திங்கள், 9 ஏப்ரல், 2018

கலகலப்பு - 2 தாறுமாறு. ஒரு பார்வை.



ஹோலிப்பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்ட தமிழ்ப் படம். ஆமா அந்தப் பொடி எல்லாம் சுவாசிச்சா கெடுதல் இல்லையா.. ஒரு லாரி இல்லை. ஒரு கண்டெயினர் முழுக்க கலர் பொடி கொண்டாந்து கொட்டியிருப்பாங்க போல.

டெல்லியில் இருந்தபோது இப்பிடி வண்ணங்களையும் பீச்சாங்குழல்லயும் பலூன்லயும் வண்ண நீரையும் நிரப்பி அடிப்பாங்க. அதுக்காகவே வெள்ளை உடை உடுத்தியிருப்பாக டெல்லிவாலாக்கள். :)

காசியையும் கங்கையையும் அழகா படம் பிடிச்சிருக்காங்க. அதே சமயம் அந்த  உயரமான மேன்ஷன் (?)/ சத்திரம் நாட்டுக்கோட் சத்திரத்தை ஞாபகப்படுத்துது. காரைக்குடிப் பக்க வீடுகளும் ரோடுகளும் வெகு அழகு.

ஹிப்ஹாப்பின் பாடல்களில்  ஒரு குச்சி ஒரு குல்பி பாடலை விட காரைக்குடி இளவரசி பாடல் ரொம்ப பிடிச்சுப் போச்சு ( எங்கூராச்சே :) . அந்த ஸ்லிம் & ஸ்லீக் ஹிந்தி ஹீரோயின்ஸின் துள்ளாட்டங்கள் வெகு ஜோர். எனர்ஜி ட்ரிங்க்  விளம்பரம் மாதிரி படம் முழுக்க ஒரே ஆட்ட பாட்டம்தான். அதுனால ரொம்பவே பிடிச்சிருந்தது.

ஜீவா ரொம்ப இயல்பா துறு துறுன்னு நடிக்கிறார். அவர் தங்கையும் தங்கைக்குப் பார்க்கும் மாப்பிள்ளையும் கூட. ஜீவா, ஜெய், சிவா கூட்டணி சூப்பர். அதோடு ராதா ரவி, அந்த அரசியல்வாதி, அவர் மனைவி,  போலி சாமியார், ஞாபக மறதியில் அவதிப்படும் முனீஷ்காந்த்,  அமாவாசை அன்னிக்கு அதகளம் செய்யும் ஆள் என படம் செம விறுவிறுப்பு & காமெடி.

மனோபாலா, நிக்கி கல்ராணி, கேதரின், நந்திதா, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், வையாபுரி, சிங்கம்புலி, சிங்கமுத்து, சந்தானபாரதி, எல்லாருமே பட்டாசு கிளப்பியிருக்காங்க. யு. கே . செந்தில்குமாரின் ஒளிப்பதிவு செம. காசியையும் தமிழ்நாட்டையும் வண்ணவண்ணமா குழைச்சுக் கொடுத்துருக்கார். கண்ணுக்குக் குளுமை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அழகு.

எடிட்டிங்க் ஸ்ரீகாந்த். அவர் மனச கல்லாக்கிட்டு இன்னும் பதினைஞ்சு நிமிசம் க்ளைமாக்ஸ்லயும் நடுவுலயும் வெட்டியிருந்தார்னா படம் ரொம்ப க்ரிஸ்பா இருந்திருக்கும் :)

எல்லாருமே நல்ல செலக்‌ஷன் &  நல்லாவும் நடிச்சிருக்காங்க. அதிலும் ஜீவா எக்ஸ்லண்ட். அந்த நிக்கி கல்ராணியைப் பார்த்தா எனக்கு ஊர்மிளா மடோன்கர் ஏனோ ஞாபகம் வந்துகிட்டே இருந்தார். ஹிந்தி ஹீரோயின்ஸ்கிட்ட ஒரு விஷயம் என்னன்னா எப்பவுமே மலர்ச்சியாவும் பளிச்சின்னும் குறும்போடவும் இருக்குறது.


