எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 11.

19.

பிள்ளை பிறந்தது கேட்க - குழந்தை பிறந்ததைக் கேட்க

ஆம்பிள்ளையான் பேர் இட்டுக்க - கணவனின் பெயரை வாரிசுக்கு இடுவது

அவ பேரைத்தான் இடோணும் - அவ பேரைத்தான் வைக்க வேண்டும்

பேரிட்டார்கள் - பெயரிடுதல் என்றால் பெயர் வைப்பது, பெயர் வைத்தார்கள்.

வேளார் - குலதெய்வம் கோயிலில் தெய்வத்தொண்டு புரியும் பூசாரி.

படைப்பு வீடு - சாமிக்குப் படைக்க எனத் தனியாக வீடு இருக்கும்.

பூசை வீடு - திருக்கார்த்திகைப் பூசை செய்யும் வீடு.

மலயா ரிப்பனில் போ கட்டுவது - ரிப்பனை பூப் போல முடிவது.

லப்பர் பாண்டு- ரப்பர் பாண்ட்.

சமத்தி - கெட்டிக்காரி

அமயஞ்சமயம் - அவசரத்துக்கு, கை உதவியாய், அந்நேரத்துக்கு

புது நெறம் - மாநிறம் என்பதை புது நிறம் என்பார்கள்.

ஆத்தாப் பொண்ணு சீத்தாப் பழம் - பெண்குழந்தையைக் கொஞ்சுவது. ரங்கம் பழம் என்றால் ஆண்குழந்தையைக் கொஞ்சுவது. சீதாப்பழம் என்றால் பெண் குழந்தையைக் கொஞ்சுவது.

 

20.

பாங்கு மெர்ஜர் - திவாலான அல்லது நிர்வகிக்க முடியாத வங்கி இன்னொரு தனியார் அல்லது அரசு வங்கியுடன் இணைவது.

அடிமொதல் - அஸ்திவாரம், பின்புலம், வீட்டில் இருக்கும் அனைத்துப் பூர்வீகச் சொத்தும், வீட்டையும் சேர்த்து.

நடைமுறைச் செலவு - தினப்படிச் செலவு, மாதாந்திர வருடாந்திரச் செலவுகளும் சேர்த்து.

ரோசிச்சபடி - யோசித்தபடி.

திருவனந்தல் - நகரச்சிவன் கோயில்களில் தினம் நடக்கும் காலைச்சந்தி பூஜை.

கைப்பெட்டி - கணக்கு வழக்கு, மாமப்பட்டு, பட்டில் முடியும் காசு, கணக்கு நோட்டு, நூல்கண்டு, எழுது பொருட்கள் உள்ள பெட்டி.

சாய்வு மேசை - கணக்கு எழுதப் பயன்படும் மேசைப் பலகை.

பேரேடுகள் - மொத்தக் கணக்கு வரவு செலவு அடங்கியது பேரேடு.

ஒட்டுவாரொட்டி - ஒருவரோடு ஒட்டிக்கொள்ளுதல். குழந்தைகள் அம்மாவின் இடுப்பில் ஒட்டிக் கொள்வதை இப்படிக் கூறுவார்கள்.

முருதாடி - முரட்டுப் பெண்.

சீண்ட்ரம் - கோவக்காரி, பொல்லாதவள். சீண்டினால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

பெறாத மகனாக - பெற்றெடுக்காவிட்டாலும் மகனாக நினைத்தல்

அடிப்பாதரவே - கவலை மேலிடக் கூறும் சொல்வழக்கு. அடப்பாவமே என்பது போல்

பிரம்மோத்ஸவம் - கோவிலின் வருடாந்திரத் திருவிழா.

மொறைப்பலகாரம் - திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கும் முறைப் பலகாரம்.- தேன்குழல், முறுக்குவடை, மனகோலம், அதிரசம் இதுபோல்

மக்க பொண்டுக - மக்கள், குழந்தைகள், பெண்டிர். தன்னைச் சார்ந்த, தன் குடும்பம் சார்ந்த மனிதர்கள், குழந்தைகள், பெண்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...