17.
புள்ள கூட்டுதல் - குழந்தை இல்லாதவர்கள் அதிகக் குழந்தை உள்ள
அதே கோவிலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பிள்ளையை சுவீகாரம் செய்து கொள்வார்கள்.
ஆம்பிள்ளையான் பேர் சொல்ல - கணவனின் பேர் சொல்ல வாரிசி வேண்டும்.
வீடு விளங்கோணும் - வீடு விளங்கப் பிள்ளைகூட்ட வேண்டும்.
புள்ள விடுற ஜாதகம் - பிள்ளை விடுற ஜாதகம் என்றால் அந்தப்
பையனுக்கும் ஜாதகத்தில் இன்னொரு தாய் தகப்பனுக்கு மகனாகப் போகவேண்டும் என்ற அமைப்பு
இருத்தல்.
நாளப் பின்ன - பிற்காலத்தில், தன் காலத்துக்குப் பிறகு.
பின்னுன துண்டு - இங்கே பின்னிய துண்டுகள் எல்லாம் ஸ்பெஷல்.
எம்பிராய்டரி வேலைப்பாடு, கன்னுத்துணி, மேட்டித் துணியில் வேலைப்பாடு செய்து அதில்
பட்டி தைத்துப் பிள்ளையைப் போட்டு எடுக்கிக் கொடுப்பார்கள்.
குத்தாலந்துண்டு் - குற்றாலந்துண்டு என்பது குளிக்கும்போது
உடுத்திக்கொண்டு குளிக்கிற துண்டு.
தனதுக்குப் பிள்ளை கூட்ட - தனதுக்கு, தனக்கு
சாமான் சட்டி - பொருட்கள். சீர் பொருட்கள்
கொள்ளலன்னாலும் - மிகுந்த, அளவில்லாத சந்தோஷத்தால் பெருமிதம்
அடைதல்.
மகமிண்டி - மகன்பெண்டிர், மகனின் மனைவி. மருமகள்.
தூரம் கெடந்துட்டா - தீட்டு ஆதல்.
எடசங்கமா - இடை சங்கமா, இடுக்கு, இக்கட்டு.
கல்யாணங்க் கேக்க வாரவுக - கல்யாணத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள்
அதன் பின் கல்யாணம் விசாரிக்க வருவார்கள்.
தாய புள்ளைக - தாய்வீட்டார், பிள்ளைகள், ஒரேகுடும்பத்தைச்
சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பி, அக்கா தங்கையர்.
மக்குவாய் மாதிரி - வாயை மடித்தல், பேசத் தெரியாதமாதிரி,
பேச விருப்பமில்லாதது போல் தோற்றம் கொடுத்தல்.
பொறகாடி -பின்னாடி, பின்னே,
ஒண்ணு ரெண்டு மாத்தையிலே - ஒன்று இரண்டு மாதங்களில்
18.
துட்டக் குட்டி - துஷ்டக் குட்டி
வாய்க்கிலட்டா - வாந்தி எடுக்க வருகிறாற்போல,சுமாராக
மூசு மூசுன்னு - அழும்போது எழும் ஒலி.
ஒஞ்சரிச்சு - ஒருக்களித்து
பதக் பதக்கென்றிருந்தது - பயத்தால் நெஞ்சம் பதக் பதக் என
அடித்தல்.
யாவாரி - வியாபாரி.
பெரண்டு - ஃப்ரெண்டு. நட்பு, சிநேகம்.
கொமைஞ்சிக்கிட்டு - குமைந்துகொண்டு, மனவருத்தத்தால் புழுங்கிக்
கொண்டு
நத்தமான நத்தம் - ரத்தமான ரத்தம்.
கருநாக்கு - நாக்கில் கருப்பு நிறம் காணப்படல்.
வெள்ளந்தி - அப்பிராணி, வெகுளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)