புதன், 19 செப்டம்பர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.

1041. சிவபதவி/ சிவபதவி வண்டி - ஒருவர் இறந்ததும் அவர் சிவபதவி ( சிவனின் திருவடி ) அடைந்தார் என்று கூறுவது வழக்கம். சிவபதவி வண்டி என்பது அவரது பூத உடலை மயானம்/ மின் மயானம் / சுடுகாடு / இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வண்டி. 

1042. கேதம் - மரணம், துக்கம், சாவு, இறப்பு, இழவு, ஈமக் கிரியை. 

1043. துட்டி, துஷ்டி - துக்கம், இறப்பு, விபத்தின் மூலம் மரணம் போன்ற துக்க நிகழ்வு. 

1044. சாரித்தல் - துக்கம் விசாரித்தல், இழவுகார வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிப்பது. போகும்போது சொல்லிக் கொண்டு போக மாட்டார்கள். ( அதாவது போயிட்டு வரேன் என்றோ வரேன் என்றோ சொல்லிக் கொண்டு போக மாட்டார்கள். ) சொல்லிக் கொள்ளாமல் போவார்கள் அல்லது போறேன் என்று சொல்லிப் போவார்கள். ( அடுத்தும் அவர்கள் வீட்டில் துக்கம் திரும்ப வந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம் ) .

1045. பதனப்படுத்துதல் - இப்போது எல்லாம் ஐஸ் பாக்ஸ் வந்துவிட்டது. அப்போது எல்லாம் இறப்பு நிகழ்ந்ததும் குளிப்பாட்டி விபூதி பூசி சிவப்புத்துணியால் உடலைச் சுத்தி கை காலைக் கட்டி வைப்பார்கள். மகன் மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் வர தாமதமாகும் என்றால் உள்ளுறுப்புகள் காற்று ஏறி ஊதிப்போகா வண்ணம் மண்ணெண்ணெய், உப்பு ஆகியவற்றைக் கொண்டு கிட்டித்து  நவதுவாரங்களை அடைப்பார்கள். கண்கள் மூடியிருக்க சந்தனம் வைத்து, காதிலும் மூக்கிலும் பஞ்சால் அடைப்பார்கள். சுற்றிலும் பன்னீர் தெளிப்பார்கள். சில இடங்களில் விராட்டியும் வைப்பதுண்டு. தெற்கில் தலைவைத்துப் படுக்க வைத்துத் தலைமாட்டில் ஒற்றை முகமாக குத்துவிளக்கை ஏற்றி வைப்பார்கள். 

1045. தண்டக்காரன் - இறப்பு நிகழ்வுகளின் போது இறப்புச் சடங்குகள் , ஈமக் கிரியைகள் செய்ய உதவுபவர். சங்கூதுதல், பாடை கட்டுதல், தலையில் எண்ணெய் சீயக்காய் தொட்டு வைக்கச் சொல்லுதல், குளிப்பாட்டுதல், பட்டம் சுத்தச் சொல்லுதல், பந்தகால் நடுதல், இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லுதல். 

1046. பச்சை குத்துதல் :- இறந்தவரின் மூத்த மகள் குந்தாணியில் பச்சை நெல்லையும் அரிசியையும் போட்டு சாஸ்திரத்துக்கு இரண்டு மூன்று தரம் உலக்கையால் குத்திச் சுளகில் புடைத்து அரிசியை எடுத்து வைத்தல். இது வாய்க்கரிசி போடப் பயன்படும்.

1047. பாய் சுருட்டல் :- இறந்தவர் படுத்திருந்த ( பர்மா பாய் ) பாயை உடலை எடுத்துச் சென்றதும் அவரின் மூத்த மகள் அல்லது இளைய மகள் அல்லது மகள் வயிற்றுப் பேத்தி பாயைச் சுருட்டி வைப்பார். உடனே வீட்டைக் கழுவி விடுவார்கள். 

