புதன், 28 நவம்பர், 2018

விவசாயக்கூட்டமைப்பு சபையின் அவசியமும் வாசகசாலையின் அத்யாவசியமும்.

1961. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா. தென்னை வாழை இதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கலாம், எடுத்திருந்தா ஒரு பங்குப் பணமாவது திரும்பக் கிடைக்கும் என்பது தோப்பு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்குமா. விவசாயிகள் நிலை கவலைக்குரியது. இவை நிலைபெற மூன்று நான்கு ஆண்டுகள் ஆகலாமாம். அதுவரை எதைப் பற்றிக்கொண்டு இவர்கள் வாழ்வார்கள். மத்திய அரசும் மாநில அரசும் களப்பணியை முடுக்கிவிட்டு நிவாரணம் மேற்கொள்ளவேண்டும். தகுந்த உதவித் தொகையும் சில ஆண்டுகள் வழங்க வேண்டும்.

#எல்லா விவசாய கிராமங்களிலும் விவசாய கூட்டமைப்பு சபை வேண்டும். அது பயிர்பாதுகாப்பு, விதை நேர்த்தி, உரம், பூச்சிமருந்து விழிப்புணர்வு, நீர் உபயோகம், இன்சூரன்ஸ் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் அமைய வேண்டும். மேலும் அரசே இவர்களின் நிலங்களின் அளவு பொறுத்தும் பயிரிடும் பயிர்கள்/செடிகள்/மரங்கள் பொறுத்தும் மிகக்குறைந்த அளவு இன்சூரன்ஸ் தொகை பிடித்து அதை அவர்கள் நஷ்டப்படும்போதும் ( MASSACRE ) இயற்கைப் பேரிடர் நேரும்போதும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். 

#இது எனது கோரிக்கை. 

1962. வண்ணமயமான மதியப்பொழுது
என்னை நிறைத்திருந்தது.
சூரியக் கலவையில்
இறகுகள் ஒளிர்ந்திருந்தன.
பூமியின் பசுங்குளிர்
நாசியெங்கும் நிறைய
பறக்கத்தொடங்கி இருந்தேன்.
தேன்நிறைந்த பூவில்
செம்மாந்து ஓய்வெடுத்தேன்.
திப்பியாய் ஒட்டிக்கொண்டன கால்கள்.
பறக்கத்துடிக்கும் மனதை
பசையாய்ப் பிடித்திருக்கின்றன இதழ்கள்.
சூரியன் கவிழும் நேரத்துக்காய்க்
காத்திருக்கிறேன்
குவியும் இதழ்களுக்குள்
உயிர் உணவாய்ச் சிறைப்பட

1963. உள்ளன்போடு பழகுபவர்களை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். நம் உயிர்ப்பை நம்மைவிட நேசிப்பவர்கள், நம் இருப்பைக் கொண்டாடுபவர்கள் அவர்களே. !


1964. உடம்பு சரியில்லைன்னாலும் ஹார்ட்ஸ் . ஓகேன்னாலும் ஹார்ட்ஸ் விடுறாங்க. இந்த ஆஸ்வின், மேனகா, ராணிய வச்சிட்டு சீரியஸா ஒரு பதிவு கூட போட முடில.

1965. கஜா ஜகா வாங்கிட்டான் போல தோணுது

1966. தண்ணென்றிருக்கிறது
தரைத் தடாகம்.
தாமரையாய்த் துயின்றிருக்கிறேன்

1967. நெட் வர்றான் போறான், கரண்ட் வர்றான் போறான். கஜா என்னய்யா நடக்குது இங்கே

1968. அமேஸான் அடிமைகள் குடும்பம். வாரம் ரெண்டு பொருளாவது வந்து இறங்கும். செல்ஃபோன், ஹெட்ஃபோன், வெஜ் கட்டர், மிக்ஸி , கார் கவர், டூவீலர் கவர், டூல் ஸெட் etc. இது மழை பெய்யும்போது வண்டில மாட்டன்னு ஆர்டர் பண்ணாரு. வீட்ல ஒவ்வொரு திசையா கெடந்துச்சு. இப்போ வாஷிங் மெஷின் மழையில நனையாம இருக்க மறைப்பா வச்சிருக்கேன். இனி எதாவது ஆர்டர் பண்ணா எங்க வைக்கிறது .

#ஆன்லைன் ஷாப்பிங் மோஹிகள்.

