திங்கள், 9 ஏப்ரல், 2018

போர் விவசாயமும் அவள் விருதுகளும்.

1761. 600 கிமீ பயணத்துல ஒரு கடை கூட திறந்திருக்கவில்லை. தமிழர்களின் ஒற்றுமை அற்புதம்.

1762. சாலியமங்கலம். ஒரு காலத்துல வயல் இருந்த ஊர். இன்னிக்கும் பயிர்பச்சை இருக்கு போர் உபயத்துல. வயல்தான் இல்ல.

1763. மன்னார்குடி வீட்டுல லேசா மழை பேஞ்சாலே ஊத்தெடுக்கும். இன்னிக்கு வாய்க்கால் வறண்டு கிடக்க போர் விவசாயம். காலக் கொடுமை.

1764.எதிரிகளே இல்லாமல் போவது அபாயகரமான நிலை. தேக்கத்திற்கு வழிவகுக்கும்.

1765. வருஷப் பிறப்பன்று எண்ணெய் தேய்ச்சு தலை முழுகுறது தமிழ் கலாச்சாரமா.. சொல்லவே இல்ல.. ;) ( நல்லா சொல்லுறாய்ங்கய்யா டீடெயிலு :)

#மீராஹெர்பல்#அவள்விகடன்அவார்ட்ஸ்


1766. முழுசுமே விருது குடுக்குறவங்களும் வாங்குறவங்களும்தானா.. பார்வையாளர்கள் யாருமே இல்லையா ;)

#அவள்அவார்ட்ஸ்

1767. இத்தன குத்துப்பாட்டும் டான்ஸும் எந்த ஜினிமாவுலயும் கூட பார்த்ததில்லை ;)

#அவள் அவார்ட்ஸ்

1768. அவள் அவார்ட்ஸ்மூலம் சில பழகிய ஆளுமைகளையும் பல புதிய சாதனையாளர்களையும் சிறப்பித்த அவள் விகடன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் .ஹேட்ஸ் ஆஃப் !!!

#அவள்விகடன் அவார்ட்ஸ்

1769. ஆயிரம் தரம் போஸ்ட் பண்ணாலும் ஏன் திரும்பத் திரும்பப் போஸ்ட் பண்றேன்னு கேட்டதில்லை கூகுள். பெரியய்யா.. பெரிய மனசுய்யா உனக்கு.. நல்லாஇரு.. #ப்லாக்போஸ்ட்மேனியா. ( ஆனா கொஞ்ச நாளா பின்னூட்டம் டாஷ்போர்டுல ஆயிரம் மட்டும் காட்டுது. மிச்சத்தைக் காக்கா தின்னுடுச்சா ??! )

1770. என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பேர் என்னவெனக் கேட்டேன்

ஐயையையோ ஆனந்தமே...

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி.. என் மேலே நிலா பொழியுதடி.. பூவாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே,

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா.. ;) நல்லிரவு வணக்கம் மக்காஸ் :)


1771. பக்கத்து வீட்டுக்காரர்களின்

கொத்துப்பட்டதில்

குற்றுயிரும் கொலையுயிருமாய்த்

துடித்துக்கிடந்த விருட்சத்தை

நானே வெட்டத்துவங்கினேன்.

வீட்டுக்குள்ளிருந்து வந்த

போலியான பரிதவிப்புக்களைப்

பற்றிக்கொண்டு மடிந்தது அது.

விருட்சங்களுக்கான வீடு இதல்ல.

ஒரு வனத்தை சிருஷ்டித்துக்

கொண்டிருக்கிறது என் இதயம்.

கிளைகள் கரம்கோர்த்தெழ

நானும் ஒரு விருட்சமாகிறேன்.

காமதேனுவாம். கற்பகத்தருவாம்.

1772. அதிகமாக சிரிக்கும்போது பெண் அழகாகிறாள். ஆண் அசடாகிறான்.
#கண்டுபிடிப்பு.

1773. தற்போது திருமணமாகும் பெரும்பாலானவர்கள் குழந்தை வேண்டுகிறார்களோ இல்லையோ  எவ்வளவு சொத்து தேறும் என்பதிலேயே கண்ணாயிருக்கிறார்கள்.

# தோழியின்_ புலம்பல்.

1774. வாட்ஸப் வீரர்கள் பெருகிவிட்டார்கள். வாள் வீச்சுகளிலிருந்து ஃபேஸ்புக் தப்பித்துக் கொண்டிருக்கிறது. அப்பாடா ;)

1775. பரஸ்பரம்

1776. Bread veg roll,delma chicken shawerma, kalmane coffee.

1777. Diary kkum number lock ;) ;p

1778. கொஞ்சம் கலகலப்பு. கொஞ்சம் கல்மனே காப்பி. சில நூறு ரூபாய்கள் அவுட் ;)

1779. அவள் விகடன் அவார்டு பெற்ற தோழி தமிழ்நதி ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

1780. அலையடித்துக் கொண்டிருக்கிறது. தொட விரும்பி அருகுவந்து விலகிச் செல்கிறது.

மணல்வீடும் நானும் நனையக் காத்திருக்கிறோம்.

அலைக்குமுன் மழைவந்து உற்சாகமாய்த் தழுவ கரைந்து கொண்டிருக்கிறோம் கடலுள்ளுள் மெல்ல மெல்ல..

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்







2 கருத்துகள்:

  1. 1773. தற்போது திருமணமாகும் பெரும்பாலானவர்கள் குழந்தை வேண்டுகிறார்களோ இல்லையோ எவ்வளவு சொத்து தேறும் என்பதிலேயே கண்ணாயிருக்கிறார்கள்.

    1771.....அருமை..

    அனைத்தும் ரசித்தோம் சகோ/தேனு

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)