1048. பந்தக்கால் நடுதல். :- நான்கு மூலையிலும் சாணி வைத்து பந்தக்காலை பங்காளிகள் நடுவார்கள். அதன் மேல் துணியால் மூடப்பட்டிருக்கும். இதன் நடுவில் இறந்தவரைக் குளிப்பாட்டிக் கிடத்துவார்கள். 

1049. பட்டம் சுத்துதல் :-  தாய பிள்ளைகள், பங்காளிகள் பிள்ளைகள் அனைவரும் பட்டம் சுத்துவார்கள். பந்தக்காலைச் சுற்றி மூன்று முறை வந்து விழுந்து கும்பிட்டு பாதத்தைத் தொட்டு வணங்கித் திருநீறு பூசிக்கொள்ளுதலே பட்டம் சுற்றுதல். அது கல்யாணச் சாவாக இருந்தால் இறந்தவரின் பிள்ளை குட்டிகள் பேரன் பேத்திகள் பட்டுக் கட்டிக் கொண்டு சுத்துவார்கள்.  


1050. கோடி போடுதல் :- மனைவி இறந்தால் கணவன் மேல் வேட்டி போட்டுகொண்டு பட்டம் சுற்றுவார். கணவன் இறந்தால் மனைவியின் தாய்வீட்டில் அவரது அப்பா அல்லது அண்ணன் அல்லது பங்காளிகளில் ஒருவர் தோளில் கோடியாக எடுத்த வெள்ளைத் துணியைப் போட்டுக் கொண்டு பட்டம் சுற்றி மூன்றாவது சுற்று முடிந்ததும் அவரது ( பெண்ணின் )  தோளில் போடுவார். இது முடிந்தது அனைவரும் இடுகாடு சென்றதும் இவரைப் போல கணவனை சாகக் கொடுத்த பெண்கள் இவரது தாலியை வாங்கிப் பாலில் போடுவார்கள். அதன் பின் அவர் தலை முழுகுவார். 

1051. மணி அடித்து சங்கூதுதல்:- இறந்தவரை எடுத்துச் செல்லுமுன் தண்டக்காரர் மணி அடித்துச் சங்கு ஊதுவார். 

1052. கட்டதளம் - இடுகாடு, மயானம், மின் மயானம்,  சுடுகாடு., உடல் கட்டை வேகும் தளம். 

1053.  காடேத்து - இடு/சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லல்.

1054. தீச்சட்டி - இறந்தவரின் மூத்த மகன் கொள்ளி வைக்க தீச்சட்டியைச் சுமந்து இறந்தவரின் பூத உடலுடன் இடுகாடு செல்வார். 

1055. சிவப்பு மாத்து விரித்தல். - இதை மிகவும் பெருமையாகக் கருதுவார்கள். இறந்தவர் வயதில் மிக மூத்தவராக இருந்து அவரது பெண்டு பிள்ளைகள் எல்லாம் ஒத்துமையாக இருந்து அவரது சாவு கல்யாணச் சாவாக ( வாழ்ந்து அனுபவித்து நிறைவுடன் )  நிகழும்போது வீட்டில் அல்லது உத்தரகிரியை மண்டபத்திலிருந்து , அல்லது இழவு வீட்டில் இருந்து மயானம் அல்லது மின்மயானம் வரை ரோட்டில் சிவபதவி வண்டி செல்லும்போது குடிமைத் தொழிலாளர்கள் மூன்று நான்கு சிவப்புப் புடவைகளை மாத்தி மாத்தி விரித்துச் செல்வார்கள். இந்தச் சிறப்பைச் செய்ய ஆகும் செலவை இறந்தவர்களின் மகள்கள் கொடுப்பார்கள். தங்கள் பெற்றோர் தங்களுக்கு எவ்வளவு ஓவியம் என்பதைக் காட்ட. 

