ போலவே வரையப்பட்ட கோலம்.

1985. ஹாஹா ட்ரெண்டிங்ல ஒரு சுவாரஸியமான விஷயம் . ( ஃபேமஸ் ) எழுத்தாளரால் ப்ளாக் செய்யப்பட்டோர் குழுன்னு ஒரு பேஜ் இருக்கு.
என்னவெல்லாம் ஆரம்பிக்கிறாங்க. . மிடில.


1986. இங்கேதான் சுற்றுலா. பட் ஈவினிங் வரேன். I'LL BE BACK HAHA

1987. சுகன்யா கமலிடம் பேசும் வசனம் இந்தியனில் - எனக்கு பயமா இல்லை ஏன்னா நீங்க கூட இருக்கீங்களே.

TERMINATOR - ARNOLD - I'M BACK.

தனுஷ் - என்ன மாதிரி பசங்கள பாத்தவுடனே பிடிக்காது. பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். ( படம் தெரில )

-- இவை எனக்குப் பிடிச்ச வசனங்கள். உங்களுக்குப் பிடிச்ச வசனத்தை படம் ஆக்டர்ஸ் பேரோட போடுங்க மக்காஸ்.

1988. வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் வி எல் பி ஜானகியம்மாள் கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றச் செல்லும் சுசீலாம்மா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். விழா சிறப்புற வாழ்த்துக்கள்

1989. வாசிப்பை நேசிக்கச் செய்து எழுதுவதையும் நேசிக்கச் செய்த அன்புள்ளம் உங்களது. இன்று எனது பற்றுக்கோடாக இருக்கும் எழுத்தை முன்பே கரம் பிடித்துக் கொடுத்தவர் நீங்கள்தான் அம்மா. இன்னும் பலர் வாசிப்புக்கும் படைப்புலகுக்கும் கட்டாயம் வருவார்கள். உங்கள் கருத்துக்கள் பலருக்கு ஊட்டமும் ஊக்கமும் அளிக்கும்.

1990. வான்படித்துறையில் கலைகளைத்
தேய்த்துக் கொண்டிருக்கிறது நிலவு.
நடுச்சாமத்திலும் கொக்கரக்கோவிடுகின்றன
சில சேவல்கள்.
இரும்புச் சங்கிலிகளின் இசைவான சத்தமும்
சாட்டைக் குரலும் உறைந்து கிடக்கிறது லாயம்.
மறந்தே போய்விட்ட ஆரோக அவரோகணத்தை
ஊம் ஊமென்ற ஓங்காரத் தொனியில்
 உசுப்பேற்றிக் கொண்டிருக்கின்றன
வெண்டிலேட்டர் புறாக்கள்.

1991. சொ. வினவினைதீர்த்தான் அண்ணன் அவர்கள் வாசகசாலை நிகழ்வில் நன்னூல் சூத்திரம் ஒன்றை எடுத்துக்காட்டிப் பேசினார்கள்.
கார்த்திகேயன் பள்ளியைத் திறம்பட நடத்தி வரும் லெக்ஷ்மி, தென்றல், ஸ்வேதா ஆகிய முப்பெரும் சகோதரியர்க்கு வாழ்த்தும் நல்கினார்கள்.

1992. தேன் இனிக்கத்தான் செய்கிறது. ஔஷதத்தின் வீர்யமோ என்னவோ நாவடியில் ஒரு வெண்ணிலைக் கசப்பு.

1993.கிரஷர் ஜல்லிகளை குவாரிலேருந்து ஒரு லாரி நிறைய இறைச்சுட்டு ரோடு போட்டோம்கிறாய்ங்க.  டூ வீலர் ஃபோர் வீலர் டயர் எல்லாம் கதறுது. ஒருவேளை டயர் கம்பெனிகளோட டை அப் வச்சிருப்பாய்ங்களோ
#காரைக்குடி_நூறடிரோட்டின்_கதி.

1994. செம ஆட்டம் செல்லக்கிளி . ஆமா உன் அபிநயத்துக்குக் குறுக்கே நான் ஏன் ஓடி வரேன்



1995. MAX PAYNE, AGE OF EMPIRES இதெல்லாம் யாருக்காச்சும் ஞாபகம் இருக்கா :)
#மகனுக_விளையாடுன_பிசிகேம்:)

1996. ராக், அண்டர்டேக்கர், ட்ரிபிள் ஹெச்,ரிகிஷி, ஸ்டோன்கோல்ட்,கோல்ட்பர்க்-90’S KIDS ATROCITIES:)

1997.Small wonder, dexter, popeye, blossom, powerpuff girls லேருந்து ஃப்ரெண்ட்ஸ், ஆஃபீஸ்னு- யூஎஸ் சீரியல்களுக்குப் போயிட்டாங்க பசங்க. நாமதான் வளராம இருக்கோம் ;)

1998. அப்பு கர். கருடன்ல பசங்க. :) நியூ டெல்லி..

என்னோட கூகுள் பங்களிப்புல வியூஸ்ல முதல்ல இருக்க ஃபோட்டோ. 2017 இல் இருந்து 102,825 வியூஸ். :)
Appu Ghar
13/04/17
102,825
<3 p="">
<3 p="">
1999. பராக்கு பார்க்குறது ஃபேஸ்புக்குலயும் கூட.. அட 5 நிமிஷம் எட்டிப் பார்த்துட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு ஓடலாம்னு வந்தா.. 55 நிமிஷம் ஆச்சு.. சுட்டு வச்ச தோசை பாதி கருவாடாகி பாதி தேங்கா சட்னில போட் மாதிரி மூழ்கிக் கிடக்கு. விடு ஜூட்

2000. சத்யா அசோகன் - என் செல்லமே தலைநகரிலிருந்து நீ கொடுத்தனுப்பிய ஸ்வஸ்திக் வீடு தேடி வந்தது தங்கமே <3 p="">

<3 p="">

<3 p="">

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்.


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
















100. வான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)