ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 10.

17.

புள்ள கூட்டுதல் - குழந்தை இல்லாதவர்கள் அதிகக் குழந்தை உள்ள அதே கோவிலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பிள்ளையை சுவீகாரம் செய்து கொள்வார்கள்.

ஆம்பிள்ளையான் பேர் சொல்ல - கணவனின் பேர் சொல்ல வாரிசி வேண்டும்.

வீடு விளங்கோணும் - வீடு விளங்கப் பிள்ளைகூட்ட வேண்டும்.

புள்ள விடுற ஜாதகம் - பிள்ளை விடுற ஜாதகம் என்றால் அந்தப் பையனுக்கும் ஜாதகத்தில் இன்னொரு தாய் தகப்பனுக்கு மகனாகப் போகவேண்டும் என்ற அமைப்பு இருத்தல்.

நாளப் பின்ன - பிற்காலத்தில், தன் காலத்துக்குப் பிறகு.

பின்னுன துண்டு - இங்கே பின்னிய துண்டுகள் எல்லாம் ஸ்பெஷல். எம்பிராய்டரி வேலைப்பாடு, கன்னுத்துணி, மேட்டித் துணியில் வேலைப்பாடு செய்து அதில் பட்டி தைத்துப் பிள்ளையைப் போட்டு எடுக்கிக் கொடுப்பார்கள்.

குத்தாலந்துண்டு் - குற்றாலந்துண்டு என்பது குளிக்கும்போது உடுத்திக்கொண்டு குளிக்கிற துண்டு.

தனதுக்குப் பிள்ளை கூட்ட - தனதுக்கு, தனக்கு

சாமான் சட்டி - பொருட்கள். சீர் பொருட்கள்

கொள்ளலன்னாலும் - மிகுந்த, அளவில்லாத சந்தோஷத்தால் பெருமிதம் அடைதல்.

மகமிண்டி - மகன்பெண்டிர், மகனின் மனைவி. மருமகள்.

தூரம் கெடந்துட்டா - தீட்டு ஆதல்.

எடசங்கமா - இடை சங்கமா, இடுக்கு, இக்கட்டு.

கல்யாணங்க் கேக்க வாரவுக - கல்யாணத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள் அதன் பின் கல்யாணம் விசாரிக்க வருவார்கள்.

தாய புள்ளைக - தாய்வீட்டார், பிள்ளைகள், ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பி, அக்கா தங்கையர்.

மக்குவாய் மாதிரி - வாயை மடித்தல், பேசத் தெரியாதமாதிரி, பேச விருப்பமில்லாதது போல் தோற்றம் கொடுத்தல்.

பொறகாடி -பின்னாடி, பின்னே,

ஒண்ணு ரெண்டு மாத்தையிலே - ஒன்று இரண்டு மாதங்களில்

 

18.

துட்டக் குட்டி - துஷ்டக் குட்டி

வாய்க்கிலட்டா - வாந்தி எடுக்க வருகிறாற்போல,சுமாராக

மூசு மூசுன்னு - அழும்போது எழும் ஒலி.

ஒஞ்சரிச்சு - ஒருக்களித்து

பதக் பதக்கென்றிருந்தது - பயத்தால் நெஞ்சம் பதக் பதக் என அடித்தல்.

யாவாரி - வியாபாரி.

பெரண்டு - ஃப்ரெண்டு. நட்பு, சிநேகம்.

கொமைஞ்சிக்கிட்டு - குமைந்துகொண்டு, மனவருத்தத்தால் புழுங்கிக் கொண்டு

நத்தமான நத்தம் - ரத்தமான ரத்தம்.

கருநாக்கு - நாக்கில் கருப்பு நிறம் காணப்படல்.

வெள்ளந்தி - அப்பிராணி, வெகுளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)