1056. கல்லெடுப்பு - கல்லெடுத்துப் பால் ஊத்துதல். ஒருவர் இறந்து இரண்டாம் நாள் மயானம் சென்று அஸ்தியை எடுத்து வந்து புனித நீர் நிலைகளில் கரைத்தல். அதை எடுக்கச் செல்லும்போது எரித்த இடத்தில் பால் ஊற்றுவார்கள். சிலர் அஸ்தியைக் கடலில் கரைப்பார்கள். சிலர் ராமேஸ்வரம், காசி ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று உரிய முறைப்படி பூஜை செய்து கரைப்பார்கள். 

1057. சவண்டி திதி, தலைத்தெவசம் :- சவண்டி  என்பது ஐந்தாம் நாள் காரியம். இதற்கென்று உள்ள ஐய்யரைக் கூப்பிட்டு சவண்டி, திவசம், திதி கொடுப்பார்கள். உலோகாயுத பந்தங்களில் இருந்து விடுபட்டு முன்னோர் மோட்ச உலகம் செல்ல சடங்குகளைச் செய்வார்கள். தலைத் தெவசம் என்பது ஓராண்டு முடிவில் கொடுப்பது, திதி என்பது வருடாவருடம் அவர்கள் இறந்த மாதத்தில் வரும் (அவர்கள் இறந்த) திதியில் கொடுப்பது.  மாதாமாதம் அமாவாசை அன்றும் தர்ப்பணம் செய்வார்கள் சிலர். மாளய அமாவாசை, தை அமாவாசை விசேஷம், அன்று கொடுத்தால் ஒரு வருடமாக காத்திருக்கும் முன்னோர்களுக்கு உணவும் சாந்தியும் அளித்த புண்ணியம் உண்டு. பச்சரிசிமாவில் எள்ளுப் போட்டுப் பிசைந்து மூன்று பிண்டங்களாக ஊரணிக்கரை அல்லது ராமேஸ்வரம் போன்ற கடல் ஸ்தலங்களில் தீர்த்தமாடிப் பிண்டம் அளிப்பது உண்டு. 

1058. சாகக் கொடுத்த ஆச்சி, வெள்ளைச்சீலைக்கார ஆச்சி - கணவன் இறந்ததும் அக்காலங்களில் ஒற்றை வெள்ளைப் புடவையைத்தான் தட்டுச் சுற்றாக அணிந்து கொள்வார்கள். கணவன் இறந்ததும் அவர்களைக் குறிப்பிட சாகக் கொடுத்த ஆச்சி என்றும் வெள்ளைச் சீலைக்கார ஆச்சி என்றும் சொல்வதும் உண்டு. 
  
1059. அடிப்பாதரவே - பெற்றோர் ( ஒருவர் ) காரியங்களை முடித்தபின் தலை மழித்து வீட்டுக்கு வந்து தாயையோ தந்தையையோ அல்லது மூத்தோர் ஒருவரையோ வணங்கி விபூதி பூசி அமர்வார் மூத்த பிள்ளை. இம்மாதிரி தாய் தகப்பனில்லாத சிறு பிள்ளைகளின் நிலைகண்டு இழிவரல் கொண்டு அல்லது அந்த சாகக் கொடுத்த மனைவியின் நிலை கண்டு வருந்திச் சொல்லும் வார்த்தை அடிப்பாதாரவே. 

பொதுவாக எடுத்து நடத்துவோர் யாருமில்லாமல், அநாதையாக, நிர்க்கதியான, அநாதரவான, நிராதரவான விஷயம் ஒன்றைப் பார்த்துப் பரிதாபப்பட்டுச் சொல்லும் வார்த்தை அடிப்பாதரவே. = ஆதரவு அற்றது. 

1060. அத்தறுதியோட - அம்மட்டோடு, அத்துடன். அவ்வளவுதான். அத்தறுதியோட நிறுத்திக்க அல்லது அத்தறுதியோட விட்டுட்டான் என்றால் அநாதரவாக விட்டுவிட்டான் என்றும் சொல்லலாம். அல்லது அதுதான் இறுதி, அத்துடன் முடிந்துவிட்டது விஷயம் என்றும் கொள்ளலாம்.   


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.







104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.







113.

டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)