சன்யாசி தீட்சை வாங்கும் காட்சிகள் புதுசு. வசனம் பல இடங்களில் அபாய விளிம்பில் ஹீரோயின்களின் ட்ரெஸைப் போல பயமுறுத்துச்சு. ஆனால் நல்ல வேளை எதுவும் ஆகாமல் பார்டர்லைனில் குடும்பத்தோடு சேர்ந்து சிரிக்கும்படி தப்பிச்சிது.

கலகலப்பு 1 பார்க்கலை. கலகலப்பு 2 வில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் வசனம் ரசிக்கும்படியாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர் டோஸாகி விட்டது . முடியுமா முடியாதா.. இது ஏதும் சீரியல் பாதிப்பான்னு யோசிக்க வைச்சிருச்சு.

ஏமாத்தாதே ஏமாறாதேன்னு சொல்ல வந்துட்டு.. ஜாலியா ஏமாத்துன்னு தீர்ப்பு கொடுத்துட்டாரு சுந்தர் சி.. காலத்துக்கேற்ற கோலம்.. :) 

படத்துல நடிச்சவங்களே படத்தைக் கொண்டாடித் தீர்க்குறாங்க. வாழ்க்கை ஜாலி நிறைஞ்சதுன்னும் எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்குங்கன்னும் சொல்ல வர்றதாவும் எடுத்துக்கலாம்.

குஷ்பூ தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு - 2 தாறுமாறு.. ரொம்பவே கலகலப்பைக் கொடுத்தது. நன்றி குஷ்பூ & சுந்தர் சி. எல்லாரையும் சிரிக்க வைக்கிறதுங்குறது மிகப் பெரும் சவால்..

ஃபாரம் மாலில் பார்க்கிங் கொஞ்சம் குழப்புது. எனவே காரை பார்க் பண்ணினவுடனே பக்கத்து தூண் அல்லது அதன் நம்பர் எல்லாத்தையும் ஒரு க்ளிக் பண்ணி வைச்சுக்குறது நல்லது. ஏன்னா எந்த ஃப்ளோர்ல பார்க் பண்ணோம் எந்த நம்பர்னு மறந்துடுது. கார் நம்பர் கூட அவசரத்துல ஞாபகம் வர்றதில்லை. சென்னைல இவ்ளோ காரான்னு பிரமிக்கும்படி இருக்கு கார் பார்க்கிங்க். ஷாப்பிங் மால் இருக்கதால மணி நேரக் கணக்கு. மணிக்கு ரூ 30/- ஆ இல்ல 50/- ஆன்னு தெரில.

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. அந்த கல்மனே ப்ளூகிராஸ் ( BLUEGRASS ) காஃபி அற்புதம். வெறுமனே டிக்கட்டுக்கும் கார் பார்க்கிங்குக்கும் காஃபிக்கும் அதிகமில்லை ஜெண்டில்மேன் & உமன் ஒரு நாலு பேர் படம் பார்க்க 2000 /- ரூ வேணும். வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்பாங்க. மனசு லேசாகவும், குடும்பத்தோடு ஜாலியா சிரிச்சு மகிழவும் இத கொடுக்கலாம்னு நினைக்கிறேன். :)

டிஸ்கி:- இந்தப் படத்துக்கு என்னோட ரேட்டிங். நாலு ஸ்டார்.. ****

3 கருத்துகள்:

  1. இந்த வாரம் "SUN" தொலைக்காட்சியில் பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  2. படம் ஓகேயா அப்போ.....பார்க்கலை...எங்கூர்ப்பக்கம் வந்துருக்கானு பார்க்கணும்...

    கீதா: விலைதான் பயமுறுத்துது....ஹும் டிவில போடுறாங்களாமே டிடி சொல்லுப்புட்டார்...அப்ப மிச்சம் தான்...ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  3. அதையும் பார்த்தோம் விட்டு விட்டுப் பார்த்து ரசித்தோம் டிடி சகோ :)

    ஆமாம் கீத்ச் பார்க்கலாம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)