1969. காரைக்குடியிலும் திடீர் திடீரென மழை, கரண்ட் கட்.
நிறைய பிஞ்சு மரங்கள் வீழுந்தும் பெரிய மரங்கள் முறிந்தும் கிடக்கின்றன.
எங்கள் அபார்ட்மெண்டில் மூன்று ஓவர் ஹெட் டாங்க்
அதையும் செக்யூரிட்டி எப்போதும் மோட்டார் போட்டு நிரப்பி வைத்து விடுகிறார் . எல்லா வீட்டிலும் இன்வர்டர் உண்டு. கரண்ட்
தண்ணீர்ப் பிரச்சனையால் ஊரில் இருக்கும் அனைத்து உறவினர்களும் அக்கம் பக்கம் வீடுகளில் நிறைந்து வெளியே எட்டிப் பார்த்தாலே ஒரு விருந்தினர் மாளிகை எஃபக்டில் இருக்கிறது.


1970. பட்டாஸைப் போல் பிடிக்கும் நட்பு
மத்தாப்பாய்ச் சொரிந்து புஸ்வாணமாகி விடுகிறது.
அல்லது வெடித்துத் தீர்ந்து விடுகிறது.
விதைபோல் வீழும் நட்பு இடம் பெயர்வதுமில்லை.
விட்டுப் போவதுமில்லை.
விருட்சமாய் செழித்தோங்குகிறது.

1971. போகன் "FACE OFF " போல அட்டகாசம். JOHN TRAVOLTA. & NICHOLAS CAGE போல் அரவிந்த்சாமியும் ஜெயம் ரவியும் செம நடிப்பு. Sweet surprise !!! Director லெக்ஷ்மணாம். ஹேட்ஸ் ஆஃப்.

1972. நல்லதொரு ஆரம்பம். வாழ்த்துகள் வாசகசாலை & கார்த்திகேயன் பள்ளி.
புதியவர்கள் சிறப்பாகப் பேசினார்கள். டாக்டர் சுநீலின் வாழ்த்துரையும் கார்த்திகேயன் பள்ளியின் தலைமை ஆசிரியை லெக்ஷ்மி & தாளாளர் ஸ்வேதவின் உரையும் சிறப்பாக இருந்தன. வாசிப்பை விரிவுபடுத்தும் வாசகசாலையின் பணி அத்யாவசியமானது.


1973. My ever fav sufi song - KHWAJA MERE KHWAJA.
ஒரு கட்டத்தில் மனதும் நடனமிட ஆரம்பிக்கும் அற்புதம் நிகழும். மெல்ல மெல்ல ஆனந்தமும் அமைதியும் ஆட்கொள்ளும்.

1974. இதெல்லாம் தெரியாதான்னு கேக்காதீங்க.
ஏதோ தோணுச்சு பழைய பேப்பரை எல்லாம் எடுத்து அப்லோடிட்டேன்.
தினம் ஒரு போஸ்ட் போடாட்டி கை நடுங்குது ஹாஹா. பொறுத்துக்குங்க மக்காஸ். :) :P

#வேற்றுப் பொருள் வைப்பணி.

1975. கடற்கரையோரங்களில் பனையை வெட்டியதால் ஏகப்பட்ட அழிவாம். பனை இருந்தா புயலைத் தாக்குப் பிடிச்சிருக்குமோ.. ஹ்ம்ம்.

1976. ஒளியின் வழியில்

1977. விளம்பரத்தில் இவரைப் பார்த்து மீம்ஸ் போட்டு பலர் கிண்டலடித்திருக்கிறார்கள். இவரது தன்னம்பிக்கையான செயல்பாடு என்னைக் கவர்ந்திருக்கிறது. மக்கள் துயரில் பங்கெடுத்து நிதிகொடுக்கும் இவர் என் மதிப்பில் இன்னும் உயர்ந்துவிட்டார். மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு . வாழ்க வளமுடன்.

#சரவணா ஸ்டோர்ஸ் அதிபர்.

1978. அருமையான மதிப்பீடு. அரும்பு கொண்டது பெரும்பீடு.

#சுசீலாம்மாவின் யாதுமாகி பற்றிய விமர்சனம் அரும்பு என்ற இதழில் வெளியாகி உள்ளது.

1979 .அரவம் வறண்ட செவியை
உயிர்ப்பிக்கிறது குரல் மழை.
தூறலின் முன் நாகபடமாய்
விரிகிறது மனப்பிடாரம்.
பெருங்கருணை மூழ்கடிக்குமுன்
ஒளிர்ந்தாடுகிறது மாணிக்கவிழி.
நெளிந்தோடிப் பிணைகின்றன
சுழலுக்குள் சர்ப்பங்கள்.
புணர்வளைவு நெளிவுகளால்
அதிர்கிறது செவிக்குளம்.

1980. தூக்கம் சிதறிய திட்டுக்களில்
விரல்களின் வழி சுழிந்தோடுகிறது
வார்த்தை நதி.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்.


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்















99. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)